siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை வீணாக்கும் சுவிட்சர்லாந்து

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சுவிட்சர்லாந்தின் மத்திய தொழில்நுட்பக் கல்லூரியும் (சூரிச்), பேசெல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மக்கள் வீணாக்குவது தெரியவந்தது. இதன் மூலம் சுவிஸில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 320 கிராம் உணவு வீணாகின்றது.
Food waste.ch என்ற அறக்கட்டளையும் WWF என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் இந்த ஆய்வை நடத்த உதவியது.
WWF என்ற அமைப்பு ஒக்டோபர் 16ம் திகதி கொண்டாடப்படும் உலக உணவு நாளை ஒட்டி ஓர் அறிக்கை வெளியிட்டதில், ஒவ்வோர் ஆண்டும் நாம் இரண்டு மில்லியன் தொன் எடையுள்ள நல்ல உணவை வீணாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நுகர்வோரே அதிகபட்ச(45%) உணவை வீணாக்குவதாகக் கண்டறியப்பட்டது.
சமையல் செய்வதில் 5 சதவீதம் வீணாகிறது. தரக்குறைவான பொருட்கள் என்ற காரணத்தால் 30 சதவீதம் தூக்கியெறியப்படுகின்றது.
விவசாயிகள் விளைச்சலில் 13 சதவீதத்தை வீசி விடுகின்றனர். சிலர் காய்கறிகளை மிகவும் பெரியவை அல்லது சரியாக விளையாதவை என்ற காரணத்திற்காக பறித்துக் கீழே போட்டு விடுகின்றனர்.
உணவை வீணாக்குவதால் 500000 கார்கள் உமிழும் கரியமிலப் புகைக்குச் சமமான தீமை ஏற்படுகின்றது.
உணவு வீணாவதைத் தடுக்க சில வழிமுறைகளை இந்த அமைப்பு பரிந்துரைத்தது.
பழைய அல்லது மிஞ்சிய உணவை மீண்டும் பயன்படுத்தவும், உணவை நன்றாக காற்றுப்புகாமல் மூடி வைக்கவும், குளிர்ச்சியான இடத்தில் (குளிர் சாதனப் பெட்டி) வைக்கவும், மொத்தமாக வாங்கிக் குவித்து வீணடிக்காமல் தேவைக்கேற்ப சிறிய அளவில் வாங்கி உண்ண வேண்டும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.