siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்

30.08.2012.BYrajah.
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.

ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன.