siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

புற்றுநோயின் எதிரிகளாம் இந்த உணவுகள்!

 

07.08.2012.










மட்டு. ஏறாவூரில் வாகனத்தில் வந்தவர்களிடம் ஆயுதமுனையில் 20 லட்சம் ரூபா கொள்ளை

 
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் வாகன கொள்வனவுக்கு வருகை தந்தவர்களை இன்னுமொரு வானில் வந்தோர் வழிமறித்து ஆயுதமுனையில் சுமார் 20 இலட்சத்து 09ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு மாவடிவேம்பு பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொப்பிகல படைமுகாமில் உள்ள இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏற்பாட்டில் இராணுவ சிப்பாயின் உறவினர் எட்டியாந்தோட்டையை சேர்ந்த கஹாரிகட பகுதியில் இருந்து வான் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மட்டக்களப்புக்கு வந்துள்ளார். இவருடன் மேலும் இருவரும் வந்துள்ளனர்.
இவர் கிரான் ஊடாக தொப்பிக்கலவுக்கு செல்வதற்கு பதிலாக வழிமாறி மாவடிவேம்பு பகுதிக்கு வந்துள்ளனர். இதன்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த வான் ஒன்று இவர்களை வழிமறித்துள்ளதுடன் அதில் இருந்து இறங்கிய ஐந்து பேர் இவர்களை சுற்றிவளைத்து ஆயுதமுனையில் மிரட்டியுள்ளதுடன் இவரிடம் வான் வாங்க வைத்திருந்த சுமார் 20 இலட்சத்து 09ஆயிரம் ரூபா பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வானில் வந்த அனைவரும் சிங்கள மொழியிலேயே உரையாடியதாகவும் அனைவரும் சிங்களவர்கள் எனவும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் ஏறாவூர் பொலிஸ்நிலையத்தில் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பில் வான் ஒன்று மோதியதில் டென்மார்க் நாட்டு பெண் படுகாயம்!

 
 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இன்று காலை வெளிநாட்டு பெண் ஒருவருடன் வான் ஒன்று மோதியதில் அவ் வெளிநாட்டு பெண் காயமடைந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டுக் பெண் காத்தான்குடி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த போது வான் ஒன்று இந்த பெண்ணுடன் மோதியதில் குறித்த வெளிநாட்டுப் பெண் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த வெளிநாட்டுப் பெண் டென்மார்க் நாட்டை சேர்ந்த செல்வி மிக்கியாகும்.
இவர் காத்தான்குடி பிரதேசத்தில் பெண்கணுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வருகின்றார்.
இவர் மட்டக்களப்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மறுபடியும் முதல்லேர்ந்து.... மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!!

Nayan Revives Her Relationship With Simpu  சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!
சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.
வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.
கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.
அதன்பிறகு தமிழில் ரொம்ப நாள் வரை நடிக்காமலே இருந்தார் நயன்தாரா (இப்போது தமன்னா இருக்கிறாரே... அப்படி!!).
பின்னர் மெல்ல அவரை மீண்டும் தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம் தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன் படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார் (சிவாஜி, குசேலன்). அதைத் தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை கோலிவுட்டில் ஆரம்பித்த நயன்தாரா, மீண்டும் தனுஷுடன் இணைத்துப் பேசப்பட்டார்.
ஆனால் அது சிறிது காலம்தான். வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த நான்கு வருடங்களாக மீடியாவின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.
இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம் செய்ய, மதம் மாறி, கையில் அவர் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு நயன்தாரா தயாராக இருந்த நிலையில், இருவரின் காதலும் திடீரென முறிந்தது.
இதற்கும் காரணம், பிரபுதேவாவின் நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார் நயன்தாரா.
இப்போது, மீண்டும் தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல் தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும் தன் பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார் (பிரபு தேவாவுடன் காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் ராசியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது).
இந்த நெருக்கத்துக்கு சாட்சியாக இருவரும் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இது எத்தனை நாளைக்கோ




காதல் கவிதைகள்

07.08.2012.
புகைப்படம்: ••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும் 
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாகப் பார்.
அப்போது தான்
அவள் தரும்
வலிகளைத் தாங்க
வசதியாய் இருக்கும் ....
எந்தன் உடல் மண்ணோடு சாயும் அந்த இறுதி நிமிடம் வரை காத்திருப்பேன்-உன் முகம் காண உன் நினைவுகளை சுமந்த படி...வருவாயா ?
,,,,.இது கவிதைப் பூங்கா சிந்தனை மலர்களின் அழகிய தோட்டம் இங்கே மலர்களை தொடாதே பறிக்காதே என்ற போர்டுகள் இல்லை யார் வேண்டுமானாலும் தொடலாம் முகரலாம் பறித்துக் கொள்ளலாம் பறித்தாலும் மீண்டும் பூத்துக் குலுங்கும்இந்த கவிதைப் பூக்கள்••► மரம், செடி, கொடிகளுக்கு கூட
சொல்லிவிட்டேன் என் காதலை
ஆனால்
உன்னிடம் மட்டும் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ◄•• ••► எத்தனை உறவுகள் இருந்தாலும்
நீ மட்டும் ஒரு நொடி இல்லை என்றால்
நான் ஒரு அநாதை தான் ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாய் பாரு
அப்போது தான்
அவள் தரும்
வலிகளை தாங்க வசதியாய்
இருக்கும் ◄•• ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை
நாம் ரசிக்கின்றோம். .
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄•• புகைப்படம்: ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை 
நாம் ரசிக்கின்றோம். . 
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு 
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄••திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் புகைப்படம்: ••► திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் ◄••

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே

பாகனை நம்பும் ஜனனி ஐயர்

Tuesday, 07 August 2012,
சின்னத்திரையிலும் மொடலிங் உலகிலும் வலம் வந்த ஜனனி ஐயர், ஆரம்ப நாட்களில் கொலிவுட் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பொலிஸ் பேபி வேஷம் கட்டிய பிறகு ஜனனி ஐயர் கொலிவுட்டில் மும்முரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார்.
பாகன் பட வேலைகள் முடிவடைந்ததும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த காதல்- கொமெடி படத்தில் அனுபவித்து நடித்தேன்.
நாயகன் ஸ்ரீகாந்த்துடன் இரண்டு டூயட் பாடல்களிலும் ஒரு 'சோலோ' பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன்.
நான் நடிக்கும் போது படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் எனக்கு சினிமா சம்பந்தமாக 'டிப்ஸ்' வழங்கினார்.
தமிழ் சினிமாவில் 'பாகன்' படம் என்னை புதிய உயரத்துக்கு கூட்டிச்செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!

 
 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நாளை புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும்.
இதில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை இழந்த தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு ஆனிராஜா கூறினார்

நாகரீக உடை அணிந்த சகோதரிகளை கடைக்கு கூட்டிச் சென்றவர் மீது தாக்குதல்! யாழில் சம்பவம்

 
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
நவநாகரீக உடை அணிந்து சென்ற தனது சகோதரிகளை கூட்டிக்கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சகோதரர், தனது முன்னிலையில் சகோதரிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்டபோது அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சம்பவ தினமன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் தனது சகோதரிகளை அழைத்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக யாழ்.நவீன சந்தைத் தொகுதிக்கு சென்றுள்ளார். குறித்த சகோதரிகள் நவநாகரிகமான ஆடைகளை அணிந்தே சென்றிருந்தனர்.
நவீன சந்தைப் பகுதிக்குள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபார நிலையத்தின் உரிமையாளர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த சகோதரிகளை பகிடிவதை செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்களின் சகோதரன் குறித்த நபரிடம் நியாயம் கேட்டு அவரையும் திட்டித் தீர்த்தார். இதன்பின்னர் அங்கிருந்து சகோதரியைச் கூட்டிக் கொண்டு கட்டடத் தொகுதியை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கையில் இடைமறித்த குறித்த நபர் இவரை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பித்து யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள தற்காலிக பொலிஸ் பாதுகாப்பு நிலையத்தில் இவர் தஞ்சமடைந்தார்.
மீண்டும் அங்கு வந்தவர்கள் இவரை பொலிஸார் முன்னிலையில் தலைக்கவசத்தினாலும் வீதியில் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக் கம்பியினாலும் தாக்கினர்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஒன்றுபடவே மூவரையும் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைச் சேர்ந்த தந்தையும் மகளும் பலி

07.08.2012.
கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.