siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர்






29.07.2012
மண்டபம்: துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று சங்கிலியால் கட்டிபோட்டு இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியதாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் 23 பேரும் கண்ணீருடன் கூறினர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, 5 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கையில் உள்ள தலைமன்னார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதை கண்டித்து 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தது.இதனிடையே, மன்னார் நீதிமன்றம் நேற்று முன்தினம் 23 மீனவர்களை விடுவித்தது. சர்வதேச எல்லையில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மூலம் மண்டபம் கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் (27ம் தேதி) இரவு 8 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் கடலிலேயே 15 மணி நேரம் காக்கவைத்தனர். நேற்று காலை 10 மணியளவில் கப்பலில் காத்திருந்த 23 மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.விடுதலையான மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த எங்களை இலங்கை கடற்படையினர் கத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைப்பிடித்தனர்.

அவர்களுடன் வர மறுத்தால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்த நாங்கள் வேறு வரூ.யின்றி அவர்களுடன் சென்றோம்.இலங்கை சிறையில் எங்களை கரூ.ப்பறையில் சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்தினர். இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்ட நாங்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மண்டபம் கடல் பகுதிக்கு வந்தோம். 15 மணி நேரத்திற்கு மேலாக கடலில் எங்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பட்டினியுடன் காக்க வைத்தனர்‘ என்றார். மீனவர்கள் காத்திருந்தது ஏன்? இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து வருகின்றன. இம்முறை தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்த தகவல் வெளியே தெரிந்தால் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களை 15 மணி நேரம் இந்திய கடலோர காவல்படையினர் காக்க வைத்தனர். நேற்று காலை கப்பலில் இருந்து படகு மூலம் மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு பத்திரிக்கையாளர்கள் போட்டோ, பேட்டி எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மேலும், விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் மீனவர்களையும் சந்திக்க முடியாமல் உறவினர்கள் நீண்ட நேரம் தவித்தனர்

இந்து வாலிபர் முஸ்லிமாக மதமாற்றம்: நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு

 29 யூலை 2012,
இந்து வாலிபர் ஒருவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், குறிப்பாக இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், இந்து வாலிபர் சுனில் என்பவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி ஏஆர்ஒய் டிவி சேனலில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது. இதனால் சிறுபான்மை இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் மனித உரிமை சேவகர் அன்சார் பர்னே கூறுகையில், மயா கான் என்பவரும் எனது சகோதரர் சரீம் பர்னேவும் சேர்ந்து, இந்து வாலிபர் சுனிலை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக நடத்தி காட்டி உள்ளனர்.
இந்த மதமாதற்றம் ஒரு நாடகம். உண்மையிலேயே மதமாற்றத்துக்கு சுனில் விரும்பி இருந்தால், அதை நேரடியாக ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எனது அன்சார் பர்னே அறக்கட்டளையில் இருந்து சகோதரர் சரீம் பர்னேவை நீக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்சார் பர்னே நடத்தும் அறக்கட்டளையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்தான் சுனில். மதமாற்றம் செய்யும் போது தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
மதமாற்றம் செய்த பின்னர், சுனிலுக்கு என்ன முஸ்லிம் பெயர் வைக்கலாம் என்றும் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதத்தில் மதமாற்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டொரண்டோவின் பிரபல ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

29 யூலை 2012,
டொரண்டோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் Cafe Le Monde என்ற ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் செயல்பட்டு வரும் Cafe Le Monde என்ற ஓட்டலின் அதிபர் Mohammad Reza(வயது 55) ஆவார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தர்.
இவர் மீது 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் Mohammad Rezaவை கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்தனர்.
இதனையடுத்து இவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து இவர் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் மாணவரை சுட்டுக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

 29 யூலை 2012,
இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற பிரிட்டன் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த அனுஜ் பித்வி(வயது 23), பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்டேபில்டன்(வயது 21) என்ற நபர் திடீரென பித்வியை சுட்டுக் கொன்றான்.
இதன் பிறகு பொலிசார் ஸ்டேபில்டனை கைது செய்தனர். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே ஸ்டேபில்டன் மீதான கொலை வழக்கு, மான்செஸ்டரின் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திமோதி கிங் தன் தீர்ப்பில் குறிப்பிடுகையில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாததால் ஏற்பட்ட விளைவு தான், கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது. ஸ்டேபில்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். 30 ஆண்டுகள் வரை ஸ்டேபில்டன் பரோலில் வெளிவர முடியாது என்றார்.
அனுஜ் பித்வியின் தந்தை சுபாஷ் குறிப்பிடுகையில், நேற்று நீதிமன்றத்திற்கு வந்த போது கூட ஸ்டேபில்டன் தான் செய்த குற்றத்துக்காக கவலைப்படாமல் அலட்சியமாக எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் என்றார்.

நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்

நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்
 29.யூலை 2012,
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்குத் தேவையான எரிபொருட்கள் பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நேட்டோ படைகள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தானிய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்காத காரணத்தால், ஆப்கானிஸ்தானுக்கான பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டது.
இதனால் நேட்டோ படைகளுக்கான பொருட்களை விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார்.
அதன் பின் நேட்டோ படைகளுக்கான எரிபொருள் வாகனங்கள் செல்ல, பாகிஸ்தான் அனுமதியளித்தது.
இந்நிலையில் நேட்டோ வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளித்தால், அந்த வாகனங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என தலிபான்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் பகுதியில் இந்த வாகனங்களை தகர்க்க முடியாத காரணத்தால், ஆப்கானிஸ்தானில் உஸ்பெகிஸ்தான் எல்லையையொட்டிய சமாங்கன் மாகாணத்தில் நேட்டோ வாகனங்கள் செல்லும் பாதையில் தலிபான்கள் கடந்த 18ஆம் திகதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இதில் எரிபொருள் நிரப்பிய டாங்கர் லொறி வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீயில், அருகே இருந்த மற்ற 23 லொறிகளும் எரிந்து சாம்பலாகின.
இதற்கிடையே கடந்த 24ஆம் திகதி பெஷாவரில் நேட்டோ படைகளுக்கான வாகனத்தை ஓட்டிய டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இது போன்ற தாக்குதலை நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, நேட்டோ வாகனங்களுக்கான போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தெரியப்படுத்தியுள்ளது.

சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: 80 பேர் பலி

 29 யூலை 2012,
சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைகள் நிரம்பி வழிந்ததால், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் தேசம் அடைந்தன.
இந்த மழை- வெள்ளத்திற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்

29.07.2012ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்

ஒலிம்பிக் போட்டியைக் காண உலகெங்கும் உள்ள மக்கள் விமானம், கப்பல் என்று பல வழிகளிலும் சுலபமாக லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், சீன விவசாயி செங் குவாங்மிங், 2 ஆண்டுகால ரிக்ஷா பயணத்தின் மூலம், லண்டனை வந்தடைந்துள்ளார்.
2010ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், 16 நாடுகளை கடந்து 2 ஆண்டுகள் கடந்து தற்போது லண்டனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 57 வயதான நான், இதுவரைக்கும் சீனாவைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை.
தடகளப் போட்டிகளின் பெரும் ஆதரவாளரான நான், ஒலிம்பிக் போட்டியின் பெரு‌மையை உலகெங்கும் பரப்பும் விகிதமாக இப்பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.




20 வயதில் 160 வயதினராகக் காட்சியளிக்கும் மனிதர்!

 

29.07.201220 வயதில் 160 வயதினராகக் காட்சியளிக்கும் மனிதர்!
ஐரோப்பாவின் அதிகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட நபராக காணப்படும் Dean Andrews என்பவர் வயது தொடர்பான அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 20 வயதாகும் இவர் 160 வயதில் காணப்படும் மனிதர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். Hutchinson-Gilford progeria என்ற நோயினால் பாதிக்கப்பட்டு வழமையான மனிதர்களை விட 8 மடங்கு அதிகமாக வயதாகி காணப்படுகிறார்.
இந்நோயினால் பிரித்தானியாவில் நான்கு பேரும், உலகம் முழுவதிலும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புலிகள் இல்லாமையே

28.07.2012 மாணவர்கள் சீரழிவிற்கு காரணம்!-கல்விமான்கள் கவலை!


புலிகள் இல்லாமையே மாணவர்கள் சீரழிவிற்கு காரணம்!-கல்விமான்கள் கவலை!
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார் இராசகுமாரன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் மாணவர்களது கல்வி கற்பதற்கான நிலை அவர்களது எண்ணம், சிந்தனைகள் திசை திருப்பப்பட்டுள்ளன.
மாணவர்கள் மன எழுச்சியுடன் இருந்து கல்வி கற்கும் நிலை சகல வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் போதுமான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அங்கு இருந்து மாணவர்கள் அமைதியாகக் கல்வி கற்கமுடியாத நிலைமை காணப்படுகிறது.
போதைவஸ்துப் பாவனை, மது பாவனை, புகைத்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பினாலேயே மாணவர் கவனம் இவ்வாறு திசை திருப்பப்பட்டு கல்வி நிலையிலிருந்து பலவீனமான நிலைக்கு கொண்டு செல்கிறது.
இந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் நல்ல நிலையை அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்

27.07.2012கந்தசுவாமி கோயிலின் ஆண்டுப் பெருந்திருவிழா – (வீடியோ இணைப்பு)