| சர்வதேச நாணய நிதியத்தின்
தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி
விலகினார்.
இவர் நியூயார்க்கில் ஹோட்டல் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, பணிப்பெண்
ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ட்ராஸ்கான், பின் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்ட்ராஸ்கான் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாலியல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி, குறித்த பெண்ணுக்கு பணம் கொடுக்க ஸ்ட்ராஸ்கான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஸ்ட்ராஸ்கானின் வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 1 டிசம்பர், 2012
பணத்தை கொடுத்து பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்
ஜேர்மனியிடம் வழங்கியது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்
| ஜெனீவாவில் உள்ள
நெடுஞ்சாலைச் சங்கம் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் தகவல்களைக் கொண்ட
ஆவணக்காப்பத்தை ஜேர்மனியிடம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது தொலைந்து
போனவர்களையும் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களையும் பற்றி அறிய மக்கள் இந்த
ஆவணக்காப்பத்தையே நாடினர்.
சர்வதேசத் தேடும் பணிக்கு(ITS) உதவிய இந்த ஆவணக்காப்பகம் 1943ம் ஆண்டில்
தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் இதன் மூலமாகப் பலகோடி குடும்பங்கள் தங்களின்
காணாமல் போன உறவினர் குறித்து அறிந்து கொண்டனர், என்று செஞ்சிலுவைச் சங்கத்தின்
தலைவர் பீட்டர் மாரெர் தெரிவித்தார். இந்த ஆவணக் காப்பகத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தகவல் அட்டைகள் உள்ளன. இவற்றில் 17.5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் குறித்த தவல்கள் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலோர் நாஜிப் படையினரால் கொல்லப்பட்ட யூதர்களே ஆவர். கடந்த ஐம்பதாண்டுகளாக தனது பொறுப்பில் வைத்திருந்த சர்வதேசச் செஞ்சிலுவைச்சங்கம் இப்போது ஜேர்மனியிடம் இந்த ஆவணக்காப்பத்தைக் கொடுத்தாலும், அதனைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தனது ஆதரவைத் தொடந்து வழங்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்குத் தொடர்ந்து கிடைக்கும் என ICRCன் பொருப்பாளர் மாரெர் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவைச் சங்கம் தனது நிர்வாகப் பொறுப்பை மட்டும் ஜெர்மனிக்கு வழங்குகிறதே தவிர காப்பகத்தை அப்படியே கைகழுவி விடவில்லை, என்று மாரெர் உறுதிபடத் தெரிவித்தார். செம்பிறைச் சங்கங்களும் இந்த ஆவணக் காப்பகத்தின் பராமரிப்புக்கு ஜேர்மன் அதிகாரிகளுக்கு உதவத் தயாராக இருக்கின்றது. |
சுவிஸ் வங்கியின் தலைமைச் செயலகம் விற்பனை
| சுவிட்சர்லாந்தின் கிரெடிட்
சுவிஸ் வங்கி தன் முதலீட்டைப் பெருக்குவதற்காக, ஜுரிச் நகரில் இருந்த தன் தலைமைச்
செயலகக் கட்டிடத்தை நார்வே நாட்டு ஓய்வூதியத் திட்டத் துறைக்கு 1 பில்லியன்
ஃபிராங்குக்கு 25 ஆண்டு காலத்துக்கு கொடுத்துள்ளது.
ஒத்திப் பத்திரத்தில் 25 ஆண்டுகள் முடிந்த பின்பு மேலும் ஒரு 15 ஆண்டுகள் ஒத்து
நீட்டிக்கப்படலாம் என்றும் எழுதப்பட்டுள்ளது. Uetilhole என்று அழைக்கப்பட்ட தலைமைச்
செயலகம் நார்வேக்கு இன்று முதல் கைமாறியது என்ற செய்தியை சுவிஸ் வங்கி நேற்று
வெளியிட்டது. எனினும் இச்செயலகத்தில் தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் நடைபெறும். 1970ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட Uetilhole என்ற தலைமைச் செயலகம் 137,807 சதுர மீற்றர் பரப்பளவு உடையது. இதனை ஒத்தி வைத்ததால் வங்கிக்கு 83.7 மில்லியன் ஃபிராங்க் முதலீட்டுத் தொகையாகக் கிடைக்கும். கடந்த வருடம் சுவிஸ் தேசிய வங்கி, கிரெடிட் சுவிஸ் வங்கியிடம் முதலீட்டைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. முதலீட்டைப் பெருக்குவதால் மட்டுமே கிரெடிட் சுவிஸ் வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகத் திகழ முடியும் என்பதால் இந்த வங்கி தனது தலைமைச் செயலகத்தை ஒத்திக்கு விட்டு பணம் வாங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதமும் கிரெடிட் சுவிஸ் வங்கி தனது Metrolpol கட்டிடத்தை விற்றுக் காசாக்கியது. இந்தக் கட்டிடம் ஜுரிச் தலைமையக கட்டிடத்திலிருந்து சிறிது தொலைவில் தான் இருந்தது. இதனை எவ்வளவு பணத்துக்கு விற்றது என்று என்ற தகவலை வங்கி வெளியிடவில்லை. |
என்னை கொடுமைப்படுத்துகின்றனர்: 7 வயது சிறுவன் பரபரப்பு புகார்
| தன்னை தனது பெற்றோர்
துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுவன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,
அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி
அனுபமா. இவர்கள் நோர்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம், நோர்வேயில் உள்ள பள்ளியில் படிக்கிறான். இவனது ஒழுக்கம் குறித்து கவலை அடைந்த பெற்றோர், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் தன்னை தனது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளான். இதனையடுத்து பொலிசில் பள்ளி நிர்வாகம் புகார் அளிக்கவே, மாணவனின் பெற்றோரை பொலிசார் கைது செய்தனர். இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தினர் கூறுகையில், ஏற்கனவே நோர்வே நாட்டு சிறார் நலப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீராமை தங்களது பொறுப்பில் கொண்டு சென்று ஒரு மாதம் வைத்திருந்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு ஹைபராக்டிவ் பிரச்சினை இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரிடம் கொண்டு வந்து விட்டனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்த சந்திரசேகருக்கு, நீதிமன்றத்தில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அங்கு சென்றவுடன் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த கைது குறித்து எங்களுக்கு நோர்வே தரப்பிலிருந்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர் என்றனர். தற்போது சாய் ஸ்ரீராம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மனநல மையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறான். |
சவீதா விவகாரம்: ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ?
| அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு
மறுத்த காரணத்தினால், இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்தார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவீதா, தன்னுடைய கணவர் பிரவீனுடன்
வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது. இதனையடுத்து கருக்கலைப்பு செய்யும்படி பிரவீன் கூறினார். ஆனால், கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு குற்றம் என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ரத்தம் விஷமாகி கடந்த அக்டோபர் 28ஆம் திகதி பரிதாபமாக சவீதா இறந்தார். உலகின் பலநாடுகளும் மருத்துவர்கள் அலட்சியத்தை கண்டித்தன. இந்நிலையில், சவீதாவின் மரணம் குறித்து பொது விசாரணை நடத்த அயர்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஜேம்ஸ் ரெய்லி ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து ஐரோப்பிய மனித உரிமை மீறல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரவீனும், சவீதாவின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். பிரவீன் சார்பில் வக்கீல் ஓ டோனெல் ஆவணங்களை தயாரித்து வருகிறார். அடுத்த வாரம் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் வக்கீல் தெரிவித்துள்ளார். பிரவீன் கூறுகையில், என் மனைவி சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அதிகாரிகள் நடத்திய 2 தனித்தனி விசாரணையில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளார் |
வெள்ளி, 30 நவம்பர், 2012
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் பலி
119- 120 ஆவது மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது?
| ஈரான் தனது சொந்த தயாரிப்பான
நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்களை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.
இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹேர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள
பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, 2 காதிர் ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. காதிர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானானது மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரமொன்றும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சந்தேகம் கொண்டுள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஈரானின் உறவை இது மேலும் சீர்குலைக்கலாம்{புகைப்படங்கள்,} |
போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் விடுவிப்பு
| போர்க்குற்றங்கள் தொடர்பான
வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் இருவரை சர்வதேச நீதிமன்றம்
விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
கொசாவா முன்னாள் பிரதமரும், கொசாவா விடுதலைப்படை முன்னாள் தளபதியுமான ரமூஸ்
ஹரடினாஜ் மற்றும் இவரது சகாக்களான இத்ரிஸ் பலாஜ், லாஹி பிராஹிமாஜ் ஆகியோர் மீது
போர்க்குற்றங்கள் புரிந்ததாக தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தனிநாடு கோரி போராடிய அல்பேனிய கொரில்லா படையினருக்கும், செர்பிய படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அப்போது செர்பியர்களையும், அல்பேனியர்கள் அல்லாதவர்களையும் கொன்றதாகவும், சித்ரவதை செய்ததாகவும் ஹரடினாஜ், இத்ரிஸ் பலாஜ் ஆகியோருக்கு எதிராக 6 போர்க் குற்ற வழக்குகளும், லாஹி பிராஹிமாஜ் மீது 4 போர்க்குற்ற வழக்குகளும் பதிவாகின. இந்த வழக்கின் மறுவிசாரணையில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி மூவரையும் விடுதலை செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. |
தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்ச் நுரையீரல் நோயால் கடும் அவதி
| அமெரிக்கா உட்பட பல்வேறு
நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையத்தள
நிறுவனர் அசாஞ்ச்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருந்த போது, சுவீடன்
நீதிமன்றத்தில் அசாஞ்ச் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாஞ்சை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார் அசாஞ்ச். பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மருத்துவரை வரவழைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈக்வடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது அசாஞ்சே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து நாட்டிற்கான ஈக்வடார் தூதர் அனா ஆல்பின் கூறுகையில், அசாஞ்சே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இது எந்த நேரத்திலும் மேலும் மோசமான நிலையை அடையலாம். முழு மருத்துவ செலவுகளையும் ஈக்வடார் அரசாங்கமே ஏற்றுள்ளது. மருத்துவர்கள் தினமும் சென்று அவருடைய உடல்நிலையை சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். |
ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்த கணவன்: வங்கதேச பெண்ணின் சோக கதை
| வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட்
ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு
தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர்.
வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18
வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது. மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை, பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார். அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார். இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்ட நூர்பானு, தற்போது மறுபடியும் அதே அடி உதையுடன் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம். இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது.{புகைப்படங்கள்,} |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























