siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்

30.08.2012.BYrajah.
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.

ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன.

உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி

By.rajah.
திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார்.
ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார்.
உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார்.
அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்.
இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பின்னர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் திருடியவரைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் அதே நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்துள்ளார்.
மேலும் கையடக்கத்தொலைபேசியினை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நோயின் தாக்கத்தால் அவதியுற்றுவரும் அந்நபர் திருடிய கையடக்கத்தொலைபேசியின் விலை வெறும் 24 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
ஆனால் அவரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதென்பதனைத் திருடியவர் அறிந்திருக்கவில்லை.
இபோலா வைரஸானது இபோலா காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. தொற்றும் இக்காய்ச்சலானது அரிப்பு, வயிற்றோட்டம், வாந்தி, இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

ஆஸி செல்லமுற்பட்ட 39 பேர் ஒரு கோடியே 95 இலட்ச ரூபா பிணையில் விடுதலை

30.08.2012.BY.rajah.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரில் 39 பேரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.௭ம்.௭ன்.பி. அமரசிங்க தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டார்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் ஏனைய நால்வருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிவான், அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பணித்தார். நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.

39 பேருக்கும் வழங்கப்பட்ட சரீரப் பிணைகளின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாகும். இந்த வழக்கை ௭திர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்

அமெரிக்காவை மிரட்டும் ஐசக் சூறாவளி

30.08.2012.BYrajah.பிந்திய செய்தி
அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாபிந்திய க 130 கி.மீ வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கத்ரினா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் 18 ஆயிரம் பேர் பலியாயினர்.
கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
லூசியானாவின் கவர்னரான பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய அதிகாரி

30.08.2012.BY.rajah.
சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பி ச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது.
அவர் மீது பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

தனது சக தோழியை சீப்பால் குத்திக் கொலை செய்த பெண்

30.08.2012.BY.rajah.
லண்டனில் பரபரப்பான கடைத் தெருவில் 15 வயது இளம் பெண், சக தோழியை சீப்பால் கத்திக் கொலை செய்தார். மத்திய லண்டனில் உள்ள பிம்லிகோ பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா டோக்லாஸ்(வயது 15). கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னி பகுதியை சேர்ந்தவர் ராவுப்பின் மகள் ஜூலி.
இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
கடந்தாண்டு மே 7ஆம் தேதி தெற்கு லண்டனில் பாட்டர்சீ பகுதியில் உள்ள பால்கன் சாலையில் ஒரு கடை முன்பு நின்றிருந்த ஜூலியுடன், ரெபேக்கா டோக்லாசும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ரெபேக்கா, தன் தலையில் சொருகியிருந்த உலோக சீப்பை எடுத்து கைப்பிடி பகுதியில் இருந்த இரும்புக்கம்பியால் ஜூலியின் தலையில் சரமாரியாக குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜூலிக்கு ரத்தம் தொடர்ந்து வெளியேறியது. இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஜூலியை சீப்பால் குத்துவதற்கு முன்பாக தனது பிளாக்பெரி போனையும், பையையும் அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்துள்ளார் ரெபேக்கா டோக்லாஸ். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டில் இருந்த அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். ரெபேக்கா டோக்லாஸ் ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜூலி அவதூறு பரப்பியதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த ரெபேக்கா ஜூலியை கொலை செய்ததும் தெரியவந்தது.
டோக்லாஸ் சீப்பின் உலோக பகுதியால் குத்தியதில் ஜூலியின் மண்டை ஓடு வரை துளைக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதற்கிடையில் கோமா நிலையிலேயே இருந்த ஜூலி, நினைவு திரும்பாமலேயே கடந்த செப்டம்பரில் உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸ் குக் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சீப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ஜூலி கொலை வழக்கில் உலோக பிடியுள்ள சீப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அழகு சாதன பொருட்களும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், ஆபத்தில்லாத அழகுப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

30.08.2012.BY.rajah.புகை படங்கள் காணொளி கள் .
கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது. இசாக் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது.
தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இப்புயலால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இப்புயல் வீசியதால் மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக அம்மாகாணம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.
வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும்.
எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்.

கடும் நிலச்சரிவு:
புயல் தாக்கியதை தொடர்ந்து இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை

 வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
பாகிஸ்தானில் கிறிஸ்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், தனி மாகாணம் உருவாக்கித் தரும் படி அந்நாட்டு கிறிஸ்துவ அமைப்பினர் அரசிடம் கோரியுள்ளனர். புனித நூலான குர்ரானை அவமதித்ததாக கூறி அந்நாட்டு கிறிஸ்துவ சிறார்கள் இரண்டு பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மனநிலை சரியில்லாத அந்த சிறுவர்கள் மீது மத துவேஷ குற்றச்சாட்டு சுமத்தி தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு, பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் கிறிஸ்துவ நல கூட்டமைப்பின் தலைவர் யூனுஸ் மாசிக் பட்டி கூறுகையில், பாகிஸ்தானில் 20 லட்சம் கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர்.
மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை.
போதிய பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள எங்களுக்கு, தனி மாகாணம் உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும், பாகிஸ்தானில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புகளும் இந்த கோரிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும், இதற்கு அரசியல் தலைவர்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்

முன்னேஸ்வரம் ஆலய மிருகப் பலி விவகாரம்! வேறு சமய குழுக்கள் தலையிட வேண்டாம்! அகில இலங்கை இந்து மாமன்றம்

 
 வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
இந்து ஆலயங்களில் மிருகப்பலி செய்ய வேண்டாமெனக் காலத்துக்குக் காலம் நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம். இது எமது சமயத்திற்கு ஒவ்வாத, ஏற்றுக்கொள்ள முடியாத பாவச்செயல் எனச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். என அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்காக மிருகங்களையோ பட்சிகளையோ எந்த ஓர் உயிர் இனத்திற்கும் ஆலயத் திருத்தலத்திலோ சுற்றாடலிலோ கொடுமைசெய்வதை அனுமதிக்க முடியாது என அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் 2012 செப்டம்பர் முதலாம் திகதி மிருகபலி நிகழ்வு இடம்பெற இருப்பதையறிந்து வேதனைப்படுகின்றோம்.
அதனைச் செய்யவேண்டாமென ஆலய நிர்வாகத்தினரையும், பூசகர்களையும் வேண்டுகின்றோம்.
அதேநேரம் அரசியல்வாதிகளையும், இந்து அல்லாத வேறு சமய குழுக்களையும் இதில் தலையிடவேண்டாமென வேண்டுகின்றோம்.
மேலும், இதனை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ மதத்துவேச நிலைமையை ஏற்படுத்துகின்ற நிலைமையாகவோ மாற்ற வேண்டாம்.
இந்தப் பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை இந்துக்களிடமே விட்டுவிடுங்கள்.
வழிபாட்டுத் தலத்தில் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் எழலாம். சமூக நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் நிகழ்வு இடம்பெறும் போது அதனை அந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும்.
அதே நேரத்தில் சமூக விடயங்கள் சமய நம்பிக்கைகளுடன் கலக்கப்படக்கூடாது. எமது சமயத்தின் புனிதமான கோட்பாடுகளுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களின் புனிதத்திற்கோ அல்லது தெய்வீகத் தன்மைக்கோ எவரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

150 அகதிகளுடன் சென்ற படகு இந்தோனேசிய கடலில் மூழ்கியது, அறுவர் கரையேறினர்

 
வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah,
சுமார் 150 அகதிகளுடன் சட்டவிரோதமாக சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அறுவர் மட்டும் கரையேறியுள்ளனர். இப்படகில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல பெண்களும் அடங்குவதாக அவ் அறுவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த படகை தேடும் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு ஹெலிக்கெப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டவிரோத படகில் சென்றவர்கள் ௭ந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ௭ன்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
எனினும் இப்படகில் பயணித்தவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றதனால் தான் கடல் மூலம் அவுஸ்திரேலியா வருவதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டோம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது