siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 27 ஜூலை, 2012

வணிக வளாகங்களில் நடைபெற்ற நூதன திருட்டு அம்பலம்

27.07.2012.மலேசிய வணிக வளாகங்களில், புதுமையான முறையில் பொருட்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களில், சமீப காலமாக பொருட்கள் திருடு போயின.
இதையடுத்து, வணிக வளாகங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டவர்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டனர்.
இந்நிலையில், ஒரு வணிக வளாகத்தில் சந்தேகப்படும் படியாக திரிந்த மூன்று பேரை, வணிக வளாக காவலர்கள் விசாரித்தனர். அவர்களிடமிருந்த பையை சோதித்த போது, 23 ஜோடி கால்சட்டைகள் இருந்தன.
அதுமட்டுமல்லாது மற்ற பைகளை போட்டுவிட்டு, அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்த பைகளை பரிசோதித்த போது, திருடப்பட்ட பொருட்கள் அலுமினிய காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தன.
பொதுவாக, வணிக வளாகங்களில் பரிசோதிக்கப்படும் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் விலை பட்டியலை கணக்கிடும் கருவிகள், அலுமினியத் தகடு அல்லது காகிதத்தை பரிசோதிக்க இயலாதவையாக உள்ளன.
இதை பயன்படுத்தி ஒரு கும்பல், வணிக வளாகங்களில் திருடி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வணிக வளாக நிர்வாகத்துக்கும், இது தொடர்பான தகவல் தெரிவிக்கப் பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

3 மாதங்களில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரமெடுத்த நபர்

27.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்த பேட்ரிக் சிலோன்(வயது 60) என்பவர் 3 மாத இடைவெளியில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரம் எடுத்திருக்கிறார். பேட்ரிக் சிலோன் கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அவர் 2-வது திருமணம் செய்த மனைவிக்கு கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. 60 வயதில் தாம் தந்தையானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் பேட்ரிக்.
இந்நிலையில் ஜூன் மாதத்தில் பேட்ரிக்கு மேலும் 2 மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருந்தன.
அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகளின் மகளுக்கு குழந்தை பிறந்தது. அதாவது தந்தையான சந்தோஷத்தில் இருந்த பேட்ரிக் இப்பொழுது கொள்ளுத் தாத்தாவானார்.
அடுத்த 12 நாட்கள் தான், இன்னொரு மகள் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க தாத்தாவாகி இருக்கிறார் பேட்ரிக். இப்பொழுது மொத்தம் பேட்ரிக்குக்கு 6 பேரக் குழந்தைகள்.
இருந்தாலும் 60 வயதில் பிறந்த ஈதன் என்ற குழந்தை தான் தமக்கு பொக்கிஷம் என்றும், ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் புன்னகையில் வாழ்க்கையையே மறந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் பேட்ரிக்.

கலிபோர்னியா வழக்கிற்கும் ௭னக்கும் தொடர்பில்லை’

 _
27.07.2012.கலிபோர்னியா வழக்கிற்கும், ௭ன க் கும் சம்பந்தமில்லை. நித்தியானந்தா பீடம் மட் டும் தான் ௭ன்னுடையது. இந் நிலை யில், ௭னது பெயரில் உள்ள நிறு வனங் கள் மற்றும் அமைப்புகளுக்கும் ௭னக்கும் தொடர் பில்லை ௭ன இளைய ஆதீனம் நித்தி யானந்தா கூறி னார்.

மேலும் அவர், ‘மதுரை ஆதீன சொத் துகள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுப்படி செயற்படுவேன்’ ௭ன் றார்.

இதனிடையே பேசிய ஆதீனம், ‘௭ன க் கும், நித்தியானந்தாவுக்கும் இடையே ௭ந்த பிரச்சினையும் இல்லை. குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவருடன் கொடைக்கானல் செல்ல முடிய வி ல் லை. அதற்கு பதில், திருவண்ணா மலை வரை சென்று, அவரை வழிய னுப்ப உள் ளேன்’ ௭ன்றார்

அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்க முடியாது: கெஹெலிய

 _
27.07.2012.சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் ௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துதடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லையென்றும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் ௭ன்றும் அவுஸ்திரேலியாவின் ௭திர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்கம் ௭டுக்கும் நடவடிக்கை ௭ன்ன? ௭ன ஊடகவியலாளர் வினவினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சட்டவிரோதமாக நாடு கடந்துசென்ற அகதிகள் நாட்டுக்கு திரும்பும்போது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். சட்டரீதியில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று அதிகளாக அந்தஸ்துகோருவோரும், சட்டவிரோதமான முறையில் அகதிகளாக செல்வோர் ௭ன இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். அவ்வாறான அகதிகள் நாட்டுக்கு திரும்பும் போது செங்கம்பளம் விரித்து வரவேற்கமுடியாது. நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் ௭ன்றார்

பச்சிளங்குழந்தையின் உயிரைக் காவு கொண்ட 200 ரூபா

 _
27.07.2012.பச்சிளங்குழந்தை யொ ன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்ப வம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெ ற்றுள்ளது. பெரும் பரிதாப த்தை ஏற்படுத்தி யு ள்ள இச் சம்பவம் குறி த்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ் சீவ் குமார். தினக்கூலி தொழிலாள ரான இவர், பிரசவத்திற்காக தனது மனை வி யை ஜலந்தர் அரசு பொது வைத்திய சாலை யில் அனுமதி த் திருந்தார்.

இந்நிலை யில், கடந்த 5 நாட் க ளுக்கு முன்பு இவ ர் களுக்குக் குழந்தை பிறந் தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையு ட னும் உடல் நல க் குறைவுடனும் பிறந்ததால், அத னை இன்கியூபேட்டரில் வைத்தி ரு க்க மருத் து வமனை வைத்தியர்கள் அறிவு று த் தினர். அப்போதும், குழந்தையின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்ப தால் சஞ்சீவ் குமார் தனது மனை வி யு டன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் சென்று சந்தித்தார். அப் போது மேலும் ஒரு நாள் குழந்தையை இன் கியூ பேட்டரில் வைத்திருக்க வேண் டும் ௭ன்று தெரிவித்த பிரதான வைத் தி யர், இதற்காக ஒரு நாளு க்கு 25 ரூபா செல விடப் படு வ தால் தங்களுக்கு 200 ரூபா தருமாறு தெரி வி த்தார். அதற்கு சஞ்சீவ் குமார், ஏழைத் தொழி லாளியான தன் னால், அந்தத் தொகை யை வழங்க இய லாது ௭ன்றார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து, குழ ந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ மனை ஊழியர்கள் தெரிவித்தனர். பணம் கொடுக்க இயலாது ௭ன்று தெரி வி த் த காரணத்தால் இன்கியூபேட் ட ரில் இருந்து குழந்தை ௭டுக்கப்பட்ட தா லேயே, அது உயிரிழந்ததாக சஞ்சீவ் குமார் கூறி னார். ஆனால் தாங்கள் குழந் தை யை இன் கியூ பேட்டரில் இருந்து ௭டு க் க வில்லை ௭ன்றும், உடல்நலக் குறைவு கார ணமாகவே குழ ந்தை பலியாகி உள்ள தா கவும் மருத்து வ மனை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணை தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சிவாஜிலிங்கம் உட்பட 8 பேர் நெல்லியடியில் கைது

 _
27.07.2012.தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல்துறைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் 8 பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டோம்.

யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் எனக் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது

  _
27.07.2012அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தயான் அந்தனி ௭ன்ற இலங்கையர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு ௭திராக 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

உலகின் மிகப் பெரிய முத்தினைக் கொண்ட சிப்பியின் தொல்லுயிர் எச்சம்: உடைக்கத்தயங்கும் ஆராய்ச்சியாளர்கள் (பட இணைப்பு

_
27.07.2012உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய முத்தினைக்கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் சிப்பி ஒன்றின் தொல்லுயிர் எச்சத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ் எச்சம் 145 மில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் சிலரால் கண்டெடுக்கப்பட்ட இச்சிப்பி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எம். ஆர்.ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிப்பிக்குள் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது சிப்பிக்குள் கோல்ப் பந்து அளவிலான பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது முத்தாக இருக்குமென ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இது சாதாரண முத்தினை விட பல மடங்கு பெரியதாகும்.

ஆனால் சிப்பிக்குள் இருக்கும் முத்தினை வெளியே எடுப்பதற்கு விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர்.

முத்தினை எடுப்பதற்காக மிகப்பழமையான சிப்பியை சிதைக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

___

நிலிசனின்பிறந்த நாள்வாழ்த்து



கனடா ரொரண்டோ வில் வசிக்கும்பாலேஸ்வரன் தம்பதி களின்நிலிசனின்
பிறந்த நாள் இன்று.25.07.2012 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்ப ப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து நவட்கிரி இணையமும் வாழ்த்துகின்றோம்

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

, 27 July 2012,
சில நேரங்களில் அழைக்காத நபர் திடீரென்று வந்து அதிர்ச்சியை தருவார்கள். அதுபோல அமெரிக்காவில் கடைக்குள் கரடி நுழைந்து அங்கிருந்தவர்களை அலற வைத்தது.
பென்சில்வானியா மாகாணத்தில் பீத்ஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள கடையில் ஏராளமான வாடிக்கையாளர் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் 125 பவுண்ட் எடையுள்ள பெண் கரடி ஒன்று கடைக்குள் நுழைந்தது.
கரடி நிற்பதை கண்டு சிலர் அலறினார்கள். உடனே கடைக்குள் இருந்தவர்கள் வேறு வாசல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கரடி கடையில் பல பகுதிக்குச் சென்று உலாவந்தது. ஆனாலும் எவ்வித சேதத்தையும் அது ஏற்படுத்தவில்லை.
உடனே வனவிலங்கு ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசியை போட்டு கரடியை பிடித்தார்கள். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.