siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!

 
 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நாளை புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும்.
இதில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை இழந்த தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு ஆனிராஜா கூறினார்

0 comments:

கருத்துரையிடுக