வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
சுவிட்சர்லாந்தின் ஏழை ஒருவருக்குக்
கிடைத் 43 மில்லியன் யூரோவை வழங்க ஆஸ்திரியக் காசினோ மறுத்ததால் இறுதியில் அவர் ஒரு
மில்லியன் யூரோவைப் பெற்றுக்கொண்டார்.
பிரிகென்ஸ் காசினோ என்ற சூதாட்டக் கழகம் சுவிஸ் மாநிலமான செயிண்ட் கேலனின்
எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கான்ஸ்ட்டன் ஏரியில் கிழக்குக் கரையில்
அமைந்துள்ளது. இங்கு பெஹர் மெர்லாக்கு(வயது 27) என்பவர் ஒரு ஆட்டத்தில் 43 மில்லியன் யூரோவை வென்றார். இந்த அறிவிப்பு வந்து சில மாதங்கள் கழிந்த பின்பு அந்தக் கழகம், கணனியில் ஏதோ தவறு ஏற்பட்டு விட்டதாக அறிவித்து அவருக்குப் பரிசுத் தொகையை வழங்க மறுத்தது. உடனே மெர்லாக்கு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதத்துக்கு முன்பே 5 மில்லியன் யூரோ இழப்பீடு தருமாறு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பு அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனால் காசினோவே வெறும் 500000 யூரோவை வழங்கியது. மீண்டும் இந்த வழக்கு யூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். முடிவான தொகை பற்றி இருதரப்பினரும் தெரிவிக்காவிட்டாலும் 1 மில்லியன் யூரோவுக்கு மெர்லாக்கு ஒத்துக் கொண்டதாகத் ஆஸ்திரியாவிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து ஆஸ்திரியாவின் ஃபெல்ட்கிர்க் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளரான ரீன்ஹார்ட் ஃபிளாட்ஸ் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதை உறுதி செய்தார் |
வெள்ளி, 12 அக்டோபர், 2012
சுவிஸ் ஏழை பிரஜையை ஏமாற்றிய ஆஸ்திரிய சூதாட்டக் கழகம்
வெள்ளி, அக்டோபர் 12, 2012
இணைய செய்தி