By.rajah. |
திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம்
கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு
முகங்கொடுத்துள்ளார்.
ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து
கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார்.
உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே
திருடியுள்ளார்.
அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ்
தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்.
இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு
செய்துள்ளதுடன் பின்னர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் திருடியவரைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் அதே நோய்
அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்துள்ளார்.
மேலும் கையடக்கத்தொலைபேசியினை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நோயின் தாக்கத்தால் அவதியுற்றுவரும் அந்நபர் திருடிய
கையடக்கத்தொலைபேசியின் விலை வெறும் 24 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
ஆனால் அவரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதென்பதனைத் திருடியவர்
அறிந்திருக்கவில்லை.
இபோலா வைரஸானது இபோலா காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. தொற்றும் இக்காய்ச்சலானது
அரிப்பு, வயிற்றோட்டம், வாந்தி, இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன்
உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியது.