siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 ஜூன், 2013

சிறிலங்காவை அழுத்தும் நவனீதம்பிள்ளை

     
 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ள நவநீதம்பிள்ளை, பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

 சிறிலங்காவில் போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்து தாம் அவதானிக்கவுள்ளதாகவும், தனது பயணத்தின் போது, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வரும் ஓகஸ்ட் 25ம் நாள் கொழும்பு செல்லும் நவநீதம்பிள்ளை, 31ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.

 சிறிலங்கா அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

வெள்ளி, 28 ஜூன், 2013

விவசாயிகள் மீது தாக்குதல் 22பேர் காயம்?


  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்திவருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்துவந்தனர்.
இது தொடர்பில் கடந்த ஆண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்பட்டு இராணுவத்தின் தலையீட்டின் காரணமாக அந்த முறுகல் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற பெருமளவான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 17பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்,
தமது பகுதிக்கான தண்ணீர் வரும்பகுதியை சில முஸ்லிம் விவசாயிகள் அடைத்துவைத்து தமது பகுதிக்கு அதனை திரும்பியிருந்தனர்.இதனை திறந்துவிடுமாறு பல்வேறு தடவைகள் கோரியபோதிலும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்இதண்ணீர் இல்லாத காரணத்தினால் எமது விவசாய நடவடிக்கைகள் முடங்கிப்போகின.
இதனை கருத்தில்கொண்டு இன்று அப்பகுதியில் விவசாயம் செய்யும் நாங்கள் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் கட்டப்பட்டுள்ள பகுதியில் திறந்துவிட முயற்சி செய்தோம்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பெருமளவானோர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்தியவர்களில் அதிகமானோர் அப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் அப்பகுதியில் ஈடுபடுவதில்லை.திட்டமிட்ட வகையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதன் மூலம் இப்பகுதியில் உள்ள காணிகளை தமிழர்கள் விற்றுவிட்டுச்செல்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்

 
 
  ரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் வடக்கின் அதிகாரப்பகிர்வினைப் பற்றி மட்டும் பேசுகின்றனரே தவிர, வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி பேசுவதாக இல்லை. வடக்கில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பிரயோகிப்பதா இல்லையா என்பதை விட வடக்கின் தமிழர்களை (பாதுகாக்க அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நிப்பொன் ஹோட்டலில் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திற்கொள்ளாது வடக்கில் 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்வாதார
பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
இன்று வரையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி எவரும் கதைக்கவுமில்லை. இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் எந்தத் தீர்வும் எடுக்கப்படவும் இல்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது.
வடக்கில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாய், தந்தையரை இழந்தும் பிள்ளைகள், கணவனை இழந்தும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் உள்ள மீனவர்கள் தொடர்ந்தும் இதுவரையும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
மேலும், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு தமது மொழியிலேயே அவர்களின் கருமங்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று வரையிலும் அப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இன்றும் வட பகுதிகளில் கட்டுப்பாடுகள், பலாத்காரம், ஆட்கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவை தொடர்பில் அப் பகுதி கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த கல்வி முறைமைகள் இல்லாதுள்ளது.
யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட தமிழர்கள் இன்னமும் இராணுவக்கட்டுப்பாடுடனேயே உள்ளனர். இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இவ்வாறு அப்பதவி மக்களுக்கு பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதா? இனியாவது அரசாங்கம் இவை தொடர்பாக பேசுமா?
சிறுபான்மை மக்களுக்கு சேவைகளை வழங்க அவர்களைப் பாதுகாக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை அரசு தவறவிட்டுவிட்டது. ஆகவே, இனிமேலாவது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களை மதிக்கும் செயற்பாட்டினை அரசு செய்ய வேண்டும்.
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் வடக்கு மக்களை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமாகும்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பின் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாகுமென அரசாங்கம் நினைக்கின்றது. 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் எவை இருந்தும் பிரயோசனமற்றதே. முதலில் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான ஓர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

வியாழன், 27 ஜூன், 2013

உக்ரேன் பிரஜைகள் இருவருக்கு கடூழிய சிறை!


 சிறீலங்காவில் கைதுசெய்யப்பட்ட உக்ரேன் நாட்டு பிரஜைகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரிசேன இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளின் தன்னியக்க பண பரிவர்த்தனை இயந்திரங்களிலிருந்து 11.1 மில்லியன் ரூபா வரையில் களவாக எடுத்தல் உட்பட அவர்கள் மீது சுமத்தப்பட்ட 26 குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்தே அவ்விருவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதன், 26 ஜூன், 2013

உயிருடன் கடலில் இருந்த கடல் கன்னி

 
கடல் கன்னிகள் கற்பனை என்று சொல்பவர்களும், நிஜம் என்று வாதடுகின்றவர்கள் என பலர் இந்த உலகத்தில் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனதுடன் இவர் கண்ட இக்காட்சியை வீடியோ பிடித்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார்உயிருடன் கடலில் இருந்த கடல் கன்னி காணொளி! கடல் கன்னிகள் கற்பனை என்று சொல்பவர்களும், நிஜம் என்று வாதடுகின்றவர்கள் என பலர் இந்த உலகத்தில் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவ்வாறானகாட்சியால்பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது {,காணொளி!}

 

செவ்வாய், 25 ஜூன், 2013

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அழைப்பாணை


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவருக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு சமுகமளிக்குமாறே நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமுகமளிக்காததை அவதானித்த நீதிபதி குமுதினி விக்கிரமசிங்,க அவருக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணையை அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களான செ. கிருபாகரன், ச. சூரியகுமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
எனினும், சாட்சியமளிப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சமுகமளிக்காமையினால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


திங்கள், 24 ஜூன், 2013

பிரித்தானியா செல்லும் ஆசிய நாட்டவர்கள் 3000 பவுண்ட்களை

 
 
பிணையாக செலுத்த புதிய திட்டம்  பொருளாதார தேக்க நிலை காரணமாக உலக நாடுகள் அந்நிய நாட்டவர்களை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றுவதும் உள்நாட்டவருக்கே வேலை என்ற திட்டத்தையும் மெல்ல ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தும் ஏற்கனவே, இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
தற்போது சட்டத்திற்குப் புறம்பாகத் தங்குபவர்களை ஒடுக்கும்விதமாக விசா பெறுவதன் விதிமுறைகளை மேலும் கடினமாக்குகின்றது. வரும் நவம்பர் மாதம் முதல், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல விசா பெறுபவர்கள் காப்புத் தொகையாக அந்த நாட்டு பணத்தின்படி 3,000 பவுண்ட் (2.70லட்சம் ) செலுத்தவேண்டும்.
விசா காலம் முடிந்தபின் குறிப்பிட்ட நபர் இங்கிலாந்தை விட்டு வெளியேறாவிட்டால் காப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது. இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக அங்கேயே தங்கிவிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று இங்கிலாந்து கருதுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளுக்கு இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கேயே தங்கிவிடுவதைத் தடுக்கும் வகையிலேயே தங்களுடைய குடியேற்ற அனுமதி முறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், நாட்டிற்குத் தேவையான, திறமையானவர்களை அவர்கள் நாடு வரவேற்கவே செய்கின்றது என்றும் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் தெரசா மே கூறியுள்ளார்.
கடந்த 2011-12ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு படிப்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லுபவர்கள் விசா பெறுவது 20 சதவிகிதம் குறைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து தங்கும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் வெறும் 74,000 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது

அண்டை நாட்டினரை விட மிகவும் பணம் படைத்தவர்களாக திகழும்


ஜேர்மனியின் அண்டை நாடுகிளில் வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை விட ஜேர்மனி நாட்டின் மையத்தில் வசிப்பவர்களே அதிக பணம் படைத்தவர்களாக திகழ்கின்றனர் என ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் பட்ஜ் வங்கி நடத்திய ஆய்வில்(German Bundesbank) ஜேர்மன் மக்களை விட அண்டை நாடுகளில் வசிப்பவர்கள் சராசரி விகிதத்தின் படி அதிக ஏழைகளாக உள்ளனர்.
வீட்டுவருமானம், வங்கியிருப்பு, வயது, வேலை மற்றும் கல்வி, ஆகிய அடிப்படையில் ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மன் அல்லாதவரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சராசரியாக அண்டைநாடுகளில் வசிப்பவர்களை விட ஜேர்மன் நாட்டினர் 10000யூரோ அதிமம் சம்பாதிக்கின்றனர். அண்டைநாட்டில் வசிப்பவர்களின் சராசரி நபரின் சம்பளம் 34000யூரோ யெனில், ஜேர்மன் நாட்டில் வசிக்கும் சராசரி கீழ்வர்க்க நபரின் சம்பளம் 44000யூரோவாக உயர்ந்து காணப்படுகின்றது.
அதிக வசதிபடைத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதன் மதிப்பு இன்னும் அதிக அளவில் வேறுபட்டு காணப்படுகின்றது. அண்டைநாட்டினரின் சம்பளமானது 24000யூரோவாகவும், ஜேர்மன் நாட்டில் வசிப்பவரின் சம்பளமானது 78000யூரோவாகவும் உள்ளது.
அண்டைநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மன் நாட்டில் வசிப்பவர்கள் 81 சதவீதம் பேர் சொந்த வீடு மற்றும் வாகனத்துடன் மிகவும் வசதியாக வாழ்வதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.
 

சனி, 22 ஜூன், 2013

ஜனாதிபதியாக பெண் ஒருவரே வரவேண்டும்:


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியாவார்.
இவர் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அத்துடன் இவர் வெளியுறவு துறை மந்திரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மேலாண்மை தகுதி மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்குகளில் சிறப்புரை நிகழ்த்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.
அமெரிக்க அதிபராகும் நோக்கில் தான் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பில் கிளிண்டனும் சூசகமாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனடா நாட்டு மாணவர்களுடன் "யூ டியூப்" மூலமாக பேசிய ஹிலாரி கிளிண்டன்:-
"எனது வாழ்நாளுக்குள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்மணி பொறுப்பேற்பதை காண ஆசைப்படுகிறேன். அடுத்த முறையோ அல்லது, அதற்கு அடுத்த முறையோ சிரமமான அந்த பதவியில் ஒரு பெண் அமர்ந்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற செய்தியை ஆண் சமுதாயத்துக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராகும் ஆசை ஹிலாரிக்கு இல்லை என ஒரு தரப்பினர் கூறிவந்த போதிலும் தனது மனதுக்குள்ளும் அமெரிக்க அதிபராகும் ஆசை சிறகடித்துக் கொண்டிருப்பதை ஹிலாரி கிளிண்டன் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்
 

மலிவான விலையில் விற்கப்படும் ஜேர்மன் சாராயம்


ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது மற்ற ஜரோப்பிய நாடுகளை விட மிகவும் குறைவான விலையிலேயே விற்கப்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய மதுவானது ஜரோப்பிய நாடுகளில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மற்ற ஜரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது ஜேர்மனி நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து குடிப்பதற்கு தாயாராக உள்ளனர்.
ஜரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்கரியா (Bulgaria) ரோமனியா (Romania) மற்றும் ஹங்ரே (Hungary) ஆகிய பகுதிகளில் மதுவின் விலையானது மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இதன் விலையானது உணவு, புகையிலை, மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலையிலேயே உள்ளன.
புகையிலை, உணவு, மற்றும் பானங்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டாலும் சில இடங்களில் அதன் விலையானது பல்வேறு விதங்களில் வேறுபடுகின்றன.
ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது உணவுப் பொருட்களின் விலையுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலை என்பது நம்பமுடியாத ஒன்றாகும்