siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆஸி செல்லமுற்பட்ட 39 பேர் ஒரு கோடியே 95 இலட்ச ரூபா பிணையில் விடுதலை

30.08.2012.BY.rajah.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரில் 39 பேரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.௭ம்.௭ன்.பி. அமரசிங்க தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டார்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் ஏனைய நால்வருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிவான், அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பணித்தார். நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.

39 பேருக்கும் வழங்கப்பட்ட சரீரப் பிணைகளின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாகும். இந்த வழக்கை ௭திர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்