30.08.2012.BYrajah.பிந்திய செய்தி |
அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள ஐசக்
சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது.
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா
உள்ளிட்ட மாகாணங்களில் ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாபிந்திய க 130 கி.மீ வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கத்ரினா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் 18 ஆயிரம் பேர் பலியாயினர். கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். லூசியானாவின் கவர்னரான பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. |
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
அமெரிக்காவை மிரட்டும் ஐசக் சூறாவளி
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
செய்திகள்