11.'08.2012மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும்
சம்பள படிகள் இதுவரையில் வழங்கப்படாமை தொடர்பில் மாணவர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
வழமையாக 25ஆம் திகதி மாணவர்களுக்கு இந்த வாழ்க்கைச்செலவு படிகள்
வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையில் சென்ற மாதச்சம்பளம் தமக்கு
வழங்கப்படாமையினால் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும்
தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த நிலையேற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கேட்டால் சாக்குப்போக்கு கூறிவருவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய பிரதேசங்களில் இந்த சம்பளம் குறித்த திகதிகளில் வழங்கப்பட்டு வருகையில், மட்டக்களப்பில் மட்டும் தாமதம் ஏற்படுவதன் காரணங்கள் தமக்கு தெரிவிக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடுப்பனவுகள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தாதிய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக