siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பல மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய அதிகாரி

30.08.2012.BY.rajah.
சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பி ச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது.
அவர் மீது பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது