siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 27 பிப்ரவரி, 2013

சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்,,,


அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.
நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார். இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன் பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும். இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள்.அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்கள் ஆகும்.{புகைப்படங்கள்,}


செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மின் நிலையத்தில் திடீர் கோளாறு: இருளில்,,,

 
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்சார தடை ஏற்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
குறிப்பாக ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவர், ஐதராபாத், குவெட்டா ஆகியவை இருளில் மூழ்கின.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள 1,200 மெகாவாட் தனியார் அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
பின்னர் இஸ்லாமாபாத் மின் துறையினர் மாற்று ஏற்பாடுகள் செய்து இஸ்லாமாபாத் உள்பட சில நகரங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்தனர்.
இந்த திடீர் தடையால் நாட்டில் 80 சதவீதப்பகுதி மின்சாரம் இன்றி இருந்ததாகவும், இதன் விளைவாக விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது
 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மருத்துவராக ஆங்கிலம் அவசியம்: பிரிட்டன் ?


பிரிட்டனில் பொதுமருத்துவராகப் பணிபுரிய நோயாளிகளின் கருத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் அவசியம் என்ற உத்தரவை அரசு உறுதி செய்துள்ளது.
அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் உபானிக்கு(Daniel Ubani) ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்தன்மூலம் லீட்ஸ் பிரைமரி கேர் அறக்கட்டளை நடத்திய மருத்துவமனை இவரை வெளியேற்றியுள்ளது.
இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதால் ஆங்கிலம் தெரியாத மருத்துவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இதனால் இவர்களை யாரும் வேலைக்கு அமர்த்தகூடாது எனவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது மருத்துவக் குழுவின் தலைமை நிர்வாகியான நியால் டிக்சன்(Niall Dickson) நோயாளிகளின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சுகாதார அமைச்சர் டேன் போல்ட்டர்(Dean Royles) கூறுகையில், நாம் சொல்வது மருத்துவருக்குப் புரியும் எனவும் நம் சிரமத்தை அவர் அறிவார் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கு வரவேண்டும். அதற்கு நோயாளி பேசும் ஆங்கிலத்தை மருத்துவர் புரிந்து கொள்ளும் மொழித்திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து நோயாளிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியான கேத்தரீன் மர்ஃபி(Katherine Murphy) இதனை வரவேற்றுள்ளார்.
 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த தாய்மார்கள்


குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.
ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது.
இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை.
இதையடுத்து தாய்மார்கள் சிலர் கூடிப் பேசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 10 பெண்மணிகள் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காலண்டர் தயாரிப்பது என்றும் அதை விற்று அதில் வரும் காசை பள்ளி நிர்வாகத்தின் பேருந்து சேவைக்குத் தருவது என்றும் முடிவெடுத்தனர்.
இதையடுத்து 10 பேரும் விதம் விதமாக போஸ் கொடுத்தனர். சிலர் டாப்லெஸ்ஸாவும், சிலர் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்தனர். இந்த காலண்டரை விற்பனைக்கும் விட்டனர்.
அதில் அவர்களுக்கு நல்லவரவேற்பும், வருமானமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர்களிடம் வருகிற யூன் மாதம் வரைக்கும் பேருந்தை இயக்குவதற்குத் தேவையான நிதி கிடைத்து விட்டதாம்.
இதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இதேபோல நிர்வாண காலண்டர் போட்டு நிதி சேகரித்து தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க திட்டமிட்டுள்ளனராம்
 

சனி, 23 பிப்ரவரி, 2013

நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன். .


மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன்(வயது 94) இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியுள்ளார்.
இவரது மனைவி குவண்டோலின் (வயது 89), பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இவர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வு கடந்த 16ம் திகதி நடைபெற இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அணுசக்தி உபகரணங்களை ஈரான் நிறுவுகிறது


ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகள் கூறி வருகின்றன.
உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுதக்குறைப்பு குறித்து வரும் 26ம் திகதி ஈரானுடன் கஜகஸ்தானில் பேசவுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் ஒன்றில் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுவதாக ஐ.நா. அணு முகமை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூறியிருப்பதாவது: கடந்த 6ம் திகதி, ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில், ஐ.ஆர்.-2எம் செண்ட்ரிபியூசு என்ற அதிநவீன அணுசக்தி உபகரணத்தை நிறுவத் தொடங்கியதை ஐ.நா. அணு ஏஜென்சி கவனித்துள்ளது. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஐ.ஆர். 1-ஐ காட்டிலும் இது மிகவும் அதிநவீனமான செண்ட்ரிபியூசு ஆகும்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 5 சதவிகிதம் பயன்படுத்தும் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை விட, 20 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் போர்டோ அணுசக்தி நிலையம் உலக மக்களை பெரிதும் கவலையடைய வைத்திருக்கிறது.
மேலும் இது அணுஆயுதம் தயாரிக்க தேவையான, 90 சதவிகிதம் அளவிற்கு அது நெருங்கிவருவதும் கவலை அளிக்கிறது என கூறியுள்ளது.
 

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ,,,

ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் "இணைய கண்ணாடி"களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது. இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் கொண்டு எளிதில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பங்கு பெறுபவர்கள் அமெரிக்காவில் வசிக்க இவர்கள் 50 வார்த்தைகளில் இந்த கண்ணாடி கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று விவரிக்கும் விண்ணப்பத்தை வரும் புதன் கிழமைக்குள் கூகுள் பிளஸ் அல்லது டுவிட்டர் மூலமாக அளிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் எத்தனை நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் என்று தெரிவிக்கவில்லை. கண்ணாடி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த கண்ணாடிகள் அடுத்த வருடம் சந்தைகளில் கிடைக்கும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் சில கண்ணாடிகளை கம்ப்யூட்டர் வல்லுனர்களுக்கு 1500 டொலருக்கு விற்பனை செய்திருக்கிறது. சந்தைக்கு வரும் இணையக் கண்ணாடிகளின் விலை ஸ்மார்ட் போன் விலையை விட கூடுதலாகவும், 1500 டொலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.{காணொளி}

இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய



பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் தலைமையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாலியல் தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 முதல் 35 சதவீதத்தை இவர் பெற்றுக் கொண்டதாகவும் பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ரிஷிக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறியுள்ள

தொடர்ந்தால் வடகொரியா மீது புதியபுதிய தடைகள்: .....


வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரியா ஜனாதிபதி மியூங் பக் எச்சரித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன.
இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அது தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
வடகொரியா சமீபத்தில் மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதையடுத்து அதன் மீது ஐ.நா. மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

பிரித்தானியா பெண்கள் கொந்தளிப்பு,,


பிரித்தானியாவில் சிறுவனுக்கு காண்டம் விற்ற கடைக்காரருக்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா ஓப்பி, என்பவர் தன் பத்து வயது மகனுக்கு கை செலவுக்கு பணம் தந்தார்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில் 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்" விற்ற கடைக்காரரிடம் சண்டை போட்டார்.
இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில், கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. மேலும் குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம் பிரித்தானியாவில் இல்லை.
ஆணுறைக்குள் நீரை நிரப்பி, தண்ணீர் பந்து போல விளையாடுவான் என்று நினைத்து விற்றோம் என்றார். இதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குழந்தைகளுக்கு ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும் இந்த விடயத்தில் கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்