This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 7 ஜூலை, 2013
வெள்ளி, 5 ஜூலை, 2013
கற்பழிக்கப்படுவதை பெண்களே விரும்புகிறார்கள்:
தாங்கள் கற்பழிக்கப்படுவதை சில பெண்களே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள இஸ்ரேல் நீதிபதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல் அவிவ் மாவட்ட நீதிபதி நிஸ்ஸின் யஷயே என்பவர் தான் இப்படி கருத்து கூறியுள்ளார்.
கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த யஷயே கருத்து தெரிவிக்கையில், சில பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தாங்கள் கற்பழிக்கப்படுவது பிடித்திருக்கிறது, அதை விரும்பவும் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெண்கள் நல கமிட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
13 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில்தான் இந்த நீதிபதி இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்.
நான்கு பாலஸ்தீனியர்கள் சேர்ந்து இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டும், அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிபதி இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.
குப்பை தொட்டியில் ஏழு மனித தலைகள்
மெக்சிகோவில் குப்பை தொட்டி ஒன்றில் ஏழு மனித தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சகோல்கோ நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில், சுமார் ஏழு தலைகள் மற்றும் சில உடல் உறுப்புகள் அடைத்து வைக்கப்பட்ட குப்பை கவர் கிடைத்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார், இந்த தலைகள் யாருடையது, எதற்காக இங்கு வந்து போடப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு
எகிப்தில் நேற்று திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கு அதிபராகக் கடமையாற்றிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த் முஹம்மது மோர்ஸி பதவியிறக்கப் பட்டதுடன் அவர் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டு இடைக்கால அதிபராக மூத்த நீதிபதி மன்சூர் நியமிக்கப் பட்டிருந்தார்.
எகிப்தில் கடந்த சில நாட்களாக மோர்ஸிக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
புதன்கிழமை ஆர்ப்ப்பாட்டத்தின் போது போலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததில் 30 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோர்ஸி பதவியிறக்கப் பட்டு வீட்டுக்காவலில் வைக்கப் பட்டதால் அங்கு ஜனநாயக முறைப்படி அரசு அமையவுள்ள காரணத்தால் எகிப்து பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாற்றம் குறித்து ஜேர்மனி கருத்துத் தெரிவிக்கையில் எகிப்தில் ஜனநாயகம் நிலவுவதற்காக அதிக இழப்புடன் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி இதுவெனக் கூறியுள்ளது.
இதேவேளை சக நாடுகளுடன் இறுக்கமான அரசியல் கொள்கைகளையும் நட்புறவையும் கொண்டிருந்த அதிபர் மோர்ஸி பதவியிறக்கப் பட்டது உலகளாவிய ரீதியில் சாதகமான பயன்களையே ஏற்படுத்தக் கூடியது என்று அரசியல் அவதானிகள் கூறும் வேளை தற்போது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் வியாழக்கிழமை மோர்ஸி பதவியிறக்கப் பட்டதை வரவேற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளன.
எகிப்தில் இதற்கு முன்னர் இந்தளவு மிகப் பெரிய மக்கள் எழுச்சி நிகழ்ந்ததோ அல்லது மக்களின் எதிர்ப்பினால் அதிபர் பதவியிறக்கப் பட்டதோ நிகழ்ந்தது கிடையாது என்பதால் தற்போது அங்குள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் விழிப்புடன் உள்ளன. அதாவது இக்கட்சிகள் அல்லது இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயக ரீதியாக அங்கு ஆட்சிக்கு வரக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளன என்பதை இப்புரட்சி மூலம் உணர்ந்துள்ளன.
இதேவேளை இதுவரை மோர்ஸியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்த்திய எகிப்து மக்கள் வியாழக்கிழமை கெய்ரோவிலுள்ள டாஹ்ரிர் சதுக்கத்தில் அமைதியான முறையில் அவர் பதவி நீக்கப் பட்டு தேர்தல் நடைபெறவுள்ள சந்தோசத்தை அமைதியான முறையில் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் எழுப்பியும் கொண்டாடியுள்ளனர்
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 50 பேர் பலி:12 000 பேர்
மேலும் 19 பொதுமக்களைக் காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மொன்சூன் பருவமழை சீசனான இப்போதைய காலநிலை காரணமாக நேபாளின் தெற்கு பீடபூமிகளும் மேற்கு மலைப் பிரதேசங்களும் முக்கியமாக இவ்வனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 900 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மேலும் பண்ணைத் தொழிலுக்காக வளர்க்கப் பட்ட 1000 விலங்குளும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளன. இந்நிலையில் நேபாள அரசு நிவாரணப் பணிகளுக்கென 9.2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலில் பாகிஸ்தானில்
பாகிஸ்தான் அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களான டிரோன் தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
சமீபத்திய தாக்குதலாக நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடியினர் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களையும் வாகனங்களையும் குறிவைத்து நிகழ்த்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையான சிஐஏ இனால் இயக்கப் பட்ட ஆளில்லா டிரோன் விமானம் ஆப்கான் எல்லையிலுள்ள வடக்கு வரிஷிஸ்டான் பழங்குடியினர் பகுதியான மிரான்ஷாஹ் இல் தீவிரவாதிகளின் வாகனத்தைக் குறி வைத்து 4 ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் இறந்தவர்களின் அடையாளம் இன்னமும் உறுதிப்படுத்தப் படாத நிலையில் குறித்த இடம் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் அதிகம் வசிக்கும் இடம் எனக் கூறப்படுகின்றது. மேலும் நேற்றைய தாக்குதல் இந்த இரு மாதங்களில் நிகழ்த்தப் பட்ட 2 ஆவது தாக்குதலாகும்.
கடந்த மாதம் வடக்கு வஷிரிஸ்டானில் நிகழ்த்தப் பட்ட டிரோன் தாக்குதலில் 7 ஆயுததாரிகள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் இந்த சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் பாகிஸ்தான் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆல் கடுமையாகக் கண்டிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பல அப்பாவிப் பொது மக்கள் கொல்லப் படக் காரணமான அமெரிக்காவின் இந்த சட்ட விரோத டிரோன் தாக்குதல்களை தான் தடுத்து நிறுத்துவேன் எனத் தேர்தல் சமயத்தில் நவாஸ் ஷெரீஃப் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம்??
சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களை விடுமுறை நாட்களில் இலங்கைக்கு வருவதற்கான விமானப் பயணச் சீட்டையும் விடுமுறை முடிந்து மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கான விமானச் சீட்டையும் பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று மாத காலம் ஏமாற்றிய விமானச்சீட்டு விற்பனையாளர் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்புக்காகச் சென்ற ஆறு மாணவர்களுக்கு விமானச்சீட்டு பெற்றுத் தருவதாக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்தும் தலா 85இ000 ரூபா வீதம் மொத்தமாக 510,000 ரூபாவை கடந்த மார்ச் மாதம் சந்தேக நபர் பெற்று சுமார் மூன்றுமாத காலமாக ஏமாற்றி வந்ததாக பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபர் பம்பலப்பிட்டி பகுதியில் விமானச் சீட்டு விற்பனை முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அவரை விசாரணைகள் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்
ஒட்டு கேட்பு கருவி: அதிர்ச்சி தகவல் வெளியானது
லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என ஸ்னோடென் வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருக்கிறது. இந்தக் கருவியை செய்தியாளர்களிடம் ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதே ஈக்வடார் தூதரகத்தில்தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே கடந்த ஓராண்டு காலமாக தஞ்சம் புகுந்து இருக்கிறார். அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவதே இல்லை.
அப்படி வெளியே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் அதே தூதரகத்தில் தான் இத்தகைய ஒட்டு கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வியாழன், 4 ஜூலை, 2013
பிரான்ஸ் நாட்டின் சீஸ்க்கு தடை
தயாரிக்கப்படும் சீஸ்க்கு தடைவிதிக்க அமெரிக்க நாடானது உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் சீஸ்க்கு தடைவிதிக்க அமெரிக்க நாடானது உத்தரவிட்டுள்ளது.
ஒமேலும் அதன்மேல் சில வகையான சாம்பல்களை தடவி அதன் விற்பனைக்காக அழகுபடுத்துகின்றனர். ஆனால் இதனால் பல வியாதிகளே ஏற்பட வாய்ப்பு உள்ளன என FDA முகவர் அறிவித்துள்ளனர்.
இதனை தடை செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு எந்த நஷ்டஈடும் கொடுக்க முடியாது. ஆனால் இதனால் பெருமளவு தொழிலாளர்களே பாதிக்கப்படுவதால் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையான மிமோலட் சீஸ்க்கு(Mimolet chees) ஏராளமான ரசிகர்கள் அதிகம். இதனை பிடிக்கும் வகையில் 3,000 நபர்கள் பேஸ்புக்கில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் சுவைக்கு அடிமையாகி ஏராளமானோர் கடந்த ஏப்ரல் மாத்தில் நியுயார்க் நகரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சீஸ் இறக்குமதியாளர் கூறுகையில் கடந்த 20 வருடங்களாக எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். ஆனால் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுமோ என அச்சுறுத்தலாக உள்ளது என கூறியுள்ளார்
மாணவியின் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியரால்???
ஜப்பானில் ஆசிரியர் ஒருவர் 7 வயது மாணிவியின் வாயில் டேப் ஒட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜப்பானில் பள்ளி மாணவ- மாணவிகள் மதிய உணவை தங்கள் வகுப்பறையில் வைத்தே சாப்பிடுவது வழக்கம்.
அவ்வாறு சாப்பிடும் போது, சாப்பாடு பரிமாறும் மாணவிகள் தங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணியவேண்டும்.
இதனை மீறும் குழந்தைகளை ஆசிரியர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு டோக்கியோவின் டோச்சிகியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு பரிமாறிய 7 வயது சிறுமி, மாஸ்க் அணியவில்லை.
இதனால் அவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தனது மாஸ்க்கை எடுத்து வர மறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் அந்த சிறுமியின் வாயில் இருந்து மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் வாயில் டேப் ஒட்டியிருக்கிறார்.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















