siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 1 ஆகஸ்ட், 2012

கள்ளக்காதல் ஜோடி கல்லால் அடித்து கொலை

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நாடான மாலியில், முறைகேடான செயல்களில் ஈடுபடுவோருக்கு தீவிரவாத இயக்கத்தினர் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அங்குள்ள அகூயல்ஹோக் என்ற நகரில் இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்று விட்டனர்.
இதை அறிந்து கொண்ட கிளர்ச்சி பிரிவு தலைவர்கள், காதல் ஜோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஊரின் மத்திய பகுதிக்கு அழைத்து வந்தனர்.
நான்கு அடி ஆழத்துக்கு இரண்டு பள்ளங்களை தோண்டி இருவரையும் கழுத்து புதையும் அளவுக்கு மண்ணை போட்டு மூடினர்.
தலை மட்டும் வெளியே தெரியும் படி இருக்க, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கோஷம் போட்டப்படி இந்த ஜோடியை கல்லால் அடித்தனர்.
இருவரும் துடிதுடித்து இறந்த பிறகு சூழ்ந்திருந்த மக்கள் அமைதியாயினர். இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் தண்டனைக்கு பயந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான அல்ஜீரியாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கிடந்த மர்ம பொருளால் பீதி

 
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதரக ஊழியர்களுக்கு ஏற்பட்டதால், உடனே பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தூதரகத்தில் இருந்த அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தூதரகம் அமைந்துள்ள சாலை முக்கிய சுற்றுலா பகுதி என்பதால் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அந்த சாலை முழுவதும் பொலிஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகள், தீயணைப்பு வண்டிகள் தயாரான நிலையில் நின்றிருந்தன.
வெடிகுண்டு தோற்றத்தில் இருந்த அந்த பொருளை நிபுணர்கள் ஆராய்ந்தனர். அது உடற்பயிற்சி செய்யும் உருளை என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு பீதி ஒருவழியாக நீங்கி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தூதரகத்தில் இயல்பு நிலை திரும்பியது.

ஈரானில் வங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, ஈரானில் வங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்காவும், ஐ.நாவும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் தேசிய வங்கியில் 2.6 பில்லியன் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத்தின் நெருங்கிய நண்பர் எஸ்பான்டியர் ரகீம் மாஷிக்கு வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ஸ்டீல் நிறுவன வர்த்தகர் அமிர் மன்சூர் கோஸ்ரவிக்கு வங்கி மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் மோசடி தொடர்பாக 39 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு 25 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை

மாட்டு கொட்டகையிலிருந்து சிறுமி மீட்பு: மாடு போன்று கத்தும் பரிதாபம்

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,ரஷ்யாவில் மாட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். பேசத் தெரியாத இந்தச் சிறுமி மாடு போல கத்துகிறாள். அவளை பெற்றோரே அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. ரஷ்யாவின் உரல் மலையை ஒட்டிய சோலிகாம்ஸ்க் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வசிக்கும் தம்பதியர், சில மாடுகளை வைத்து வளர்க்கின்றனர்.
அவர்களது மாட்டுக் கொட்டகையில் இருந்து சிறுமி கத்துவது போல அவ்வப்போது சத்தம் வருகிறது என்று அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் பொலிசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, அங்கு பொலிசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது உடல் முழுவதும் சாணி அப்பிய நிலையில், மாடுகளுக்கு நடுவில் ஒரு சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர். கிழிந்த துணியை உடம்பில் சுற்றியிருந்தாள்.
அவளுக்கு எதுவும் பேசத் தெரியவில்லை. மாடுகள் போலவே, ‘ம்மா.. ம்மா’ என்று கத்தினாள். இதையடுத்து, அவளை அங்கிருந்து மீட்டு, மறுவாழ்வு மையத்துக்கு பொலிசார் அனுப்பினர்.
இதுபற்றி பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், சிறுமியின் பெற்றோர்தான் அவளை அங்கு அடைத்து வைத்திருந்தனர். சிறுமிக்கு சாப்பிட தெரியவில்லை, பாத்திரத்தில் பால் கொடுத்தால் மட்டும் குடிக்கிறாள்.
பேச்சும் வரவில்லை, மாடு போல கத்துகிறாள். வெளிஉலக தொடர்பு இல்லாமல் பல ஆண்டுகளாக மாட்டுக் கொட்டகையிலும் பாழடைந்த ஸ்டோர் ரூமிலும் அவளை பெற்றோர் அடைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் கூறினர்.
மறுவாழ்வு மையத்தில் இருந்த சிறுமி தற்போது ஒரு குடும்பத்தின் அரவணைப்பில் உள்ளார். இதுபோன்ற சம்பவம் ரஷ்யாவில் புதிதல்ல, ரஷ்யாவின் சிட்டா நகரில் உள்ள பிளாட்டில் நாய்களுக்கு நடுவில் அடைத்து வளர்க்கப்பட்ட நடாஷா மிகைலோவா என்ற 5 வயது சிறுமி 2009ல் மீட்கப்பட்டாள்.
பேசத் தெரியாத அவள் நாய் போல குரைத்தாள். தட்டில் வைக்கப்பட்ட பாலை நக்கி குடித்தாள் என்பதும், பெற்றோரே அவளை இவ்வாறு அடைத்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

குழந்தையை திருடிய பெண்ணுக்கு 25 ஆண்டுகள் கழித்து தண்டனை கிடைத்த வினோதம்

 
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு முன் குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணுக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த ஆன் பெட்வே(வயது 50). அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இல்லாமல் போகவே, குழந்தையை திருடி வளர்க்க திட்டமிட்டார்.
எனவே கடந்த 1987ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹர்லெம் மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஜாய் வொயிட் என்பவரின், பெண் குழந்தையைத் திருடிச் சென்றார் பெட்வே.
திருடிய குழந்தையின் உண்மையான கர்லினா வொயிட் என்ற பெயரை மாற்றி, 25 ஆண்டுகளாக வளர்த்துள்ளார். தற்போது 25 வயதை எட்டிய கர்லினா வொயிட்டுக்கு, பெட்வே தனது தாய் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது.
காணாமல் போன குழந்தைகளை பற்றிய மையத்தை அணுகினார் கர்லினா. அங்கு அவரது டி.என்.ஏ.வை பரிசோதித்த மருத்துவர்கள்,ஜாய் வொயிட் தான் உனது தாய், கார்ல் டைசன் தான் உனது தந்தை எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனது உண்மையான பெற்றோரைக் கண்டுபிடித்து, கடந்தாண்டு அவர்களுடன் சேர்ந்தார் கர்லினா.
குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக 25 ஆண்டுகளுக்குப் பின் பெட்வே கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஒலிம்பிக் நீச்சல்: 15 வயது லித்வானிய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் பிரெஸ்ட்ஸ்டோர்க் பிரிவில் 15 வயதான லித்வானிய நாட்டு வீராங்கனை தங்கம் வென்று சாதனை படைத்தார். லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் 100 மீற்றர் பிரெஸ்ட்ஸ்டோர்க் மகளிர் பிரிவு போட்டி நடைபெற்றது.
இதில் லித்வானிய நாட்டு வீராங்கனையான ருட்டா மெலியுட்டி, அமெரிக்க வீராங்கனையான ரிபெக்கா சோனியை விட 0.08 நொடி முன்னதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்த தங்கப்பதக்கமே லித்வானிய நாடு ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக வந்த சோனி வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாவதாக வந்த ஜப்பானின் சட்டோமி வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.
தங்கம் வென்ற மெலியுட்டி பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். வெற்றி குறித்து அவர் கூறுகையில், என்னால் இதை நம்பவேமுடியவில்லை எனக்கு கிடைத்த பெரிய விருதாகும் என்றார்.

லண்டன் ஒலிம்பிக்கில் இன்று இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்

 புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் விபரம்: வில்வித்தை:
மகளிர் தனிநபர் முதல் சுற்று: இந்தியாவின் தீபிகா குமாரி- இங்கிலாந்து வீராங்கனை அமய் ஆலிவருடன் மோதல்
பேட்மின்டன்:
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று: சாய்னா நெஹ்வால், நெதர்லாந்து வீராங்கனை ஜியோவுடன் மோதல்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று. பருப்பள்ளி காஷ்யப், இலங்கையை சேர்ந்த நிலுகா கருணாரத்னேவுடன் மோதல்.
ஹொக்கி:
நெதர்லாந்துடன் கடந்த போட்டியில் தோல்வியுற்ற இந்திய ஹொக்கி அணி, இன்று நியூசிலாந்து ஹொக்கி அணியுடன் மோதல்.
துடுப்பு படகு:
ஆடவர் ஒற்றையர் ஸ்குல்ஸ் (அரையிறுதி சி): 13 முதல் 18வது இடத்துக்கான போட்டியில் ஸ்வரண்சிங் பங்கேற்பு
ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் ஸ்குல்ஸ்: (அரை இறுதி “டி”): 19 முதல் 24வது இடத்துக்கு மஞ்சித்சிங்- சந்திப்குமார் பங்கேற்பு.
துப்பாக்கி சுடுதல்:
மகளிர் 25 மீற்றர் பிஸ்டல்: ரகி சரோனாபாத், அனுராஜ்சிங்
டென்னிஸ்:
ஆடவர் இரட்டையர் 2வது சுற்று: லியாண்டர் பயஸ் -விஷ்ணு வர்தன் ஜோடி, பிரான்சை சேர்ந்த டிசோங்கா- மைக்கேல் ஜோடியுடன் மோதல்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்று: பயஸ்- சானியா மிர்சா, செர்பியாவை சேர்ந்த ஜிம்மோன்லூக்- இவானோ விக் ஜோடியுடன் மோதல்.

கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

 
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொழும்புத்துறை அரியாலை துண்டி கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியாiவை சொந்த இடமாகக் கொண்ட கிருஷ்ணசாமி ஸ்ரீரஞ்சன் வயது 53 என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஈச்சமோட்டையிலுள்ள தனது உறவினருடைய வீட்டிற்கு வந்திருந்த நிலையில் உறவினரின் குடும்ப வறுமை காரணமாக கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார்.
ஆயினும், ஆழம் குறைந்த கடற்பகுதியில் நண்டு பிடித்துக் கொண்டிருக்கையில் மங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் குழு யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம்

 புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியர்த்தப்பட்ட அரியாலை சாவகச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.
தொடர்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்யும் இவர்கள், யாழ்.அரச அதிபர் வர்த்தக சுமூகத்தினர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
மேலும், கிளிநொச்சியின் மிதிவெடியகற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்வதோடு மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வடபகுதியில் அதிகரிக்கும் கலாசார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்கிறார் வைத்தியகலாநிதி திருமகள்

 புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.
யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெறும் வார்த்தையாகவே உள்ளது. அது தற்போது நடைமுறையில் இல்லை.
வட பகுதியில் சிசு மரணம், பாலியல் துஷ்பிரயோகங்கள், இள வயதுத் திருமணங்கள், திருமணமாகாத கர்ப்பங்கள், சட்டவிரோதக் கருக்கலைப்புக்கள் அதிகரித்துள்ளன.
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிள்ளைகள் ௭ங்கு செல்கிறார்கள் ௭ன்பது தொடர்பில் ௭துவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலை புத்தகப் பையுடன் மற்றுமொரு உடுப்பையும் ௭டுத்துச் சென்று பாடசாலை செல்லாது வேறு இடங்களுக்குச் செல்கின்றார்கள்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாபவர்கள் தாம் யாரிடம் தமக்கு நடந்தவற்றைக் கூறுவது யாரை அணுகுவது ௭ன்ற நிலையுள்ளது.
சிறு வயதில் திருமணம் செய்பவர்கள் தமக்கான அடுத்த நடவடிக்கை ௭ன்ன ௭ன்பதை அறியாதுள்ளனர். பெற்றோர்களும் அது பற்றி வெளியில் கூறுவதில்லை.
சிறு வயது திருமணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் இளவயது கர்ப்பங்கள் சட்டவிரோத கருக்கலைப்பால் ஏற்படும் தீமைகள் தொடர்பில் முழுமையான அறிவின்மையால் பல இழப்புக்கள் நடந்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களும் விடுதிகளும் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் முழுமையான தகவல்கள் இல்லை.
கருக்கலைப்பு நிலையங்கள் தொடர்பில் ௭வரும் வாய் திறக்க மறுக்கின்றனர். சம்பவம் நடந்த பின்னர் தெரியப்படுத்தும் போது குறித்த நபர்கள் தலைமறைவாகும் சம்பவங்களும்இடம் பெறுகின்றன.
சமூக மட்டத்தில் பணிபுரிபவர்கள் தமக்கான கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி காலத்தின் தேவைகளை உணர்ந்து கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது ௭ன அவர் மேலும் தெரிவித்தார்