siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 செப்டம்பர், 2012

௭கிப்திய தொலைக்காட்சியில் முதல் தடவையாக முக்காடு அணிந்து தோன்றிய அறிவிப்பாளர்

05.09.2012.BY.rajah.௭கிப்திய அரசாங்க தொலைக்காட்சியில் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இஸ்லாமிய முக்காடு அணிந்து தோன்றி புதுமை படைத்துள்ளார்.

1960 ஆம் ஆண்டு மேற்படி தொலைக்காட்சி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது முதற்கொண்டு பெண் அறிவிப்பாளர் ஒருவர் தலைக்கு முக்காடு அணிந்து கொண்டு பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.

பாத்திமா நபில் ௭ன்ற மேற்படி பெண் அறிவிப்பாளர் முக்காடு அணிந்தவாறு செய்தியொன்றை வாசித்தார்.





முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் பெண் அறிவிப்பாளர்கள் தமது தலையை மூடி முக்காடு அணிவதற்கு உத்தியோகபூர்வமற்ற தடை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைமையிலான புதிய அரசாங்கமானது சுமார் 70 சதவீத ௭கிப்திய பெண்கள் தலைக்கு முக்காடு அணிவதாக தெரிவித்து புதிய சட்டவிதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாத்திமா நபில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேர செய்தியை வாசித்தார். இது தொடர்பில் பாத்திமா நபில் விபரிக்கையில், ஏனைய அறிவிப்பாளர்களும் தன்னைப் பின்பற்றி முக்காடுகளை அணிவார்கள் ௭ன ௭திர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்

இலங்கையைர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு: திருச்சி காட்டூரில் பரபரப்பு

04.09.2012.BY.rajah.வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து சென்றுள்ள பக்தர்கள் பயணித்த பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் காட்டூரில் வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்புநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே திருச்சி பால்பண்ணை என்ற இடத்தில், இலங்கை பக்தர்கள் வந்த பஸ்ஸை வழிமறித்து மறியல் போராட்டம் செய்ய முயன்ற சுமார் 60 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

Collins Revision Algebra: மாணவர்களுக்​கு அவசியமான மென்பொருள்

04.09.2012.BY.rajah.கணனிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கற்றலும் மிக பிரதான பங்கை வகிக்கின்றது. இதனால் அன்றாடம் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Collins Revision Algebra எனும் மென்பொருளானது கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
இம்மென்பொருளில் 70 வகையான மீட்டல்களும், 290 பயிற்சிகள், மற்றுமு் 30 வீடியோ வழிகாட்டல்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்ரோயிட், அப்பிள் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி


நகங்களை பராமரிப்பதற்கு

04.09.2012.BY.rajah.நகங்கள் கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு.
உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும்.
சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.
பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.
நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது.
அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும்.
இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும்.
சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்

மம்மூட்டி படத்தில் கிரணின் ஆட்டம்



04.09.2012.BY.rajah.தமிழில் உருவாகும் புதுவை மாநகரம் படத்தில் கிரண் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.

நடிகை கிரண் மறுபடியும் கொலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
புதுவை மாநகரம் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட கிரணுக்கு படத்தின் தயாரிப்பாளர் அன்பான கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கிரண், கூடவே சம்பளத்தையும் மிகவும் உயர்த்தி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், இப்பாடலில் நடித்தால் மறுபடியும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கிரண், தங்கத்திற்கு என்றுமே மதிப்பு குறையாது. அது கழுத்தில் கிடந்தாலும் சரி, வீட்டில் பூட்டி வைத்தாலும் சரி தங்கம் தங்கம்தான்.
அதுபோலத்தான் நானும் என்று கிரண் பதிலளிக்க தயாரிப்பாளர் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து இப்படத்தில் ஆட வைத்திருக்கிறார்
 

கோச்சடையானில் டைட்டானிக் தொழில்நுட்ப கலைஞர்கள்



04.09.2012.BYrajah.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் விறுவிறுவென வளர்ந்து வருகின்றது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார்.
தீபிகா படுகோனை நாயகியாக நடிக்க ஆதி, நாசர், சரத்குமாருக்கு முக்கிய வேடங்கள் தரப்பட்டிருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பது சிறப்பம்சம்.
லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோ, கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் சென்னை வந்துள்ளனர்.
இப்போது கோச்சடையான் படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
எந்திரன் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல கோச்சடையான் இசை வெளியீட்டை ஒக்ரோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள்.
இதற்காக ரஜினி ஜப்பானிய மொழி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஜார்ஜியா பயணத்தை முடித்து விட்டு சென்னை வந்தார் ஆர்யா



04.09.2012.BYrajah.செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பியுள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா.
இந்த விடயம் விஷ்ணுவர்தனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அஜித்- விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள்.
அதற்கு பிறகு ஆர்யா இரண்டாம் உலகம் படத்திற்காக ஜார்ஜியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத்- ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
அதுமட்டுமன்றி ஆர்யா- டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.
விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான புகைப்பட படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற இருக்கிறது
 

28ஆம் திகதி வெளியாகிறது தாண்டவம்

04.09.2012.BY.rajah.
யு டிவி நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான "தாண்டவம்" வருகிற 28ஆம் திகதி வெளியாகிறது.
சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திற்கும் தாண்டவம் படத்தை, இயக்குனர் விஜய் இயக்கி உள்ளார்.
இதில் விக்ரம் கண் தெரியாத நபராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இவர்களுடன் லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன.
முக்கியமாக சந்தானத்தின் நகைச்சுவை, விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.
இந்த படம் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் சிறந்ததொரு படைப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை





04.09.2012.BY.rajah.
எனகென்று எப்பொழுதும்
ஒர் கூட்டம்
நல்லவர் கெட்டவர்

அறிவது கடினம்...

பார்க்கும் பொழுது பார்த்து
பேசாதவரும் உண்டு
பார்த்துப் பார்த்துப்
பேசுகிறவரும் உண்டு

காதல் கடிதம் ஒருவரிடம்.
அன்பின் வார்த்தை மற்றொருவர்(வித்தை)
யாரை அழைப்பது யாரை வெறுப்பது...???!!!

பயணம்...
ஒரே ஆற்றில்தான்...
முடியும்...
ஒரே சொல்லில்தான்...
அது "படுக்கை"      
நட்புக்காக..எறிந்தால் இரவில்

பூமிக்கு ஒளியாக....

எறிந்து கீழே வீழ்ந்தால்

விண் மீனாக....

இவை என்றென்றும்

அழியாத நம் நட்புக்காக
கவிதை என்றொரு ஊடகமாம் - அதில்
கலைகள் அனைத்தும் கலந்திடுமாம்.!

கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.

சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.

அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.

விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.

சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.

கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.

அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.

உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
காதல் ஒரு கண்சிமிட்டல்...
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல



கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]

04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.

எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,

பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,

எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,

எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை