| செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012,By.Rajah.அமெரிக்காவில் இரண்டு வயது
குழந்தையை மிக கொடுமையாக தாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு
வயது குழந்தை சேட்டை செய்ததால், கையில் பசையை தேய்த்து சுவற்றில் ஒட்ட வைத்து
விட்டார். அத்துடன் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும், வயிற்றில் எட்டி உதைத்தும் மிக கடுமையான முறையில் குழந்தையை தாக்கி உள்ளார். இதனால் குழந்தை கோமா நிலைக்கு சென்று விட்டது. நினைவு திரும்பிய பின் தன்னை தாக்கிய விதத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக எலிசபெத்தை பொலிசார் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டில் இவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 9 அக்டோபர், 2012
இரண்டு வயது குழந்தையை கொடுமையாக தாக்கிய தாய் கைது
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்
பிரிட்டனில் உபயோகித்த போத்தல்களை மீண்டும் பயன்படுத்த தடை
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்
|
விண்வெளியில் இருந்தபடியே ஐஸ்கிரீமை சுவைக்க போகின்றார் சுனிதா வில்லியம்ஸ்
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.சர்வதேச விண்வெளி
நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தனியார் விண்கலம் மூலம் ஐஸ்கிரீம் கொண்டு
செல்லப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து பூமிக்கு
மேல் 410 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட மூன்று வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தேவையான உடை, உணவு, தண்ணீர் மற்றும் சில உபகரணங்கள் உட்பட சுமார் 450 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டு தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று புறப்பட்டது. இதில் வீரர்களுக்கு பிடித்தமான வெண்ணிலா ஐஸ்கிரீம்களும் கொண்டு செல்லப்பட்டது. இந்த விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சென்றடையும். விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறோம் என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் |
72 பேரை கொடூரமாக கொலை செய்த நபர் கைது
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.மெக்சிகோவில் 72 பேரை
கொடூரமாக கொலை செய்த போதை பொருள் கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலிருந்து மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில்
மக்கள் குடிபெயர்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு குடிபெயர்ந்த மக்களில் பலர் சான் பெர்னாண்டோ நகருக்கு அருகில் ரான்சு என்னுமிடத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டில் 72 பேர்களை கொலை செய்து ஒரே இடத்தில் புதைத்திருந்தனர். இது தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பல் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடந்த விசாரணையில், இந்த கும்பல் மற்ற நாடுகளுக்கு குடிபெயர விரும்பிய நபர்களை கடத்தி, அவர்களை போதை பொருளை விழுங்க சொல்லி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்து புதைப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான சல்வேடர் அல்போன்ஸா மார்டினேஸ்(வயது 31) என்பவரை கப்பற்படை அதிகாரிகள் கைது செய்தனர். |
Fast Folder Eraser Pro மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
செவ்வாய், அக்டோபர் 09, 2012
இணைய செய்தி
| செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| கணனியில் காணப்படும் Files-களை
இலகுவாகக் கையாளும் முகமாக அவற்றினை Folder-களை உருவாக்கி சேமிப்பது வழமையான
விடயமாகும்.
எனினும் இந்த Folder-கள் வேண்டப்படாதவிடத்து அவற்றினை கணனியிலிருந்து நீக்க
முற்படும்போது கணனியின் செயற்படுதிறன் குறைவடையலாம். எனவே இப்பிரச்சினைக்கு விடையாக Fast Folder Eraser Pro எனும் மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் அதிகளவு எண்ணிக்கையான Files-களை கொண்ட Folder-களையும் இலகுவாகவும், விரைவாகவும் கணனியிலிருந்து நீக்க முடிவதுடன் கணனியின் திறனையும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் நீக்கப்படும் Folder-களோ அல்லது Files-களோ Recyclebin பகுதிக்கு செல்லாது நேரடியாகவே கணனியிலிருந்து அகற்றப்படுகின்றது |
திங்கள், 8 அக்டோபர், 2012
பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள்
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ஆண்களும் பெண்களும் முற்றிலும்
வித்தியாசமானவர்கள். அதேப் போல் தான் அவர்களது விருப்பங்களும் வித்தியாசம். அதிலும்
ஒரு பெரும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்களுக்குப் பிடிக்காதது பெண்களுக்குப்
பிடிக்கும் என்பது தான்.
ஆண்களுக்கு பிடிக்காத எவற்றை பெண்கள் விரும்புகிறார்கள் என்று தெரியுமா? சீரியல் பார்ப்பது ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால் கிரிக்கெட், செய்திகள் அல்லது ஏதாவது விளையாட்டை தான் பார்ப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி சீரியல் தான். எந்த நேரமும் சீரியலையே பார்ப்பார்கள். சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பார்களே தவிர, சீரியல் நேரத்தை மறக்காமல் நினைவில் வைத்து அதைப் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ரொமான்டிக் நாவல் படிப்பது பெண்கள் பொதுவாக அதிகமான அளவு ரொமான்ஸ் குணம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் ஏதேனும் ரொமான்டிக் நாவல் படிப்பது, அவற்றை தன் காதல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வருத்தப்படுவது. சரியான நேரத்தில் எழுந்திருப்பது பெரும்பாலான பெண்களுக்கு சரியான நேரத்தை கடைபிடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதனால் தான் படுக்கும் போது கூட அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்து வேலை செய்வார்கள். ஊர் கதை மற்றும் கிசுகிசு பேசுவது பெண்களிடம் இருக்கும் பழக்கங்களில் மாற்ற முடியாத விஷயம் என்றால் அது ஊர் கதை பேசுவது தான். ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், மட்டும் தான் பேசுவார்கள். குழந்தைகள் பிடிக்கும் பெண்களுக்கு பொதுவாகவே குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை எங்கு பார்த்தாலும் கொஞ்சி மகிழ்வார்கள் |
தோல் தொற்று நோய்களுக்கான பாதுகாப்பு முறைகள்
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
| மனித உடலின் தோல் பகுதி
ஆரோக்யத்தின் கண்ணாடி. தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை,
சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது.
தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மன உளைச்சல்களை
ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த
வேண்டும். பாதுகாப்பு முறைகள் 1. புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். 2. தோல் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். 3. காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். 4. ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். 5. முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. இது தவிர தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டாலும் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். |
கறுப்புப் பண வரி ஒப்பந்தத்துக்கு தேர்தல் மிரட்டல்
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ஜேர்மனியின் கறுப்புப்பண முதலைகள்
சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் ரகசிய இருப்புக்கு அந்த வங்கிகளே வரி வசூலிக்கும்
ரூபிக் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
இந்நிலையில் ஜேர்மன் அரசுக்கு துரோகம் செய்யும் இந்த பணமுதலைகளுக்கு ஆதரவாக
இருப்பதை விரும்பாததால் எதிர்கட்சியினர் இந்த பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தில்
பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். கறுப்புப்பணத்தைச் சட்ட ரீதியாக்கும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் சுவிஸ் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளரின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டி அவர்களின் பெயர்களை வெளியிடாது. வரியை மட்டும் இருப்பு நிதியிலிருந்து எடுத்து உரிய நாடுகளுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தம் இன்னும் ஜேர்மன், பிரிட்டன், ஆஸ்ட்ரியாவில் கையெழுத்தாக வில்லை. ஜேர்மனியில் அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்தின் கீழவையிலும் அரசுக்கு எந்தப்பிரச்னையும் இருக்காது. ஆனால் மாநில முதல்வர்களை உறுப்பினராகக் கொண்ட மேலவை இந்த வரி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தராது என்று அரசியல் அறிஞர் கெர்ட் லாங்குத் கூறுகிறார். வரும் தேர்தலில் மைய, இடது, சமதர்ம குடியரசு கட்சியினர் அரசை கறுப்புப்பண முதலைகள் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரதம வேட்பாளரான பியர் ஸ்ட்டீன் புரூக்கும் இந்த வரி ஒப்பந்தம் ஒரு தேச துரோகம் என்பதை கடந்த சில நாட்களாக பேசிவருகிறார். இந்த வரி ஏய்ப்பு என்பது ஜேர்மனியின் பிரச்சினை, இதற்கு சுவிஸ் ஜேர்மனிக்கு உதவ வேண்டும். வரிஏய்ப்பை சிறிய குற்றமாக கருத இயலாது. தேசத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் ஏமாற்றுவேலை என்கிறார் ஸ்ட்டீன் புரூக் |
சுவிஸ் அணுசக்தி நிலையங்களில் இடர்பாட்டுச் சோதனை
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சுவிட்சர்லாந்தில் உள்ள
அணுசக்தி நிலையங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்கிணங்க இடர்பாடுகளை எதிர்கொள்வது
குறித்து சோதித்து அறியப்பட்டது.
அணுசக்தி நிலையங்கள் இச்சோதனைகளில் தேறிவிட்டன என்றாலும் லீப்ஸ்டாட் அணுசக்தி
நிலையத்தில் ஹைட்ரஜன் மேலாண்மையை மேம்படுத்தலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டது என்று
சுவிஸ் அணுசக்தி பாதுகாப்பு மத்திய சோதனைத்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, பல அணுசக்தி நிலையங்களில் மேம்படுத்த வேண்டியவை குறித்து தனது பரிந்துரைகளை வழங்கினாலும் சுவிஸ் அணுசக்தி நிலையங்களுக்கு மட்டும் பரிந்துரை எதுவும் வழங்கவில்லை. காரணம் சுவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் கிடையாது. மூஹ்லெபெர்க், பெஸ்னாக் மற்றும் கோஸ்கென் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களில் ஏற்கனவே இருந்த அனைத்து பிரச்சினைகளும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதை இந்த சோதனையறிக்கை புலப்படுத்தியது. லீப்ஸ்ட்டாட்டில் உள்ள ஹைட்ரஜன் மேலாண்மை பிரச்சினை ஏற்கனவே அறியப்பட்டதுதான் கடந்த ஜுன் மாதத்தில் அதற்கான அறிக்கைகளையும் இந்த அணுசக்தி நிலையம் சமர்பித்துள்ளது |
கேரள மந்திரவாதியின் பூஜையில் பங்கேற்ற சமந்தா
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்
| Monday, 08 October 2012, By.Rajah. |
| பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் சமந்தா பங்கேற்றுள்ளார். |
|
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான சமந்தா, நான் ஈ பட வெற்றிக்கு பிறகு
உச்சத்துக்கு சென்றார். மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க
ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டதால், படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார். சமந்தாவுக்கு தீய சக்தியால் பாதிப்பு ஏற்பட்டது என்றும், அதனால் தான் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து வினீத் பற்றி கேள்விப்பட்டு அவர் நடத்திய சிறப்பு பூஜையில் பங்கேற்று இருக்கிறார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். பாலகிருஷ்ணா உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் 20 பேர் வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி வரை இந்த பூஜைக்கான கட்டணமாக அவர் வசூலிக்கிறாராம். இதுபற்றி வினீத் கூறும்போது, பிரபலங்கள் மற்றும் ஏழை எளியவர்கள் மீது தீயசக்தி பாதிப்பு இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் மூலம் சரி செய்கிறேன். அந்த தீய சக்தியை நான் தாங்கிக் கொள்வதால் என் உடல் பாதிக்கிறது. தாங்கும் சக்தியை பெருக்கிக் கொள்வதற்காகவே பணம் வாங்குகிறேன் என்றார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























