30.08.2012.BY.rajah. |
சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே
தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி என்பது
பேசப்படாத ஒரு பொருளாகவே காணப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நூலகர் காந்தலட்சுமி
அருளானந்தம் தெரிவித்தார்.
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய டாவட்டங்ககைச் சேர்ந்த 46
நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையாளிக்கும் நிகழ்வும் நூலகர்களுக்கான பயிற்சி
பட்டறை வழங்கும் நிகழ்வும் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்,
சமூகம் சார்ந்த சில செய்திகளை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தனி மனித அபிவிருத்தி
என்பது சுய கற்றலில் தான் தங்கியுள்ளது. இந்த சுய கற்றல் வாசிப்பு பழக்கத்தினை
மேம்படுத்திக் கொள்வதனால் மட்டுமே ஏற்படும்.
அதன்படி இன்றைய நிலையினை எடுத்து நோக்கினால்
இன்று நுலகங்களை பார்க்கும் போது வாசிப்பு பழக்கம் என்பது அருகி போய் விட்டதனைக்
காணலாம்.
அத்துடன் இன்று நூல் நிலையங்களைப் பார்க்கும்
போது தனி மனித அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. எங்களுடைய அறிவை நாங்கள்
வளர்த்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
இன்று யாழ். பல்கலைக்கழக நூலகம் மற்றும்
யாழ்.பொது நூலகம் ஆகியன போதியளவிலான வளங்களுடன் மக்களது பாவனைக்கு ஏற்றதாக
உள்ளது.
அத்துடன் எங்களுடைய சமூகம் மொழி ஆற்றலை
வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சுயமாக கற்கின்ற ஆற்றல் இல்லை இவை மனித
மேம்பாட்டுக்கு அவசியமானது.
எனவே இவற்றை எமது சமூகத்தில் மேம்படுத்துவதற்கான
அவசியம் நுலகத்திற்குண்டு. அத்துடன் ஏசியா பவுண்டேசன் போன்ற அன்பளிப்பாளர்கள்
சிறுவர் நூலகங்களிலும் தமது பங்களிப்பை செய்வது இன்றைய காலகட்டத்தின்
அவசியமாகும்.
எனவே அவற்றையும் ஏசியா பவுண்டேசன் நிறுவனம்
கவனத்திற் கொண்டு தமது பங்களிப்பை செய்யும் என நம்புவதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்
|
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
தனி மனித அபிவிருத்தி என்பது யாழில் இல்லாத ஒரு பொருளாகிவிட்டது; யாழ்.பல்கலைக்கழக நூலகர்
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
செய்திகள்