siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இலங்கையில் மீன்பிடிக்க சீனர்களுக்கு உரிமை- இலங்கை கடற்படையே அம்பலப்படுத்தியது!

 
08.08.2012.
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழீழ மீனவர்களும் காலம்காலமாக பாக் ஜலசந்தி கடற்பரப்பில் எந்தவித பிரச்சனையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சதீவில் வலைகளை உலரவைத்து ஓய்வெடுத்து ஆண்டுக்கொருமுறை நடைபெறும் அந்தோனியார் கோயில் திருவிழாவில் பங்கேற்று தொப்புள் கொடி உற்வுகளாய் தமிழர் கடற்பரப்பில் வலம் வந்தனர்.
ஆனால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இனவெறி கொண்ட சிங்களக் கடற்படையினர் தமிழர் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலே சுட்டுக் கொலை செய்வது என்ற போக்கையே கடைபிடித்து வருகிறது.
இதுவரை 600 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கச்சதீவில் சிங்களக் கடற்படையினருடன் சீனர்கள் நடமாடுவதாக முதலில் புகார் எழுந்தது.
அந்தோனியார் திருவிழாவுக்குப் போன தமிழக மீனவர்களுக்கு சீன மொழியிலான கூடாரங்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலின் போது சீனர்களும் உடனிருந்தனர் என்று சில சம்பவங்களின் போது தமிழக மீனவர்கள் புகார் கூறியிருந்தனர்.
ஆனால் அதையெல்லாம் இலங்கை கடற்படை மறுத்து வந்தது. இந்திய அரசும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தது.
திருகோணமலை அருகே சீனர்கள் படகு
இந்நிலையில் இலங்கை கடற்படை நேற்று வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், தமிழர்கள் மீன்பிடிக்கும் இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் அதாவது அம்பாறையின் பொத்துவில் பிரதேசத்தில் அருகம்பே கடற்பரப்பில், 2 சீன படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அதில் ஒரு படகில் 19 சீனர்களும் மற்றொரு படகில் 18 சீனர்களும் இருந்தனர் என்றும் கூறியுள்ளது. இவர்கள் அனைவரும் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு திருகோணமலை துறைமுக காவல்நிலைய பொலிஸாரிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 2 சீன படகுகளும் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் துடிதுடிப்பு
இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளைக் கடந்துதான் சீனர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் கடற்பரப்பைப் போலவோ, இந்தியா- இலங்கை கடற்பரப்பைப் போலவோ சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே எந்த ஒரு கடற்பரப்பும் இல்லாத நிலையில் சீனர்கள் எப்படி இலங்கை கடற்பரப்பில் அதுவும் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் நுழைந்தனர்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பாரம்பரிய உரிமை கொண்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களுக்கு உரிமை உள்ள கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்தாலே சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படை எங்கோ இருந்து சம்பந்தமே இல்லாமல் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனர்களை சுட்டுக் கொல்லாமல் "பாதுகாப்பாக" கைது செய்திருக்கிறது
இதனிடையே சீன ஊடகங்களோ, கைது செய்யப்பட்ட சீனர்கள் அனைவரும் இலங்கை மீன்பிடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர்கள் என்று கூறுகின்றன. அப்படி இலங்கை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் எனில் இலங்கை கடற்படை எப்படி கைது செய்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனர்களுக்கு மீன்பிடி உரிமை
இதற்குப் பதிலாக சொல்லப்படும் ஒரு பதில் என்னவெனில், இலங்கையில் இருக்கும் சீனர்களுக்கு 200 கடல் மைல் தொலைவில் அதாவது ஆழ்கடலில் மீன்பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் 10-15 கடல்மைல் தொலைவிலேயே மீன்பிடித்தனர். இதனால்தான் இவர்களை இலங்கை கடற்படை கைது செய்ய வேண்டிய நிலைமை வந்திருக்கிறது என்கின்றனர் அம்பாறை உள்ளுராட்சி நிர்வாகிகள்.
ஆக இலங்கையில் சீன மீனவர்கள் "பாதுகாப்பாக" தமிழர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை மட்டும் உலகுக்கு இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையாலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்

நான் படத்திற்க்கு U/A சான்றிதழ்

08.08.2012.

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக 25 ஆவது படம், கதா நாயகனாக தயாரிப்பாளராக முதல் படம் நான்.
மேலும் மறைந்த ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா வின் மாணவர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் முதல் படம் என்கிற பெருமைகளைப் பெற்ற படம் நான். வியாபார ரீதியிலும் இந்தப்படத்துக்குப் பெருமை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நான் திரைப்படத்தின் பாடல்களும் டிரையலரும் வெளியிடப்பட்டன. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் போட்டிக் கொண்டு தமிழகத்தில் திரையிடும் உரிமையை வாங்கியிருக்கின்றனர்.
நீண்ட நாட்களாகப் பல படங்கள் வந்தும் எந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்காமல் இருந்த சன் நெட்வொர்க் நான் படத்தைப் பார்த்த உடன் மிகவும் ஆர்வத்துடன் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது. இவை தவிர வெளி நாட்டு உரிமைகளும் விற்றுத்தீர்ந்து விட்டன.
தணிக்கைக்குழுவினரால் U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையிட இருக்கிறது. தான் இசையமைத்த 25 ஆவது படம் மேலும் கதா நாயகனாக தன்னுடைய முதல் படம் என்கிற வகையில் விஜய் ஆண்டனி மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். மேலும் சிறந்த படங்களைத் தொடர்ந்து தயாரிக்கவும் நடிக்கவும் இந்த வியாபாரம் தனக்கு ஊக்கமளித்திருப்பதாகவும் விஜய் ஆண்டனி கூறினார்

நயன்தாராவுடன் மீண்டும் காதலா? – சிம்பு விளக்கம்

08.08.2012.

நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள்.
நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து நலம் விசாரித்தப்படி பேசத்துவங்கியதும், மற்ற நடிகர்கள் அவர்களை விட்டு ஒதுங்கினார்கள். நீண்டநேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
பிரபுதேவாவுடனான காதலை நயன்தாரா முறித்துள்ள நிலையில் சிம்புவை அவர் சந்தித்து பேசியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே உடைந்து போன காதலை அவர்கள் புதுப்பித்துக் கொண்டதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டனர். அப்படத்துக்காக நயன்தாராவின் உதட்டை சிம்பு கடிப்பது போன்று சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பிறகு திடீரென தகராறு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர் களாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் காதல் என்று சொல்வது முட்டாள்தனமானது. நாங்கள் நடிகர்களாக உள்ளோம். ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறோம். நட்பையும் பகிர்ந்து கொள்கிறோம். சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசிக்கொள்கிறோம். அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சிம்பு கூறினார்

துள்ளிவிளையாடு படத்திற்காக பாடினார் மிஸ்கின்!

08.08.2012.

வின்சென்ட் செல்வா ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’ என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.
படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.
ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.
இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா..
என்று தொடங்கும் பாடலை தனது குருநாதருக்காக பாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் கேட்டோம்:
என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஸ்கின்) தான். யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது . முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது.
என்னுடைய ‘ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது’, ‘ஆல்தோட்ட பூபதி நானடா’, ‘அ முதல் அக்கு தானடா’, வரிசையில் மிஸ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். பாடி உதவிய மிஸ்கினுக்கு நன்றி என்றார்.

வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌

08.08.2012.‌

பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னா‌‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌. அவருக்‌கு வயது 87.
1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த ஏழை‌படும்‌ பா‌டு படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க அறி‌முகமா‌னவர்‌ என்‌னா‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌. தொ‌டர்‌ந்‌து நம்‌நா‌டு, நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவர்‌.
சமீ‌பத்‌தி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன தொ‌ட்‌டல்‌ பூ‌ மலரும்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ வடிவேலுவுடன் பே‌சி‌ய “வரும்‌… ஆனா‌ வரா‌து” என்‌கி‌ற வசனம்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ல்‌லம்‌ பே‌சப்‌பட்‌டது. ‌
வயதைப் பொருட்படுத்தாத உழைப்பாளி அவர். தனது தள்ளாத வயதிலும் கூட, இளைஞனைப் போல தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தவர்‌ 07.08.2012 அன்று மதி‌யம்‌ சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு கா‌லமா‌னா‌ர்‌.
கடந்‌த நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ அவரது மனை‌வி‌ ரா‌ஜம்‌ கா‌லமா‌னா‌ர்‌. இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர்‌. அனை‌வருக்‌கும்‌ தி‌ருமணம்‌ ஆகி‌வி‌ட்‌டது.
ரா‌யப்‌பே‌ட்‌டை‌ ரா‌யி‌ட்‌ கா‌லனி‌யி‌ல்‌ உள்‌ள அவரு வீ‌ட்‌டி‌ல்‌ பி‌ரே‌தம்‌ வை‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. 08.08.2012 அன்று‌ மா‌லை‌ 4 மணி‌க்‌கு அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடை‌பெ‌றுகி‌றது

நான்கு மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசான்!

08.08.2012.

பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து தற்போது அடிக்கடி பேசப்படுகிறது.
பார்வையுள்ளவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும் இவ்வாறான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர் என்பது பியகமயில் நடந்த சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது. குறித்த பார்வையற்ற நபர் பட்டதாரி ஆசிரியராவார்.
பியகம பிரதேச பெண்கள் பாடசாலையொன்றில் 10 ஆம் தர மாணவிகளுக்கு கற்பித்த குறித்த ஆசிரியர், கற்பித்தலின் போது தனக்கு உதவிபுரியும் மாணவிகளை இதற்கு பயன்படுத்தியுள்ளார். பாட முடிவில் தனக்கு உதவி செய்த மாணவிகளை ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஆட்கள் நடமாட்டமற்ற இடங்களில் வைத்த மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவங்கள் பல தடவைகள் நிகழ்ந்த போதிலும் அவமானம் காரணமாக பாடசாலை நிர்வாகத்திடமோ அல்லது பெற்றோரிடமும் குறித்த மாணவிகள் முறையிட்டிருக்கவில்லை. எனினும் சமீபத்தில் அவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட மாணவியொருவர் இச்சம்பவம் பற்றி பெற்றோருக்குக் கூறியதையடுத்து பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்தனர். குறித்த ஆசிரியர் இவ்வாறான ஈனச் செயல்களில் பல தடவைகள் ஈடுபட்டமை விசாரணைகளையடுத்து தெரியவந்துள்ளது. நான்கு பாடசாலை மாணவிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற கைது செய்யப்பட்டு மஹர நீதிமன்றில் நிறுத்தப்பட்ட குறித்த ஆசிரியரை விளக்கமறயலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பியகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் ஏழு வருடங்களுக்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர் நியமத்தின் குறித்த பாடசாலையில் இணைந்து கொண்டார்.
இவர் தொடர்பில் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

விஜய்க்கு போட்டி போடும் நடிகைகள்!

08.08.2012.

ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார்.
திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பாட்டு பாட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முருகதாஸிடம் இந்த படத்தில் தனக்குமொரு வாய்ப்பு தரும்படி அவராகவே வ்முன்வந்தௌ கேட்டுள்ளார் ஆண்ட்ரியா.
முருகதாஸும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம். நடிகை லட்சுமி ராய் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அவரது படத்தில் வாய்ப்பு தருமாரு கேட்டுள்ளாராம். லட்சுமிராய் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர்

மகிழ்ச்சியில் மாற்றான் டீம்! சோகத்தில் கே.வி. ஆனந்த்!

07.08.2012.

கே.வி.ஆன்ந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. மாற்றான் படத்தின் சில நிமிட டிரெய்லரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், மாற்றான் படத்தின் பாடல்கள் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ள கே.வி.ஆனந்த், இதுவரை சூர்யாவின் படங்களில் நடித்த ஹீரோயின்கள் அனைவரையும் விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
த்ரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ருதிஹாஸன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான நடிகைகள் விழாவிற்கு வருகை தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்களாம். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் கண்டிப்பாக வருவார்களாம். மாற்றான் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசைநிகழ்ச்சி நடத்தவிருப்பதாக தெரிகிறது.
மேலும் பல நடிகைகளும், வெளிநாட்டு நடனக்கலைஞர்களும் நடனமாடுகிறார்களாம். மாற்றான் பட இசை வெளியீட்டு விழா ஒரு பிரம்மாண்ட நட்சத்திர திருவிழாவாக நடக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாற்றான் படக்குழு மற்றொரு சோகமான செய்தியையும் கூறுகிறது.
ஆடியோ ரிலீஸ், படம் ரிலீஸ் என பல வேலைகளில் தீவிரமாக ஈட்பட்டுக்கொண்டிருந்த கே.வி.ஆனந்தின் மூட்அவுட் தான் அந்த சோகமான செய்தி. சமீபத்தில் வெளிவந்த ஒரு வார இதழில் மாற்றான் “காப்பிபடம்’’ என வெளிப்படையாகவே செய்தி வந்திருந்தது தான் கே.வி.ஆனந்திற்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது.
மாற்றான் படத்தைப் பற்றி பலதரபட்ட செய்திகள் வந்தாலும் “இது காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் அல்ல” என்று திட்டவட்டமாக மறுத்துவரும் கே.வி.ஆனந்த் படிக்க தெரிந்தது முதல் வாசகனாக இருக்கும் தனது ஃபேவரிட் பத்திரிகையிலேயே இதுபோன்ற செய்தி வந்ததால் அதை மறுத்து தன்நிலை விளக்கி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஆரம்ப முதலே சொல்லிவருவது போல ”புத்தகத்தில் படித்த கதாபாத்திரங்கள் எனது கதையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றனவே தவிர இது வேறு ஒருவரின் கதை அல்ல” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு: பலரின் உயிரை காப்பாற்றிய குழந்தைகள்

 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவின் விஸ்கோசின் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது குழந்தைகள் இருவர், பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்குள் இருந்த குழந்தைகள் 2 பேர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஆலயத்திற்குள் நுழைவதையும், அவர் சுடத் தொடங்கியதையும் பார்த்துள்ளனர்.
பயத்தில் குழந்தைகள் இருவரும் கத்தியுள்ளனர். இவர்களின் அலறலை கேட்ட பலர் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளனர்.
குழந்தைகள் சத்தமிட்டு எச்சரிக்கை கொடுத்து, பலரின் உயிரையும் காப்பாற்றியதை பலரும் பாராட்டி உள்ளனர்.
அதேசமயம் குழந்தைகள் இருவரையும் சரக்குகள் வைக்கும் அறைக்குள் இழுத்தச் சென்ற ஜஸ்கிரண் கவுர் என்ற பெண், அவ்வறையை பூட்ட முடியாததால் யாரும் உள்ளே வராதபடி கதவை தாங்கி பிடித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் அவரின் கையிலும் குண்டடிபட்டுள்ளது.

இங்கிலாந்தில் மகளின் காதலன் மீது இனவெறி தாக்குதல்: பெற்றோருக்கு சிறைத் தண்டனை

 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
தனது மகள் கறுப்பின ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர், கோபத்தில் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் சுவன்சீ பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிட் மற்றும் பிரான்செஸ் சாம்பியன். இவர்களது மகள் ஜானே சாம்பியன்(வயது 17).
இவர் தனது கறுப்பின ஆண் நண்பரான அப்லோன்ஸ் க்யூப்வுடன் உணவகம் ஒன்றில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
இதை தங்கள் குடும்பத்திற்கு அவமானமாக கருதிய தம்பதியர், இருவரையும் கையால் குத்தியும் அடித்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த கறுப்பின வாலிபரின் பெற்றோர்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜானே சாம்பியனின் தந்தைக்கு 12 மாதங்களும், தாய்க்கு 9 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மது அருந்திவிட்டு குடிபோதையில் அவ்வாறு செய்ததாக குற்றத்தை ஒத்துக் கொண்ட அவர்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்