siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

'வை திஸ் கொல வெறி" : சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

09.08.2012.சுகாதார அமைச்சுக்கு முன்பாக வை திஸ் கொலவெறி என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் பல ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தன.

சுகாதாரத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஓய்வு பெற்ற முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் அமர்த்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றமை பாரதூரமான குற்றமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

சுகாதாரத் துறையில் தொடர்ந்து இடம்பெற்ற சில ஊழல் மோசடிகள் குறித்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அவர் ஏன் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி விசாரணைக்குழுவினரால் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினர்.

எனவே சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக தகுதியுடைய ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு சுகாதாரத் துறையின் ஊழல்களுக்கு எதிரான ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

2008 முதல் 2011 வரையில் 2,48,492 தாய்மார் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்

09.08.2012.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்பெண்களாக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார் ௭னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலனோம்பு அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.தே.க. ௭ம்.பி. அஜித் பி. பெரேராவினால் ௭ழுப்பப்பட்ட பிரேரணைக்கு சபையில் சமர்ப்பிக்கபட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2008இல் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேரில் 40 ஆயிரத்து 665 தாய்மாரும் 2009 இல் சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பணிப்பெண்களில் 60 ஆயிரத்து 448 தாய்மாரும் உள்ளடங்கியிருந்தனர்.

அதேபோன்று 2010 ஆண்டு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 807 பேரில் 73 ஆயிரத்து 944 தாய்மாரும் 2011 இல் பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து பதினோராயிரத்து 96 பேரில் 73 ஆயிரத்து 435 பேரில் தாய்மாரும் உள்ளடங்கியுள்ளனர். இதன் படி கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் இருந்து இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 தாய்மார் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட 58 நகரங்களில் மின் தடை

09.08.2012.
வெவ்வேறு நேரங்களில் அமுல் வெவ்வேறு நேரங்களில் அமுல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி திட்டத்தின் வேயாங்கொடை வரையிலான விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பினால் இன்று வியாழக்கிழமை கொழும்பு உட்பட 58 பிரதான நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வெவ்வேறு நேரங்களில் மேற்படி நகரங்களில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை அறிவித்துள்ளது. மேற்படி மின் விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் 300 மெகாவோட் மின்சாரம் செயலிழக்கப்பட்டிருப்பதே மின்சாரம் தடைப்படுவதற்கு காரணம் ௭ன்று தெரிவித்துள்ள மின்சார சபை, மின் விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் வகையில் விசேட பொறியியலாளர் குழுவொன்று திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் காலை 8.30 முதல் 10.45 மணிவரையிலும், 10.45 முதல் 1.00 மணிவரையிலும், 1 மணி முதல் 3.15 மணிவரையிலும் மற்றும் 3.15 முதல் 5.30 மணிவரையிலுமான வெவ்வேறு நேரங்களில் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு நகரங்களில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை தெரிவித்துள்ளது. ௭னினும் கொழும்பு நகரின் மின் தடை தொடர்பில் நேரம் ௭துவும் குறிப்பிடப்படவில்லை.

இராணுவ செயலமர்வில் முன்னாள் போராளிகளின் விசேட நடன நிகழ்வு இன்று

 09.08.2012.கொழும்பில் நடைபெறுகின்ற இராணுவ செயலமர்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விசேட நடன நிகழ்வு இன்று காண்பிக்கப்படவுள்ளது.

இதில் கோகுலன் ௭ன்ற புனர்வாழ்வு பெற்ற போராளி பாடலொன்றை பாடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இராணுவச் செயலமர்வில் இரண்டாவது நாள் இன்று கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. காலையில் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் புனர்வாழ்வு படிமுறைகள் தொடர்பாக அனுபவங்களை இலங்கை இராணுவம் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதென்றும் அவர் கூறினார்.

மைக்ரோ ஓவனில் உள்ளாடையை உலர வைத்த வினோத நபர்

09.08.2012.
ஈரமான காலுறை மற்றும் உள்ளாடையை மைக்ரோ ஓவனில் உலர வைத்ததால் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. பிரிட்டனின் தென்மேற்கில் உள்ளது டோர்செட். இங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நபர் ஒருவர், ஈரமான தனது கால் உறைகள் மற்றும் இரண்டு உள்ளாடைகளை மைக்ரோ ஓவனில் வைத்து உலர வைத்துள்ளார்.
அதிகப்படியான வெப்பத்தில் இந்த துணிகள் தீப்பற்றி, சமையலறை முழுவதும் பரவியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சமையலறையில் பரவிய தீயையும் அணைத்தனர்.
இனிமேல் மைக்ரோ ஓவனை சமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என அந்த நபருக்கு அறிவுரை வழங்கிச் சென்றனர் தீயணைப்பு வீரர்கள்

மலேசியாவில் பேயோட்டும் சடங்கில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக பலி

09.08.2012.
மலேசியாவில் பேயோட்டும் சடங்கில் மூன்று வயது சிறுமி பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மலேசியாவின் வடபகுதியில் உள்ள பெனாங் மாகாணத்தில் பேயோட்டும் சடங்கொன்று நடந்தது.
தாங்கள் அங்கு சென்று பார்த்த போது, இந்தோனேஷிய நாட்டின் பணிப்பெண் உட்பட எட்டு பேர் இருந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் இருட்டு அறையில் மூன்று வயது சிறுமியை சூழ்ந்து கொண்டு ஏதோ மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தனர்.
இவ்வாறு செய்ததால் அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதற்கு இந்த சிறுமியின் பெற்றோரும், அந்த பணிப்பெண்ணுமே காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் பேயோட்டும் சடங்கு பல மணி நேரங்கள் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

நேட்டோ விமானத்தளத்தில் உளவு பார்த்தவர் கைது

09.08.2.12.
ஜேர்மனியின் ராம்ஸ்டீன் பகுதியில் உள்ள நேட்டோ விமானத்தளத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 60 வயது முதியவர் ஒருவர் உலாவியதன் காரணமாக அவரை பொலிஸார் கைது செய்தனர். மான்ஃபிரெட் கே என்ற பெயருடைய இவர், இராணுவ ரகசியங்களை தனது கணணியில் பதிந்து பின்பு அவற்றை மூன்றாம் நபரொருவருக்கு கடத்தி விடுகிறார் என்ற சந்தேகம் உள்ளது.
ரைன்லேண்ட்- ப்லாட்டினேட்டில் உள்ள மாநில குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் இந்த முதியவரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மான்ஃபிரேடின் கைது மற்றும் விசாரணை குறித்து நேட்டோவின் செய்தித்தொடர்பாளி கார்மென் ரோமெரோ, நேட்டோ, புலனாய்வு விடயங்களில் எதுவும் நாங்கள் தலையிடுவதில்லை என்று மட்டும் தெரிவித்திருக்கின்றார்

நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை

09.08.2012.
நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நியூசிலாந்தில் வடக்கு தீவில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள தொன்காரிரோ என்ற எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அந்த எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டதுடன், உள்ளே இருந்து புகையும், சாம்பலும் வெளியேறுகிறது.
எனவே அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அந்த எரிமலையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று அந்த எரிமலையை ஆய்வு செய்த போது, ஒரு வீட்டின் அளவுக்கு 3 துளைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது புகையும், சாம்பலும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது குறிப்பிடத்தக்கது

மனிதர்களைத் தின்னும் சுறாமீன்களை பிடிக்க உத்தரவு

09.08.2012.
பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் காணப்படும் மனிதர்களை தின்னும் Bull Shark சுறாக்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரி புரூனெட்டியர் கூறுகையில், தொழில் ரீதியாக சுறாமீன்களை பிடிப்பவர்களையே இதற்கு நியமிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, இவர் உள்நாட்டு அரசியல்வாதிகளையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5ஆம் திகதி சுறா மீன் தாக்குதலில் ஒருவரது வலது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த இருபது மாதங்களில் குறைந்தது 8 பேர் சுறா மீனின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

சிரியாவில் மருந்துகள் இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள்: மக்களின் உயிருக்கு ஆபத்து

புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
சிரியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர் சண்டை நடந்து வருவதால், மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சிரியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவும் அளித்து வருவதால், டமாஸ்கஸ், ஹாம்ஸ், அலெப்போ உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.
இதனால் இங்குள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினாலும், மூலப்பொருட்கள் கிடைக்காததாலும் மருந்து நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளன.
போதிய மருந்துகள் கிடைக்காததாலும், தொடர் சண்டையினால் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும் சில மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு, புற்றுநோய், மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு, காசநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பல மாதங்களாக நடக்கும் சண்டையால் சிரியாவின் சுகாதாரத் துறைக்கு சொந்தமான, 200 ஆம்புலன்சுகள் சேதமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்து விட்டதால் உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிரியாவிலிருந்து, 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.