| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி
மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற
தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட்
மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள 'பானி வலிட்' எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான 'காமிஸ் பிரிகேட்' இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
மும்மர் கடாபியின் இளைய மகன் படுகொலை
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ஈரானில் குண்டு
வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தென்கிழக்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜீலை மற்றும்
டிசம்பர் மாதங்களில் சம்பாஹர் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 67 பேர்
பலியாயினர். இது தொடர்பாக யாக்ஹா, அப்துல் ஜலில், அப்துல்பாசித் ரகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கில் ஜஹிர்தான் நீதிமன்ற நீதிபதி முகமது மெர்தாஹி தூக்கு தண்டனை விதித்தார். இதனையடுத்து மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது |
மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் காஸ்ட்ரோ பாதிப்பு
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012.By.Rajah. |
| கியூபாவின் மாஜி ஜனாதிபதியும்
புரட்சியாளருமான பிடெல் காஸ்ட்ரோ(வயது 86) பக்கவாத நோயால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும்
பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர்
ஜோஸ் மார்க்குயினா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, காஸ்ட்ரோவை தற்போது தாக்கியிருக்கும் பக்கவாத நோய் நரம்பு மண்டலத்தை முழுவதும் செயலிழக்க செய்து இறப்பை ஏற்படுத்த வல்லதாகும் என்றார். இதற்கிடையில் கியூபாவிலும் அமெரிக்காவிலும் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்றும் கோமா நிலைக்கு சென்று விட்டார் எனவும் சில பத்திரிக்கைகள் பல மாதங்களாக வெளியிட்டு வருகின்றன. பிடெல் காஸ்ட்ரோ 1959- 2006 வரை கியூபாவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என முக்கிய தலைமைப்பதவிகளை வகித்து வந்தவர் ஆவார். 2006ம் ஆண்டு இவர் பதவி விலகிய பின்னர், இன்று வரை இவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார். |
அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| அவுஸ்திரேலியா அருகே தெற்கு
பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும்
நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.6 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. எனவே நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். மேலும் தங்களது வீடுகளை விட்டுவெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். தெற்கு பசிபிக் கடலில் 22 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நில நடுக்கத்தினால் கடலில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழுந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை |
காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,By.Rajah.உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை
காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை
கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது. அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது. எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. |
| முகப்பு |
சனி, 20 அக்டோபர், 2012
புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணி!
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்
Saturday 20 October 22012..By.Rajah.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயாருக்கு சொந்தமான அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணியில் இலங்கையின் கடற்படை சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணைதீவு பிரதேச கடற்பரப்பில் சுழியோடிகள் கறுப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர்.
இந்தக் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் அதனை விசாரணைகளுக்காக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கறுப்புப் பெட்டித் தகவல்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்களை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியும் என பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்னர் 48 பயணிகள் மற்றும் ஆறு சிற்பந்திகளுடன் பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
இரணை தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடற் பரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது.
கடற்படை சுழியோடிகள் இரணைதீவு கடற்பகுதியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் என்ஜினின் ஒரு பகுதி, இரண்டு இறக்கைகள் மற்றும் டயர்கள் ஆகியனவற்றை மீட்டுள்ளனர்.
ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்
Saturday20October2012 By.Rajah.மலாலாக்களைஉருவாக்கி விட்ட தாலிபான்கள் நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டால், தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். தொழுகையில் கலந்து கொண்ட அந்தக் குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று, குழந்தையின் அழுகைக்கே துடிக்கும் நபிகள் நாயகத்தின் வழியான இஸ்லாத்தைப் பின்பற்று கிறோம் என்று சொல்லும் தகுதியைக்கூட இழந்து விட்ட தாலிபான் அமைப்பினர், ஒரு பெண் குழந்தை மீது துப்பாக்கி சூடு நடத்தி தங்களைக் கொடூரர்கள் என்று மீண்டும் ஒரு முறை அடையாளப்படுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மலாலா யூஸுஃப் ஸயீ.
14 வயதே நிறைவடைந்த மலாலா, வடமேற்கு பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். இவர் 11 வயதாக இருந்த போது, சுவாத் பள்ளத்தாக்கின் பழங்குடிப் பகுதிகளை தாலிபான்கள் ஆக்கிரமித்தனர். முதல் வேலையாக பெண்கள் பள்ளிகளை மூடினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதும், மலாலா பி.பி.சி-யின் உருதுமொழி சேவைக்கு புனைப்பெயரில் தன் மனக் குமுறல்களை, 'டைரி’யாகக் கொட்டி அனுப்பி வைத்தார்.
'என் பள்ளிச் சீருடையை, என் பையை, என் பேனா பெட்டியை பார்க்கும்போதெல்லாம் என்மனம் உடைகிறது. நாளை ஆண்கள் பள்ளி திறந்திருக்கும். ஆனால், பெண் கல்விக்குத் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்’ என்று குமுறி இருந்தார்.
தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமான மலாலாவைப் பழிவாங்கத் துடித்தனர் தாலிபான்கள். சுவாத் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் இருந்து பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா மீது, கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மலாலாவின் தலைப்பகுதியில் குண்டு துளைத்து விட, கிட்டத்தட்ட மரணத்தின் வாசலைத் தொட்டார் மலாலா.
ராணுவ மருத்துவமனையில் மலாலாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நாளுக்குநாள் மலாலாவின் உடல் மோசமடைந்தது. அதனால், மருத்துவக் குழுவோடு மலாலா இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது அவருக்கு பர்மிங்ஹாம் நகரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இப்போது, உலகெங்கும் மசூதிகளிலும், தேவலாயங்களிலும் இன்னும் பிற வழிபாட்டுத் தலங்களிலும், மலாலா உயிர் பிழைத்து வருவதற்காக வேண்டுதல் நடத்தப்படுகிறது. தாலிபான்கள் ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி மலாலாக்களை உருவாக்கி விட்டனர்.
மலாலா நிச்சயம் வருவாள். அவள் ஆசைப்படியே
ஒபாமா குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடிகுண்டு பீதி
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்
அமெரிக்க அதிபர், ஒபாமாவின் மகள்கள், படிக்கும் பள்ளி கூடத்தில், சந்தேகத்திற்குரிய வகையில் பை கிடந்ததால், மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், மாலியா, 14, சாஷா, 11, இருவரும், வாஷிங்டனில் உள்ள, "சிட்வெல் பிரெண்ட்ஸ்' பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம், இந்த பள்ளி மைதானத்தில், ஒரு பை, கேட்பாரற்று கிடந்தது. இந்த பையில், வெடிகுண்டு வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய பை சோதிக்கப் பட்டதில், அதில் ஒன்றுமில்லை, என தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களும், ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.
யாரிடமும் வாய்ப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன்: கமாலினி முகர்ஜி
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்
| Saturday, 20 October 2012, By.Rajah. |
| வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. |
| வேட்டையாடு விளையாடு, காதல்னா சும்மா இல்ல படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி
கூறுகையில், கொலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய
படங்களில் நடித்து வந்தேன். ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை. முந்தைய படங்களில் நடித்ததை வைத்தே அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்திருக்கின்றன. நான் வங்காளப் பெண். ஆனாலும் நடிகையாகி 7 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வங்காள மொழிப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் ரேவதி இயக்கிய பிர் மிலிங்கே என்ற படம் மூலம் அறிமுகமானேன். ஒரு நடிகையாக தென்னிந்திய படங்கள்தான் என்னை பிஸியாக வைத்திருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் நடிப்பது கஷ்டமா? என்கிறார்கள். அது எனக்கு கடினமாக தெரியவில்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். விரைவில் வங்காள மொழிப் படம் ஒன்றை இயக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். |
மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்
| Saturday, 20 October 2012,By.Rajah.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். |
|
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர். இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன். இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















