siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 18 ஜூலை, 2012

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது

18.07.2012  விற்பனை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கணனி உற்பத்தியாளர் என்ற பெயரை லெனோவோ நிறுவனம் இவ்வருடம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிடல், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தல், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவனவே இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த வருடத்தின் 3 ஆம் காலாண்டுப்பகுதியிலேயே லெனோவோ நிறுவனம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய கணனித்தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது.

இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதிகளில் லெனோவோ நிறுவனம் கணனிச்சந்தையில் 14.9 வீதத்தினைக் கொண்டிருந்தது.

இது எச்.பி நிறுவனத்தின் 15.5 வீதத்தினை விட வெறும் 0.6 வீதமே குறைவானதாகும்.

தற்போதைய புள்ளிவிபரங்களின் படி அவ் இடைவெளி 0.2 வீதங்களாகக் குறைந்துள்ளதாகவும் இதனால் உலகின் மிகப்பெரிய கணனி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சீனாவில் ஹுவாயி நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறவுள்ளது.

அத்துறையில் முதலிடத்திலிருக்கும் சுவீடன் நாட்டு எரிக்ஸன் நிறுவனத்தினை ஹுவாயி கூடிய விரைவில் முந்தவுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்


உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு… மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது…. தேனில் விழுந்த மாங்கனி கொடிகாமம் மாந்தோப்பின் பழத்தை விட சுவைக்கிறது.
வவுனியா மண்ணே எங்களின் கண்ணே
வந்தவரை வாழவைக்கும் வன்னிதாயவளே
பண்டார வன்னியன் வாழ்ந்த பூமி இது
பண்பாடு கொண்ட தமிழர் வணங்கும் சாமி
கண்ணான கலைகள் நல்ல தமிழ் கதைகள்
பொன்னான தேசம் எங்கும் பூமழை பொழிந்திட

தொடர்பு பட்ட காணொளிகள்

You might also like

புத்திர பாக்கியம் தரும் முத்தாலம்மன்

18.07.2012
பல வருடங்களுக்கு முன்பு சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதி சிறிய கிராமமாகவே விளங்கியது. ஏரிக்கரை சாலையின் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் ஆலயம் அப்போது தோன்றியதுதான். தற்போது புகழ் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். ஒரு குட்டையில் தான் இருப்பதை வெளிப்படுத்தினாள் அம்மன். அவளை ஆரம்பத்தில் ஓர் ஓலைக்குடிசையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில்தான் அம்மனுக்கு பெரிய ஆலயமே உருவானது.
ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அன்னையின் கோலம் எழிற்கோலம். ஆலயம் வளர்ச்சியடைந்த போது கழுத்தளவு உள்ள இந்தப் பழமையான சிலையின் பின் அம்மனின் முழு உருவச் சிலை அமர்ந்த கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் கட்டப்பட்ட ஒரு கோயிலுக்குத் தயாரான இந்த சிலை சென்னையிலேயே தங்கிவிட்டது ஓர் அற்புதமான சம்பவம். நான்கு திருக்கரங்களோடு, இடது காலை மடித்து, வலது காலை தரையில் வைத்துக் கொண்டு, கைகளில் ஆயுதங்கள், டமருகம், கபாலம் ஏந்தி வீராஸனத்தில் அன்னை காட்சி தருகிறாள். அம்மனின் இந்த அற்புத தரிசனம் காண்போரின் உள்ளத்தை விட்டு அகலாது.
இவ்வாலயத்தில் ஆஞ்சநேயர், கௌமாரி, மாகேஸ்வரி, பிராம்மி, துர்க்கையம்மனுக்கு சந்நிதிகள் உள்ளன. நவகிரக சந்நிதியும் உண்டு. தல விருட்சமாக அரச மரம் அமைந்துள்ளது. நாகதோஷம் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் ஏராளமானோர் முத்தாலம்மனை வழிபடுகின்றனர். முக்கிய விசேஷங்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன. வருடந்தோறும் ஆடி மாதம், நான்காம் ஞாயிற்றுக் கிழமை கூழ்வார்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நாமும் ஆடி மாதத்தில் முத்தாலம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைவோம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் தேவஸ்தான பட்டு வஸ்திரம்



18-07.2012).
திருப்பதி, ஜூலை 16: திருமலையில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை ஸ்ரீரங்கம் தேவஸ்தானம் சமர்ப்பித்தது.
÷திருமலையில் திங்கள்கிழமை காலை கடந்த வருட வரவு செலவு கணக்குகளை மலையப்ப ஸ்வாமி முன்பு அதிகாரிகள் படித்துக் காட்டினர். நிகழாண்டுக்கான புதிய புத்தகங்களையும் அவர் முன் சமர்ப்பித்தனர். இதுவே ஆனிவார ஆஸ்தானம். இதையொட்டி மாலையில் பூப்பல்லக்கும் நடைபெற்றது.
÷திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெரிய ஜீயரும், சின்ன ஜீயரும் கொடுத்த பட்டு வஸ்திரத்தை மலையப்ப ஸ்வாமிக்கும் அவர் சேனாதிபதி விஷ்வக்சேனருக்கும் அணிவித்தனர். வருடத்திற்கு ஒரு முறை கைசிக ஏகாதசி நாளன்று ஸ்ரீரங்க தேவஸ்தானத்திற்கு பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானம் வழங்குவது வழக்கத்திலுள்ளது. அதேபோல் ஆனிவார ஆஸ்தானம் அன்று திருமலை தேவஸ்தானத்திற்கு பட்டுவஸ்திரத்தை ஸ்ரீரங்க தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
÷அதன்படி திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்க தேவஸ்தானம் சார்பில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், துணை ஆணையர் தனபால், திருத்தணி தேவஸ்தான இணை ஆணையர் கவிதா ஆகியோர் பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்கினர்.
÷இவ்விழாவில் தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் பாபி ராஜு, செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம், செயல் இணை அலுவலர் கே.எஸ். சீனிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜி.வி.ஜி. அசோக்குமார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
÷ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திங்கள்கிழமை சுப்ரபாத சேவை மட்டும் நடந்தது. கல்யாண உற்ஸவம், வசந்த உற்ஸவம், பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் சேவை, ஸஹஸ்ர தீபாலங்கார சேவை முதலியன ரத்து செய்யப்பட்டன.

கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

18 Jul 2012
சுற்றுச்சுவர் இல்லா நிலையில் உள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளம்.
பொன்னேரி, ஜூலை 17: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதுப்பிக்கப்பட்ட கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷திருவாயர்பாடியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் பராமரிப்பின்றி, பாழடைந்து குளம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது.
÷இதனால் ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தெப்பத் திருவிழாவின் போது கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்குளத்தின் வெளிப்புறத்தில் சுற்றி வரும் நிலை இருந்தது.
÷பாழடைந்த நிலையில் இருந்த திருக்குளத்தை புனரமைப்பு செய்யக் கோரி பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்தது.
÷இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் 40ஆண்டுகளுக்குப் பிறகு இக்குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து கரிகிருஷ்ணப் பெருமாள் வலம் வந்தார்.
÷குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை... பாழடைந்த நிலையில் இருந்த இக்குளத்தை பல லட்ச ரூபாய் செலவு செய்து புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுக் குப்பைகள் குவிந்து குளத்து நீர் மாசடைவதை தவிர்க்கவும், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் குளத்தில் தவறி விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷அகத்தீஸ்வரர் குளத்துக்கும்... பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலய குளத்தில் இதுவரை நீர் வற்றியதில்லை. பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் குளத்து நீர் மாசடைந்து வருகிறது.÷எனவே இக்குளத்துக்கும் சுற்றுச்சுவர் அமைக்க பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா, பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்

செவ்வாய், 17 ஜூலை, 2012

உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்


உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு… மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது…. தேனில் விழுந்த மாங்கனி கொடிகாமம் மாந்தோப்பின் பழத்தை விட சுவைக்கிறது.

தொடர்பு பட்ட காணொளிகள்

உயர்தரப் பரீட்சைவிடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானம்-பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

17.07.2012
news
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இம்முறை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மேலும்,தமது சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு கிடைக்காத காரணத்தினால்,உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முற்றாக புறக்கணிக்கும் இறுதித் தீர்மானத்தினை அவர்கள் எடுத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் கல்விசார் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

பிள்ளயார் பாடல் பக்திப்பாடல்கள்

மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார்
 

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் (பட இணைப்பு)

 _
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி பிறேமினி சபாரத்தினம் (உதவி பிரதேச செயலர், கோப்பாய்), தென்மராட்சி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் சின்னத்துரை உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.0வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி பிறேமினி சபாரத்தினம் (உதவி பிரதேச செயலர், கோப்பாய்), தென்மராட்சி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் சின்னத்துரை உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

___

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் _

இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விநாயக வழிபாட்டுடன் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி யாக பூசை, கும்ப பூசை, என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனை இடம்பெற்றது. பின்னர் கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.0கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.


இதன் போது, கொடித்தம்பத்துக்கு விசேட பூசைகளும் வேத நாத பாராயணங்களுடன் கொடியேற்றமும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிஷேகமும் தீபாராதனைகளும் இடம்பெற்றன. மகோற்சவ தீர்த்தம் எதிர்வரும் ஆடியமாவாசைத் தினமான 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.