siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 15 மே, 2014

இறந்தாலும் பாஸ்போர்ட் மூலம் வாழும் ஜேர்மன் மக்கள்

ஜேர்மனியில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை மற்றவர்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததை அடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனி தலைநகரான பெர்லின் இடுகாட்டில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை, கடத்தல்காரர்கள் மூலமாக ஒரே மாதிரி இருக்கும் மற்ற அகதிகளுக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ”ஆபரேசன் ஃப்னரல்”(Operation final)என்ற பெயரில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிசார் நியூக்லினில், க்ரொயிட்ஸ்பேர்க் மற்றும் சோனாபேர்க் பகுதியில் உள்ள இடுகாடு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகத்தை சோதனை செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் ஒரு பெட்டி முழுவதும் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் இதுவரை இவ்வழக்கில் எவரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

வெள்ளி, 2 மே, 2014

சிறையில் வெடிவிபத்து: 150 கைதிகள் காயம்``

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சிறையில் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் 150 கைதிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் தொடர்பு அதிகாரி கேத்லீன் கேஸ்ட்ரோ கூறியதாவது:

எஸ்கேம்பியா பகுதியில் உள்ள சிறையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில், அந்த கட்டடத்தில் இருந்த 600 கைதிகளில் 150 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்குப் பிறகு கைதிகள் அனைவரும் வேறு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கேத்லீன் கேஸ்ட்ரோ தெரிவித்தார். கடந்த 2 நாள்களாக கனமழை பெய்ததால் சிறை வளாகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 1 மே, 2014

10 பேர் பலி ரஷிய வெடிமருந்து கிடங்கில் தீ:

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்துக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 ராணுவ வீரர்களும், எட்டு பணியாளர்களும் உயிரிழந்தனர்.
“”கிடங்கு அமைந்திருந்த இடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீயிலிருந்து கிடங்குப் பணியாளர்களை இரு ராணுவ வீரர்களும் வாகனத்தில் ஏற்றி காப்பாற்ற முயன்றபோது வெடிமருந்துகள் வெடித்து அந்த வாகனம் தீப்பிடித்தது.
அதனால், வாகனத்திலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்” என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

விஷவாயுவை பயன்படுத்திய ஜேர்மன்{ காணொளி]

  வரலாற்றில் இன்றைய தினம்: 1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி
.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக்

1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது
.
2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சுனாமி எச்சரிக்கை சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில்`!!:

சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாலமன் தீவுகளில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலமன் தீவுகள், பப்புவா நியூகினியா மற்றும் நியூ கெலடோனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சாலமன் தீவுகளி்ல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16 பேர் உயிரிழந்தமை குறிப்புடத்தக்கது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 

திங்கள், 7 ஏப்ரல், 2014

கொரியாவைத் தாக்க தயாராகும் அமெரிக்க கப்பல்கள்

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்த்தது. இதனால் ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ராணுவ செயலாளர் சக்ஹெகல் ஆசிய பசிபிக் நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.
அங்கு ஜப்பான் ராணுவ அமைச்சர் சுனோரி ஒனோடெராவை சந்தித்து பேசினார். அப்போது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அமெரிக்க ராணுவ செயலாளர் சக் ஹெகல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்க ஜப்பானுக்கு ஏவுகணைகளை தாக்கி அளிக்கக்கூடிய 2 போர்க்கப்பல்களை அமெரிக்கா வழங்க இருப்பதாக கூறினார்.
இக்கப்பல்கள் 2017–ம் ஆண்டு வழங்கப்பட உள்ளன. இக்கப்பல்களில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கருவி உள்ளது. அது நீண்டதூரம், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழிமறித்து மோதி அழிக்கும் திறன் கொண்டது.
ஏற்கனவே இதுபோன்ற 5 போர்க்கப்பல்களை ஜப்பானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 3 ஏப்ரல், 2014

இலங்கைத் தமிழர் இருவருக்கு தற்காலிக வீசா

 அவுஸ்திரேலியாவில் படகு மூலம் சென்று அகதி அந்தஸ்த்து கோரி இருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசா எதிர்வரும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா பாலசுந்தரம் மற்றும் சிவா ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “
இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து படகின் மூலம் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் குடியேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 30 மார்ச், 2014

தீவிபத்தில் நிலவும் மர்மம்!



கனடாவில் கட்டடம் ஒன்றில் மூன்று பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் (Charlottetown) சார்லட்டவுன் மாகாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் சிக்கினர்.

இவர்களை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடும் புகை மூட்டத்தினால் காப்பாற்ற இயலாமல் போயினர்.

இதனையடுத்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அந்நபர்களை மீட்பதற்குள் அவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் காலியான இக்கட்டடத்தில் வாலிபர்கள் சிலர் அவ்வப்போது வந்து செல்வர் என்றும் எவ்வாறு இச்சம்பவம் அரங்கேறியது என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 28 மார்ச், 2014

நிதி மோசடி மன்னர்களை சுற்றிவளைத்த பொலிசார்

 
கனடாவில் நிதி மோசடி விவகாரத்தில் ஆறு பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களை மோசடி செய்து வரி மோசடியில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கனடாவின் RCMP பொலிஸ் குழுவினர் கூறுகையில், தாங்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் மோசடியாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கப்பட்டது என்றும் குறிப்பாக 1,000 – 300,000 வரைமுதலீடு செய்த 493 நபர்கள் மேல் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

புதன், 19 மார்ச், 2014

மர்மங்கள் நிறைந்த கலைநிபுணரின் மரணம்

சுவிசை சேர்ந்த பெண் ஒருவர் தன் தாயின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிசை சேர்ந்த 69 வயது நிரம்பிய ரெமி சாக் என்ற கலை நிபுணர் ஒருவர் பிரான்சின் முல்ஹவுஸ் மாகாணத்தில் உள்ள அல்சாஸ் பகுதியில் கடந்த சனவரி மாதம் சடலமாக எடுக்கப்பட்டார்.
இவர் தன் வீட்டின் முன் தலையில் இரத்த கரையுடன் இறந்து கிடந்ததை பார்த்த பொலிசாருக்கு, இவரது மகள் அப்பகுதியில் வசிப்பது தெரியவந்தது.

இவர் தன் மகளுடன் வாழ்ந்து வந்ததால், அவரது மகளின் மீது பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தாயிற்கும், மகளிற்கும் இடையே தகராறு நேர்ந்ததாக கூறப்படுகிறது.
எனினும் அவர் புத்திசுவாதீனமற்றவராய் இருப்பதால் பொலிசார் விசாரணையை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், மனநோயாளியாக உள்ள ரெமியின் மகள் எப்போது குணமடைவார் என கூற இயலாது என்றும் இவர் பூர்ணமாக குணமடையும் வரை விசாரணை ஏதும் நடத்தபடக்கூடாது எனவும் ராபின் என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.