siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 29 ஏப்ரல், 2013

உண்மைக்கு இடமில்லை! ஹிருனிகா -


இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
 நடக்கும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
 துமிந்த சில்வா தொடர்பில் தீர்மானிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
நான்கு குடும்பங்களைச் சீரழித்த துமிந்த சில்வா, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றுக்கொள்ள சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நியாயம கோர உள்ளதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 உள்நாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு வேறு முகத்தை காட்டி வருகின்றது.
 போர் வெற்றி குறித்த பிரச்சாரங்களைத் தவிர நாட்டி வேறு எந்த அபிவிருத்தியும் கிடையாது.
 நாட்டின் அபிவிருத்தியை சோடா போத்தல் அபிவிருத்தியாக அடைளப்படுத்த முடியும்.
 மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அரசாங்கம் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கேஸ் கசிவு ஏற்பட்டு அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து ?


பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள லில்லே என்ற ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டினுள் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி கீழே இடிந்து விழுந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்
 

தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்:,,


ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் மீது ஈராக் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 170 பொதுமக்கள் பலியாகினர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக சன்னி தீவிரவாதிகள் மேற்கு மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
நேற்று, அன்பர் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது அன்பர் மாகாணத்தின் ரமாடி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 

சிறைச்சாலையில் இரு பிரிவினரிடையே கடும்?:


மெக்ஸிகோ நாட்டின் சான் லூயி போடோசி மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. ஆயினும், காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக் கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 12க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த செயல்பாடுகள் மாற்றப்பட்டால் தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனவும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.
 

மூடப்போவதில்லை: புதிய விரிவாக்கத்திற்கு


நோவார்ட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் நியோன் என்ற ஊரிலிருந்து தனது மருந்து உற்பத்தியை மூடிவிடப் போவதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அதனை மூடப்போவதில்லை என்றும் 150பிராங்க செலவில் நிறுவனத்தை நவீனப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளில் 60 மில்லியன் பிராங்கும் அதனைத் தொடர்ந்து 2020ல் 90மில்லியன் பிராங்கும் முதலீடு செய்யப்பட்டு சிறப்பு மையமாக Centre of Excellence ஆக செயல்படும் என நோவார்ட்டிஸின் தலைவர் பாஸ்கல் ஃபிரானீசென் வியாழனன்று தெரிவித்தார்.
நோவார்டிஸ் நிறுவனம் ஒன்றரை ஆண்டுகள் முன்னரே மூடப்போவதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் 320 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவன மேலாளர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு, வரி சலுகைகளை தியாகம் செய்தனர்.
இத்தகைய காரணங்களை தொடர்ந்து நோவார்ட்டிஸ் நிறுவனம் முதலீட்டை அதிகரித்து சிறப்பு மையத்தின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.
 

ரஷ்யாவில் 140 இஸ்லாமிய தீவிரவாதிகள் ?,

அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் போட்டியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
 

சனி, 27 ஏப்ரல், 2013

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு'''


இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில்,
 புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை.
 இந்நிலையில் எமது சம்பள உரிமை குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடன் பல நேரடி சந்திப்புக்களை மேற்கொண்டபோதிலும் வெறும் இழுத்தடிப்புகளே ஏற்பட்டது.
 இந்நிலையிலேயே புகையிரத ஊழியர் தொழிற்சங்கங்கள் பலவும் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பினை மேற்கொண்டு இறுதித் தீர்மானமொன்றை எடுத்தது. இதன் பிரகாரம் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரதங்களும் ஸ்தம்பிதமடையும்.
 தொடர்ந்தும் அரசாங்கத்தின் பேச்சை நம்பி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்: பொப் கார்

இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 இலங்கைக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை ..

..

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அங்கு தீயணைப்பு படையினரும், பொலிசாரும் இணைந்து இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இறந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 3 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு வெளியில் இருந்து தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் மட்டும் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வங்கதேசம் நேற்று ஒரு நாள் துக்க தினம் அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு தேசிய கொடி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன
 

தென்கொரியா அழைப்பை நிராகரித்த வடகொரியா .,


தென்கொரியா எல்லையில் அமைந்துள்ள கெசாங் என்ற தொழில் மையம் ஒன்றில் வடகொரியா மற்றும் தென்கொரியா இரண்டும் கூட்டாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழில் மையத்தில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் திகதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9ம் திகதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆனால் மீண்டும் அத்தொழில் மையத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது.
இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது