siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 11 அக்டோபர், 2012

சுவிஸில் பேய் மழை: மக்கள் கடும் அவதி

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.சுவிட்சர்லாந்தின் Schwyz, Glaris, Zug and Saint Gallen ஆகிய இடங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த பேய் மழையால் இப்பகுதிகள் தண்ணீரால் நிரம்பி வழிகின்றன. மேலும் சுவிஸில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் அரசு நிறுவனங்களில் தண்ணீர் புகுந்துள்ளன.
இந்த வருடத்தில் பெய்த கடும் மழை என்று சுவிஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையை எதிர்பார்த்தாலும் இந்த அளவுக்கு பெய்யும் என தாங்கள் நினைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் சில பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளுக்குள் நுழைய மக்கள் தீயணைப்பு மற்றும் மாநகர காவல் துறையிடம் உதவி கோரியுள்ளனர்.
மேலும் கனமழையால் சுவிஸின் Basel, Kembs இடையே கார்கோ போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கென்யாவில் எம்.பி.க்களுக்கு அதிகளவு போனஸ்: மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்ரிக்க நாடுகளிலேயே கென்யா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் சம்பளம் அதிகம். ஒவ்வொரு நபரும் 5.7 லட்ச ரூபாய் மாத சம்பளமாக பெறுகின்றனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கென்ற நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் உறுப்பினர்களுக்கு போன்ஸ் அளிக்கும் சட்டம் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொருவருக்கும் 60 லட்ச ரூபாய் போனசாக கிடைக்கும்.
கென்யாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாததை கண்டித்து, கடந்த மாதம் மூன்று வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
இதே போன்று சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அளிக்கும் திட்டம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதனை கண்டித்து ஏராளமான மக்கள் நைரோபி நகரில் ஜனாதிபதி மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பீர் போத்தலை திருடிய கன்னியாஸ்திரி (வீடியோ இணைப்பு)

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
நியூயார்க்கில் உள்ள கடையொன்றில் கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் உள்ள கடை ஒன்றுக்கு கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார்.
அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று, பீர் போத்தல் ஒன்றினை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார், ஆனால் அவர் பீர் திருடியதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.
பின்னர் இருப்பை சரிபார்த்த போது பீர் போத்தல் ஒன்று குறைந்து இருப்பது தெரியவந்தது. எனவே கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடியது தெரியவந்தது.
ஆனாலும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. உண்மையிலே அவர் கன்னியாஸ்திரிதானா? அல்லது கன்னியாஸ்திரி போல உடை அணிந்து திருடினாரா? என்பது தெரியவில்லை.
இந்த காட்சி யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிறுமியை சுட்டவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி பரிசு:

 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய 14 வயது சிறுமியை சுட்டது யார் என்று தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசி வந்தார். இவருக்கு அமைதிக்கான தேசிய விருதை வழங்கி அந்த நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி மலாலாவை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு லேடி ரீடிங் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைமை மருத்துவர் மம்தாஷ் கான் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுபற்றி கான் கூறுகையில், மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்தார். அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மலாலாவின் மாமா அகமது ஷா கூறுகையில், மலாலாவின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் அவளை வெளிநாடுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்கு அவளது உடல்நிலை ஒத்துழைப்பது சிரமம் என்றும், இன்னும் 10 நாள்களுக்கு அவரது நிலைமை குறித்து எதுவும் கூறமுடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில், மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.
தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார். அதனால்தான் தாக்குதல் நடத்தினோம். அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி

                                                                                                                                 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012,By.Rajah. சிரியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது.
180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின.
இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.


புதன், 10 அக்டோபர், 2012

கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர் 4ம் மாடி சித்திரவதை கூடத்தில்...

.
புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012.By.Rajah.
சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும் மேற்கூறிய அகதியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலாகும். ஜனநாயக நாடென்று தன்னைக் கூறிக்கொள்ளும் கனடாவுக்கு இது பொருத்தமானதல்ல.
ஐநா நிறைவேற்றிய அகதிகள் பாதுகாப்புச் சட்டம் எந்த நாட்டை விட்டுத் தப்பியோடி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோருகிறாரோ அவரை அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்று சொல்கிறது. இந்த விதியைக் கனடா மீறியுள்ளது.
இலங்கையில் நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணையின்றித் தண்டிக்கப்படாமல் நீடிக்கின்றன.என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடா அரசு இனியாவது தவறை உணர்ந்து நாடுகடத்தப்பட்டு 4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற

     
.Wednesday10 October2012 ,By.Rajah.இலங்கை அகதிகள் 60 பேர் இந்தியாவில் கைதுபடகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் ‌தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19, சிறுவர்கள் 7, சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர்.
இதில் அகதிகள் குழுவை‌ சேர்ந்த ஐந்து பேர் பொலிஸ் விசாரணையில் தப்பிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தியர்களை கிண்டலடிக்கும்

          
Wednesday 10 October 2012 .By.Rajah.  திரைப்படங்களுக்கு சிங்கப்பூரில் தடை
இந்தியர்களின் உணர்வை பாதிக்கச்செய்யும் விதத்தில் அமைந்த திரைப்படத்தை வெளியிட, சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

சிங்கப்பூரில் சமீபத்தில், "செக்ஸ், வயலன்ஸ், பேமிலி வேல்யூ' என்ற நகைச்சுவைப்படம், "போர்ன் மசாலா, தி பவுன்சர்' ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள், இன சண்டையை தூண்டும் விதத்திலும், இந்தியர்களை கிண்டலடிக்கும் விதத்திலும் இருந்தன.
இந்திய நடிகர் ஒருவரும், சீன வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் நடிகரும் இப்படங்களில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படங்களை பார்த்த, சிங்கப்பூர் திரைப்பட தணிக்கை குழுவினர், சர்ச்சைக்குரிய வகையில் இந்த படங்கள் உள்ளதால், இவற்றை திரையிட அனுமதி மறுத்தனர். இப்படங்கள், வெளியாக மூன்று நாட்கள் இருந்த நிலையில், இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு

         
Wednesday 10 October 2012  .By.Rajah.இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுக்கு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான விருது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்' பயன்பாட்டிற்கு பெரிய அளவில் உதவி புரியும், என கூறப்படுகிறது

பகைமையை முடிவுக்கு கொண்டுவர சிறுமிகளுக்கு திருமணம்.

.          
Wednesday 10 October 2012  .By.Rajah.
பஞ்சாயத்து கூறிய பாகிஸ்தாபாகிஸ்தானில், இருபிரிவினரிடையே,நிலவிவந்தபூசலை தீர்ப்பதற்கு, 13 சிறுமிகளை, திருமணம் செய்விக்க தீர்ப்புக் கூறிய, எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா பக்டி என்ற ஊர் உள்ளது. இங்கு இரு பிரிவினரிடையே பகைமை நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில், தாரிக் மசூரி என்ற எம்.பி., கலந்து கொண்டார். "இருதரப்புக்கும் இடையே, பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்றால், 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இரு தரப்பை சேர்ந்த, இளைஞர்கள் திருமணம் முடிக்க வேண்டும்' என, மசூரி தலைமையிலான, பஞ்சாயத்தில் தீர்ப்புக் கூறப்பட்டது.

சிறுவர்கள் திருமணத்தை, ஆதரிக்கும் விதத்தில், தீர்ப்புக் கூறிய, எம்.பி., மசூரியின் செயலை கண்டித்த, நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், இது தொடர்பாக, அவருக்கு "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சர்ச்சைக்குரிய இந்த பஞ்சாயத்தில், தான் கலந்து கொள்ளவில்லை என, மசூரி தெரிவித்துள்ளார்