siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 அக்டோபர், 2012

பாகிஸ்தானில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில்

 
வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
41 பேர் பலி, 100 பேர் படுகாயம்அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரக்ஷாய் பகுதியில் புலர்ந்கெல் என்ற இடத்தில் நேற்று ஒரு காம்பவுண்டு மீது அமெரிக்கா 4 ஏவுகணைகளை வீசியது. அதில், அங்கிருந்த ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் அந்த காம்பவுண்டுக்குள் இருந்து 4 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின. இதற்கிடையில், ஒரக்ஷாயில் முஸ்டி மேளா என்ற இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. ஹசான்சாய் டார்ரா என்ற இடத்தில் கழுதைகள் பூட்டிய வண்டியில் குண்டு வெடித்தது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் மற்றொரு குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த 2 தாக்குதல்களும் 22 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். அமெரிக்க ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பாகிஸ்தானில் உள்ள சிடா நகரில் மார்க்கெட் வெளிப்புறத்தில் குண்டு வெடித்தது. அதில் 12 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயம் அடைந்தனர்.
அங்கிருந்த பல கடைகள் குண்டு வெடிப்பில் அழிந்தன. 4 வாகனங்கள், 2 சைக்கிள் ரிக்ஷாக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. அங்கு ரிக்ஷா நிறுத்தத்தில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ வெடி பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் அங்குள்ள டேரா புக்டி என்ற இடத்தில் சாலையோரம் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் வாகனம் சிக்கி நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு 41 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன