siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூஜையைக்கு ஹெல உறுமய விளக்கம்


 
30.08.2012.BY.rajah,வடமேல் மாகாணத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கௌத்தம புத்தரின் தாதுக்கள் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது அதனால் அதே தினத்தில் மிருகபலி பூஜையை நடத்தப்படுவது என்பது பாவச் செயலாகும் அதனால் குறித்த பூஜையினை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2ஆம் திகதி முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள மிருகபலி பூஜையை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளாரh. இந்த மிருகபலி பூஜையில் அரசியல் தலைவர்கள் தலையிடக் கூடாது என்றும் இந்தப் பூஜையினை நஜறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிடுவார் என்றால் மட்டுமே இப்பூஜை நிறுத்தப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
இவர்களுடைய இக் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டே ஜாதிக ஹெல உறுமய இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி கௌத்தம புத்தரின் தாதுக்கள் வடமேல் மாகாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது அதே தினத்தில் இந்த மிருகபலி பூஜையை நடத்தப்படுவது, பாவச் செயல் எனவும் தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த முறையும் பலிபூஜை நடாத்துவதற்காக கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட மிருகங்களை அமைச்சர் மேர்வின் சில்வா தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்ததனையடுத்து பலிபூஜை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் குறித்த மிருகங்களுக்கு என்ன நடந்தது என்று, ஆலய நிர்வாகத்தினருக்கே தெரியாத நிலையே உள்ளது அதன்படி குறித்த ஆலயத்தின் பிரதம குரு காளிமுத்து சிவபாதசுந்தரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேவேளை குறித்த மிருகபலி பூஜையினை நிறுத்துமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றதுடன் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர் ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை கோயில் வளாகத்தில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலய பூசகரை மேர்வின் சில்வா மிரட்டியதாகவும் பூசகர் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து இந்த ஆலய வருடாந்த விலங்கு வேள்விக்கு இடைக்கால உத்தரவு வழங்குமாறு பௌத்த குருமார்களால் மேல் முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்டது எனினும் மேல் முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவினை வழங்க நேற்று முன்தினம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
குறித்த தேரர் கூறுவது போல புத்தரின் தாதுக்களை மக்கள் தரிசிக்கும் போது பாவச்செயல்கள் செய்யக் கூடாது என்றால் இந்த தாதுவை 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கலாம் அவ்வாறு நடந்திருந்தால் பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் ? என்ற சிந்தனையும் நம்முள் பலரிடம் எழுத்தான் செய்கின்றது.