siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

துள்ளிவிளையாடு படத்திற்காக பாடினார் மிஸ்கின்!

08.08.2012.

வின்சென்ட் செல்வா ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’ என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.
படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.
ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.
இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா..
என்று தொடங்கும் பாடலை தனது குருநாதருக்காக பாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் கேட்டோம்:
என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஸ்கின்) தான். யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது . முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது.
என்னுடைய ‘ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது’, ‘ஆல்தோட்ட பூபதி நானடா’, ‘அ முதல் அக்கு தானடா’, வரிசையில் மிஸ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். பாடி உதவிய மிஸ்கினுக்கு நன்றி என்றார்.

0 comments:

கருத்துரையிடுக