| ||||
|
கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் ஆடம்பர சொகுசு மாடி மனைகளின் கட்டடப்பணிகள் அதிகளவில் அதிகரித்து வந்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினதும் நம்பிக்கைக்குகந்த தெரிவாக ஆடம்ப சொகுசு மாடி மனைகள் கருதப்படுகின்றன. கட்டட வேலைகள் முழுமையாக பூர்த்தியாவதற்கு முன்னமே 50% வீட்டுத்தொகுதிகள் அநேக ஆடம்பர வீட்டுத்தொகுதிகளில் விற்பனையாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பில், அதியுயர் வருடான மட்டங்கள் காரணமாக அதிநவீன மாடிமனைகள், அவற்றிலும் குறைந்த மாடித் தொகுதி வீட்டு மனைகளிலும் பார்க்க மிகச் சிறப்பான செயற்திறனை அளிப்பதாக மற்றுமொரு ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. கொழும்பில் நிலமே அரிதான வளமாக காணப்படுகின்றது. அபிவிருத்திக்கு உகந்த நிலப்பகுதிகள் பல ஏற்கனவே உபயோகிக்கப்பட்டுவிட்டன. ஜனத்தொகைப் பெருக்கத்துடன், நகரப்பகுதிகளில் அபிவிருத்திக்கான நிலங்களின் பற்றாக்குறை அதிகரிப்பானது, கொழும்பு மாவட்டத்தில் கூட்டுரிமை வீட்டுத் தொகுதிகளின் உதயத்திற்கு அத்திவாரமிட்டது. கடந்த பல வருடங்களாக, கொழும்பு மாவட்டம், தனது சுற்றயல் பகுதிகளில் பல துரித அபிவிருத்தி திட்டங்களை சந்தித்துள்ளதுடன், குறிப்பாக ராஜகிரிய, பத்தரமுல்ல, பெலவத்தை போன்ற இடங்களில் அதிகளவான மக்கள் குடியமர்வதையும் கண்டுள்ளது. அதிலும் ராஜகிரிய பகுதியில் பல உயர்ந்த மாடி மனைகள் உருவாவதுடன், கொழும்பு 07 இல் இருந்து வெறுமனே 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி குறித்து அநேகமானோர் அறிந்துள்ளதுடன் அது குறித்து பேசுவது குறிப்பிடத்தக்கதாகும். அமைதியான சுற்றுப்புறத்தில், கொழும்பு கோல்ப் மைதானம் மற்றும் தேசிய பறவைகள் சரணாலயம் ஆகியவற்றினைப் பார்க்குமாற்போல், கொழும்பு நகரை எதிர்கொண்டு அமைந்துள்ள '110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி, அப்பிரதேசத்தின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகின்றது. ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதியானது 1600 முதல் 3000 சதுர அடிப்பரப்பளவு கொண்ட இரண்டு, மூன்று மற்றும் டியூப்ளெக்ஸ் விருப்பத் தொகுதிகளாக கிடைப்பதுடன், நீச்சல்குளம், உடற்பயிற்சிச்சாலை, டெனிஸ் மைதானம், கூடைப்பந்து விளையாட்டரங்கு, சிறுவர் விளையாட்டுப்பகுதி, உணவகங்கள், ஸ்பா போன்ற நவீன வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. குறித்த இத்தனை வசதிகளும், ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் ஆகும். அபூர்வ நட்வார் பரீக் குழுமம் (ANPG Group) , இலங்கையின் சங்கென் லங்கா (பிரைவேற்) லிமிடட் ஆகியன இணைந்த பங்காளித்துவ நடவடிக்கையாக 2011 நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தது. கட்டுமாணப்பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், 2014 ஜீலை மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சின் கருத்தின் படி, நகரமயமாக்கல் மற்றும் ஜனத்தொகை அதிகரிப்பானது, இலங்கையில் வீட்டுத்தொகுதிகளின் அபிவிருத்தி மற்றும் விசாலிப்பிற்கு வழிகோலியுள்ளது என ANPG குழுமத்தின் பணிப்பாளர் திரு. ரோஹன் பரீக் இதுகுறித்து தெரிவித்தார். இலங்கையில் அரைச்சொகுசு மற்றும் ஆடம்பர வீட்டு மனைத்தொகுதிகள் சந்தை குறித்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையில் அனைவருக்கும் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், 2020 ம் ஆண்டளவில் 100,000 வீடுகள் கட்டமைக்கப்பட வேண்டும் என மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. “சாத்தியத்தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இலங்கையில் அடுக்குமாடி வீட்டுத்தொகுதியை எமது குழுமம் விரிவுபடுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் அடுத்துவரும் ஆண்டுகளில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த வேளையில், ஆடம்பர அடுக்குமாடி மனைகளிக் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது" என பரீக் மேலும் குறிப்பிட்டார். இதனடிப்படையில் ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதியானது வாழ்நாளுக்கான பொருத்தமான முதலீடாக அமையும். ‘110, பார்ளிமென்ட் வீதி' குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0777 70 80 90 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள் அல்லது www.110parliamentroad.com என்ற இணையத்தளத்தினை அணுகுங்கள் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 20 ஜூலை, 2012
மாடித்தொகுதி கொள்வனவாளர்களுக்கு மிகப்பொருத்தமான முதலீட்டு வாய்ப்பினை வழங்குகின்றது
வியாழன், 19 ஜூலை, 2012
மைக்ரோசாப்டின் நவீன Office 2013 இவ்வளவும் சாத்தியம் - வீடியோ தொகுப்பு
யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
| ||||||||
|
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, உயிரிழந்தவரும் வே.அழகுராஜா என்பவரும் மொட்டையால் வயல் பிரதேசத்தில் வயல் வேலை முடிந்து இருவரும் நேற்று காலை வீடு நோக்கி வர ஆயத்தமான போது மூன்று யானைகள் அவர்களது வேளாண்மையை நோக்கி வந்துள்ளன. இருவரும் சேர்ந்து மூன்று யானைகளையும் விரட்டி குளக்கட்டுக்கு அப்பால் விட்டு விட்டு திரும்பி வரும் போது அதில் ஒரு யானை இருவரையும் துரத்தி வர அழகுராஜா என்பவர் வேளாண்மைக்குள் கீழே விழுந்துள்ளார். அவருக்கு முன்னால் ஓடி சென்ற கணேசசிங்கத்தை யானை துரத்தி சென்று அடித்துள்ளது. அவ்விடத்தில் இருந்து யானை சுமார் 20 நிமிடங்களுக்கு பின்பே சென்றுள்ளது. இதனையடுத்து கீழே விழுந்து கிடந்த அழகுராஜா எழும்பி அருகில் வயல் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் சொல்லி அவர்களையும் கூட்டி வந்து பார்த்த போது கணேசசிங்கம் உயிர் இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. உயிர் இழந்தவர் மொட்டையான்வெளி வயல் பிரதேசத்துக்குரிய நீர் முகவராக (அதிகாரி) கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று கோளாவில் 3 ஆம் பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே உயிர் இழந்தவராவார். பிரேத பரிசோதனையின் பின்பே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நேற்று பிற்பகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் | ||||||||
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி தேர்திருவிழா(படங்கள்)
18.07.2012
இலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.
நேற்றைய தினம் காலை 8 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள் வீதிஉலா வந்த முருகப்பெருமான் 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்தார்.
தேர்த் திருவிழாவில் இம்முறை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதன், 18 ஜூலை, 2012
JUKE - இலங்கைச் சந்தையில் நுழையும் புத்தம் புது SUV _
|
| |
வியத்தகு பாணியில் அமையப்பெற்றுள்ள JUKE, நிசானின் பிரபல்யம் மிக்க Patrol, X-trail மற்றும் Murano தற்போது யூனியன் பிளேசில் உள்ள AMWஇன் நிசான் காட்சியறையில் பரிசோதனை ஓட்டங்களுக்காக கிடைக்கின்றது.
சிறப்பான உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கொண்ட JUKE , ஒரேநேரத்தில் CO2 வெளியேற்றத்தை குறைப்பதுடன், கணிசமான அளவில் எரிபொருள்சிக்கனத்தை மேம்படுத்தும் நிசானின் "தூய இயக்கம்" தொழினுட்பத்துடன்ஒருங்கிணைக்கப்பட்ட 1.6-லீற்றர் DOHC எஞ்சின் இனைக் கொண்டுநம்பமுடியாத செயற்திறனைக் வெளிப்படுத்துகின்றது.
AMW பொது முகாமையாளர் யொகான் டி சொய்சா குறிப்பிடுகையில் "சௌகர்யம், பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய கச்சிதமான SUV இன் உயர் இருக்கையமர்வு நிலைப்படுத்தல்களைக் கொண்டிருந்தாலும், வேறு வாகனங்களில் இருந்து வேறுபாட்டை காட்டும் விதத்தில் நேர்த்தியான பாணியில் JUKE அமைக்கப்பட்டுள்ளது" என்றார்
ஈர்ப்புமிகு வடிவமைப்பு, கச்சிதமான கையாளுகை, இதமான பயண அனுபவம் மற்றும் பாவனையாளர் ஸ்நேகமுடைய தொழிட்பம் ஆகியவற்றின் கலவையான JUKE இலங்கையில் அதிகரித்து வரும் SUV சந்தையில் விசுவாசமிக்க பிரத்தியேகமான வாடிக்கையாளர் தொகுதியினைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வலுப்படுத்தப்பட்ட ப்ரீமியட் லெதர் இருக்கைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கியினால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்ட சென்டர் கொன்சோல் மற்றும் இருதடவைகள் பூசப்பட்ட ஹை-குளொஸ் வர்ணப்பூச்சு ஆகியவற்றினை JUKE இன் உட்புறப்பகுதி கொண்டுள்ளது. கியர்ஷிப்ட் ஆனது கொன்சோலின் மேற்புறத்தில், ஸ்போர்ட்டி டிறைவிங் அனுபவத்திற்கான ஷோர்ட் ஷிப்டர் லீவருடன் அமைந்துள்ளது. பிற்புறத்தில் 60/40 ஸப்ளிட் பெஞ்ச் இருக்கைகள் மற்றும் பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான வசதிகொண்ட ஃப்ளாட் லோட் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது.
டச் பெனல் காட்சித்திரை கொண்ட DVD பிளேயர், பிற்புறப்பகுதியைக் காட்டும் கமரா மற்றும் நிசானின் நுண்ணறிவுமிக்க புஷ் பட்டன் இக்னீஷியன், ஸ்பீட் சென்சிங் ஸ்டீயரிங், கதவுகளை பூட்டும் கட்டமைப்பு, USB மற்றும் Bluetooth இணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் தற்போது கிடைக்கும்.
ஆறு எயார் பேக்’குகள், அன்ரி-லொக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் வெய்க்கிள் டைனமிக் கொன்ட்ரோல் (VDC) போன்ற பல நியம பாதுகாப்பு அம்சங்களும் குறித்த வாகனத்தில் உள்ளன.
டிரான்ஸ்மிஷன் கட்டமைப்பானது Xtronic CVT (tm) (Continuously Variable Transmission) தானியங்கியாக வழங்கப்படுவதால் நிலையான கியர் தொகுதியை உபயோகிக்கும் பாரம்பரிய டிரான்ஸ்மிஷன் கட்டமைப்பைப் போலல்லாது, மிருதுவானதும், ‘ஸ்ரெப்லெஸ்" விகிதாசார மாற்றங்களையும் வழங்குகின்றது.
புத்தமைவு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கட்டமைப்பானது (Integrated Control –I-CON) நிசான் தொழினுட்பத்தில் இணைந்து கொள்ளும் மற்றுமொரு புதிய விடயமாகும். குறித்த I-CONகட்டமைப்பு குறித்த ஒரு செற்றிங்க்ஸில் தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு கொன்ட்ரோலராக செயற்படுவதுடன், ஏனையவற்றில் மூன்று வித்தியாசமான throttle/transmission (CVT)/steering response செற்றிங்க்ஸ் உடன் நோர்மல் - நாளாந்த ஓட்டத்திற்கும், ஸ்போர்ட்ஸ் - உள்ளாந்த செயற்திறன்மிகு உணர்வுக்கும், ஈக்கோ – மிக அதிகபட்ச செயற்பாட்டிற்கும் என டிறைவ் மோட் செலக்டராக செயற்படுகின்றது.
___
உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது
தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிடல், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தல், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவனவே இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த வருடத்தின் 3 ஆம் காலாண்டுப்பகுதியிலேயே லெனோவோ நிறுவனம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய கணனித்தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது.
இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதிகளில் லெனோவோ நிறுவனம் கணனிச்சந்தையில் 14.9 வீதத்தினைக் கொண்டிருந்தது.
இது எச்.பி நிறுவனத்தின் 15.5 வீதத்தினை விட வெறும் 0.6 வீதமே குறைவானதாகும்.
தற்போதைய புள்ளிவிபரங்களின் படி அவ் இடைவெளி 0.2 வீதங்களாகக் குறைந்துள்ளதாகவும் இதனால் உலகின் மிகப்பெரிய கணனி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சீனாவில் ஹுவாயி நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறவுள்ளது.
அத்துறையில் முதலிடத்திலிருக்கும் சுவீடன் நாட்டு எரிக்ஸன் நிறுவனத்தினை ஹுவாயி கூடிய விரைவில் முந்தவுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
புதன், ஜூலை 18, 2012
No comments
உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்
Posted By Vimal On Juli 17th, 2012 05:43 PM | Featured, இசையும் கதையும்வவுனியா மண்ணே எங்களின் கண்ணே
வந்தவரை வாழவைக்கும் வன்னிதாயவளே
பண்டார வன்னியன் வாழ்ந்த பூமி இது
பண்பாடு கொண்ட தமிழர் வணங்கும் சாமி
கண்ணான கலைகள் நல்ல தமிழ் கதைகள்
பொன்னான தேசம் எங்கும் பூமழை பொழிந்திட
தொடர்பு பட்ட காணொளிகள்
You might also like
புத்திர பாக்கியம் தரும் முத்தாலம்மன்
18.07.2012
Last Updated :
பல வருடங்களுக்கு முன்பு சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதி சிறிய கிராமமாகவே விளங்கியது. ஏரிக்கரை சாலையின் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் ஆலயம் அப்போது தோன்றியதுதான். தற்போது புகழ் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். ஒரு குட்டையில் தான் இருப்பதை வெளிப்படுத்தினாள் அம்மன். அவளை ஆரம்பத்தில் ஓர் ஓலைக்குடிசையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில்தான் அம்மனுக்கு பெரிய ஆலயமே உருவானது.
ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அன்னையின் கோலம் எழிற்கோலம். ஆலயம் வளர்ச்சியடைந்த போது கழுத்தளவு உள்ள இந்தப் பழமையான சிலையின் பின் அம்மனின் முழு உருவச் சிலை அமர்ந்த கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் கட்டப்பட்ட ஒரு கோயிலுக்குத் தயாரான இந்த சிலை சென்னையிலேயே தங்கிவிட்டது ஓர் அற்புதமான சம்பவம். நான்கு திருக்கரங்களோடு, இடது காலை மடித்து, வலது காலை தரையில் வைத்துக் கொண்டு, கைகளில் ஆயுதங்கள், டமருகம், கபாலம் ஏந்தி வீராஸனத்தில் அன்னை காட்சி தருகிறாள். அம்மனின் இந்த அற்புத தரிசனம் காண்போரின் உள்ளத்தை விட்டு அகலாது.
இவ்வாலயத்தில் ஆஞ்சநேயர், கௌமாரி, மாகேஸ்வரி, பிராம்மி, துர்க்கையம்மனுக்கு சந்நிதிகள் உள்ளன. நவகிரக சந்நிதியும் உண்டு. தல விருட்சமாக அரச மரம் அமைந்துள்ளது. நாகதோஷம் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் ஏராளமானோர் முத்தாலம்மனை வழிபடுகின்றனர். முக்கிய விசேஷங்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன. வருடந்தோறும் ஆடி மாதம், நான்காம் ஞாயிற்றுக் கிழமை கூழ்வார்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நாமும் ஆடி மாதத்தில் முத்தாலம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைவோம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் தேவஸ்தான பட்டு வஸ்திரம்
Last Updated :
18-07.2012
).
திருப்பதி, ஜூலை 16: திருமலையில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை ஸ்ரீரங்கம் தேவஸ்தானம் சமர்ப்பித்தது.
÷திருமலையில் திங்கள்கிழமை காலை கடந்த வருட வரவு செலவு கணக்குகளை மலையப்ப ஸ்வாமி முன்பு அதிகாரிகள் படித்துக் காட்டினர். நிகழாண்டுக்கான புதிய புத்தகங்களையும் அவர் முன் சமர்ப்பித்தனர். இதுவே ஆனிவார ஆஸ்தானம். இதையொட்டி மாலையில் பூப்பல்லக்கும் நடைபெற்றது.
÷திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெரிய ஜீயரும், சின்ன ஜீயரும் கொடுத்த பட்டு வஸ்திரத்தை மலையப்ப ஸ்வாமிக்கும் அவர் சேனாதிபதி விஷ்வக்சேனருக்கும் அணிவித்தனர். வருடத்திற்கு ஒரு முறை கைசிக ஏகாதசி நாளன்று ஸ்ரீரங்க தேவஸ்தானத்திற்கு பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானம் வழங்குவது வழக்கத்திலுள்ளது. அதேபோல் ஆனிவார ஆஸ்தானம் அன்று திருமலை தேவஸ்தானத்திற்கு பட்டுவஸ்திரத்தை ஸ்ரீரங்க தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
÷அதன்படி திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்க தேவஸ்தானம் சார்பில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், துணை ஆணையர் தனபால், திருத்தணி தேவஸ்தான இணை ஆணையர் கவிதா ஆகியோர் பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்கினர்.
÷இவ்விழாவில் தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் பாபி ராஜு, செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம், செயல் இணை அலுவலர் கே.எஸ். சீனிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜி.வி.ஜி. அசோக்குமார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
÷ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திங்கள்கிழமை சுப்ரபாத சேவை மட்டும் நடந்தது. கல்யாண உற்ஸவம், வசந்த உற்ஸவம், பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் சேவை, ஸஹஸ்ர தீபாலங்கார சேவை முதலியன ரத்து செய்யப்பட்டன.

கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
18 Jul 2012
Last Updated :
சுற்றுச்சுவர் இல்லா நிலையில் உள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளம்.
பொன்னேரி, ஜூலை 17: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதுப்பிக்கப்பட்ட கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷திருவாயர்பாடியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் பராமரிப்பின்றி, பாழடைந்து குளம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது.
÷இதனால் ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தெப்பத் திருவிழாவின் போது கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்குளத்தின் வெளிப்புறத்தில் சுற்றி வரும் நிலை இருந்தது.
÷பாழடைந்த நிலையில் இருந்த திருக்குளத்தை புனரமைப்பு செய்யக் கோரி பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்தது.
÷இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் 40ஆண்டுகளுக்குப் பிறகு இக்குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து கரிகிருஷ்ணப் பெருமாள் வலம் வந்தார்.
÷குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை... பாழடைந்த நிலையில் இருந்த இக்குளத்தை பல லட்ச ரூபாய் செலவு செய்து புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுக் குப்பைகள் குவிந்து குளத்து நீர் மாசடைவதை தவிர்க்கவும், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் குளத்தில் தவறி விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷அகத்தீஸ்வரர் குளத்துக்கும்... பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலய குளத்தில் இதுவரை நீர் வற்றியதில்லை. பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் குளத்து நீர் மாசடைந்து வருகிறது.÷எனவே இக்குளத்துக்கும் சுற்றுச்சுவர் அமைக்க பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா, பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)