11.08.2012.
யாழ் மாவட்டத்திற்கான சம்பத் வங்கியின் தேர்வுப் பரீட்சை சம்பத்
வங்கி மனித வள முகாமையாளர் L. லீர கொட மற்றும் பிரதி பொது முகாமையாளர் “மனித வளம்” அருண ஜயசேகர தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இப் பரீட்சையில் சுமார் 200 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
வங்கி மனித வள முகாமையாளர் L. லீர கொட மற்றும் பிரதி பொது முகாமையாளர் “மனித வளம்” அருண ஜயசேகர தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இப் பரீட்சையில் சுமார் 200 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
பொதுவாக நாடலாவியரீதியில் சம்பத் வங்கி வலையமைப்பில் தமிழ் பேசும் ஊழியர்களின்
எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே காணப்படிகிறது என சம்பத் வங்கியின் பிரதி பொது
முகாமையாளர் “ மனித வளம்” கவலை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
தமிழ் பேசும் ஊழியர்களின் குறைவை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ் பேசும்
மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு அப்பிரதேச சம்பத்
வங்கி கிளைகளில் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
வழமையாக இப் பரீட்சை கொழும்பிலேயே நடாத்தப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பரீட்சார்த்திகளின் நலன் கருதி முதல் முதலாக யாழில் இன்று நடாத்தப்பட்டது.
ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ந்து சம்பத் வங்கிக்கான நேர்முகப் பரீட்சை
நடாத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக