செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
நேற்று திங்கட்கிழமை இரவு மாவடிவேம்பு பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொப்பிகல படைமுகாமில் உள்ள இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏற்பாட்டில் இராணுவ சிப்பாயின் உறவினர் எட்டியாந்தோட்டையை சேர்ந்த கஹாரிகட பகுதியில் இருந்து வான் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மட்டக்களப்புக்கு வந்துள்ளார். இவருடன் மேலும் இருவரும் வந்துள்ளனர்.
இவர் கிரான் ஊடாக தொப்பிக்கலவுக்கு செல்வதற்கு பதிலாக வழிமாறி மாவடிவேம்பு பகுதிக்கு வந்துள்ளனர். இதன்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த வான் ஒன்று இவர்களை வழிமறித்துள்ளதுடன் அதில் இருந்து இறங்கிய ஐந்து பேர் இவர்களை சுற்றிவளைத்து ஆயுதமுனையில் மிரட்டியுள்ளதுடன் இவரிடம் வான் வாங்க வைத்திருந்த சுமார் 20 இலட்சத்து 09ஆயிரம் ரூபா பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வானில் வந்த அனைவரும் சிங்கள மொழியிலேயே உரையாடியதாகவும் அனைவரும் சிங்களவர்கள் எனவும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் ஏறாவூர் பொலிஸ்நிலையத்தில் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்

0 comments:
கருத்துரையிடுக