siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 30 மே, 2014

எம்.பிமாருடன் நிஷா தேசாய் கலந்துரையாடல்

 இலங்கை பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுதல், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களின் பங்கு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து...

வியாழன், 29 மே, 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து ஐ.நா. கவனம்

மலேசியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்ததாக குற்றம் சுமத்தி மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியா அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது. பிரச்சாரப் பணிகளுக்காக குறித்த சந்தேக நபர்கள் நிதி திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை நாடு கடத்தும்...

ஞாயிறு, 25 மே, 2014

இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக

 இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கையில் சில இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில்ழ முறைப்பாடு செய்யப்பட்டு;ள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.1978ம் ஆண்டின் அரசியல் சாசனத்தின் 14ம் இலக்க சரத்தின் அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை...

வெள்ளி, 23 மே, 2014

ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்

தாய்லாந்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியில் முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி சுமார் ஒன்பது மாதங்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த போராட்டத்தினால் அந்நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வந்த நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் யிங்லக் ஷினவத்ராவை பதவியிலிருந்து நீக்கியது.அதனையடுத்து நிவட்டும்ராங்...

வியாழன், 22 மே, 2014

முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டு சிறை

எகிப்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். 2011–ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சிகளை அடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அரசு நிதி 125 மில்லியன் எகிப்து பவுண்டுகளை திருடிவிட்டதாக முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த...

புதன், 21 மே, 2014

நைஜீரிய குண்டு வெடிப்பில் 118 பேர் மரணம்

நைஜீரியாவில் இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற  பகுதியிலிருந்து  குறைந்தபட்சம் 118 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய நைஜீரியாவின் ஜோஸ் நகரிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி  இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மிகவும் பரபரப்பாகவுள்ள சந்தைப் பகுதியில் முதலில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையொன்றுக்கு...

திங்கள், 19 மே, 2014

தொடர் மாடியிலிருந்து கீழே விழுந்து பலி

கோட்டே, ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள ஆடம்பரம்பர  தொடர்மாடி குடியிருப்பில் வர்ணம் பூசி கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

சனி, 17 மே, 2014

தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய நைஜீரியா !!

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை கிராம மக்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனிநாடு கேட்டு வரும் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 14ம் திகதி சிபாக் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த 276 மாணவிகளை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தி...

வியாழன், 15 மே, 2014

இறந்தாலும் பாஸ்போர்ட் மூலம் வாழும் ஜேர்மன் மக்கள்

ஜேர்மனியில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை மற்றவர்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததை அடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஜேர்மனி தலைநகரான பெர்லின் இடுகாட்டில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை, கடத்தல்காரர்கள் மூலமாக ஒரே மாதிரி இருக்கும் மற்ற அகதிகளுக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ”ஆபரேசன் ஃப்னரல்”(Operation final)என்ற பெயரில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொலிசார் நியூக்லினில், க்ரொயிட்ஸ்பேர்க் மற்றும்...

வெள்ளி, 2 மே, 2014

சிறையில் வெடிவிபத்து: 150 கைதிகள் காயம்``

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சிறையில் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் 150 கைதிகள் காயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் தொடர்பு அதிகாரி கேத்லீன் கேஸ்ட்ரோ கூறியதாவது:எஸ்கேம்பியா பகுதியில் உள்ள சிறையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில், அந்த கட்டடத்தில் இருந்த 600 கைதிகளில் 150 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்குப் பிறகு கைதிகள் அனைவரும் வேறு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கேத்லீன் கேஸ்ட்ரோ தெரிவித்தார். கடந்த 2 நாள்களாக...

வியாழன், 1 மே, 2014

10 பேர் பலி ரஷிய வெடிமருந்து கிடங்கில் தீ:

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்துக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 ராணுவ வீரர்களும், எட்டு பணியாளர்களும் உயிரிழந்தனர். “”கிடங்கு அமைந்திருந்த இடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீயிலிருந்து கிடங்குப் பணியாளர்களை இரு ராணுவ வீரர்களும் வாகனத்தில் ஏற்றி காப்பாற்ற முயன்றபோது வெடிமருந்துகள் வெடித்து அந்த வாகனம் தீப்பிடித்தது. அதனால், வாகனத்திலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்” என அந்நாட்டு பாதுகாப்புத்துறை...