siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பாகிஸ்தானில் மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை

 வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
பாகிஸ்தானில் கிறிஸ்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், தனி மாகாணம் உருவாக்கித் தரும் படி அந்நாட்டு கிறிஸ்துவ அமைப்பினர் அரசிடம் கோரியுள்ளனர். புனித நூலான குர்ரானை அவமதித்ததாக கூறி அந்நாட்டு கிறிஸ்துவ சிறார்கள் இரண்டு பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மனநிலை சரியில்லாத அந்த சிறுவர்கள் மீது மத துவேஷ குற்றச்சாட்டு சுமத்தி தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு, பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் கிறிஸ்துவ நல கூட்டமைப்பின் தலைவர் யூனுஸ் மாசிக் பட்டி கூறுகையில், பாகிஸ்தானில் 20 லட்சம் கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர்.
மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை.
போதிய பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள எங்களுக்கு, தனி மாகாணம் உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும், பாகிஸ்தானில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புகளும் இந்த கோரிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும், இதற்கு அரசியல் தலைவர்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்