siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அஞ்சலி திடீர் வருகை. ஓய்வை அறிவிக்கின்றாரா சச்சின்?


 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபகாலமாக மோசமாக ஆடிவருகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது சொந்த மண்ணில் நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்டில் சச்சின் 7 இன்னிங்சில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ச்சியாக மோசமாக ஆடிவருவதால் நாக்பூர் டெஸ்டுடன் சச்சின் ஓய்வுபெற வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சச்சின் கடந்த 28-ந் தேதி தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிசிசிஐ நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் நாக்பூருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி நேற்று திடீரென வருகை தந்துள்ளார். இதனால் சச்சின் ஓய்வு முடிவை அறிவிக்ககூடும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக அஞ்சலி கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் 50வது சதத்தை அடித்தபோது கூட அதனை நேரில் காண அஞ்சலி செல்லவில்லை. தற்போது அவர் சென்றுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது

கப்பல் கவிழ்ந்து 18 பேர் சாவு?

கிரேக்கக் கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்; 9 பேரை காணவில்லை.
துருக்கியிலிருந்து கிரேக்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் ஆபத்தான கப்பல் பயணத்தை மேற்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 28 பேர் கொண்ட குழு துருக்கியிலிருந்து, கிரேக்கத்துக்கு கப்பலில் சென்றது. லெஸ்வோஸ் தீவு அருகே அக்கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 9 பேரை காணவில்லை. உயிர் பிழைத்த 20 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கப்பலில் பயணம் செய்த அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது

விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலியாயினர், 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது. இச்சம்‌பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர் மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதல் ராக்கெட் குண்டு விமான ஓடுதளத்திலும் மற்றொன்று வெளிப்பகுதியிலும் வெடித்தது என கூறினார்.
மேலும் காயமடைந்தவர்கள் விமான நிலையம் அருகே உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நி‌லமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து விமான நிலைம் பாகிஸ்தானின் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது{புகைப்படங்கள், }.






துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: ஒபாமாவுக்கு

 
அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிசூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமாவுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். கனெக்டிகட் மாகாணம் நியூடவுன் பகுதியில் உள்ள சான்டி ஹூக் தொடக்கபள்ளியில், ஆடம் லான்சா என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
பின்னர் அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து லான்சாவின் தந்தை மற்றும் மூத்த சகோதரரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜனாதிபதி பராக் ஒபாமா, கண்ணீர் மல்க தொலைக்காட்சிக்கு நேரடி பேட்டி கொடுத்தார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகைக்கு ஓன்லைன் மூலம் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுக்கும் வகையில், கடும் கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கி சட்டத்தைத் திருத்தி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு அனுப்பப்பட்ட இதில் 43,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க், துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவம் நிகழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இந்த பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு குறித்த ஜனாதிபதி ஒபாமாவின் இரங்கல் செய்தி மட்டும் போதுமானது அல்ல. இதுபோன்ற சம்பவங்கள், விர்ஜினியா டெக், அரோரா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கிச் சட்டத்தை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

போனில் மிரட்டிய தீவிரவாதிக்கு சிறைத்தண்டனை

அமெரிக்க மருந்து நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ரோடி தீவில் வசிப்பவர் ஷானீல் ஜெயின்(வயது 56).
இவருக்கும், அமெரிக்க இராணுவத்திற்கு மருந்துகள் தயாரித்து வழங்கும் இசட்-மெடிக்கா என்ற நிறுவனத்திற்கும் இடையே மோதல் இருந்தது.
இந்தியா வந்த ஜெயின், அங்கிருந்தவாறு அமெரிக்காவில் உள்ள இசட்-மெடிக்கா நிறுவனத்திற்கு பல முறை போன் செய்து மிரட்டியுள்ளார்.
தான் தீவிரவாதி எனவும், அந்த மருந்து நிறுவனத்தை, குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், இந்தியாவில் அமெரிக்க சட்டங்கள் செல்லுபடியாகாது எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க பொலிசார் ஷானீல் ஜெயினை கைது செய்தனர். பின் ஜெயின் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீவிரவாதி என தெரிவித்து மிரட்டல் விடுத்த ஜெயினுக்கு, 6 மாத சிறை தண்டனையும், 6 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து கனெக்டிகட் மாவட்ட நீதிபதி டேவிட் பென் உத்தரவிட்டார்.

ஹிலாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு: வட ஆப்ரிக்கா பயணம் ரத்து

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹிலாரி கிளிண்டன் கடந்த 4 ஆண்டுகளில் 112க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதும் தொடர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வரும் ஹிலாரி நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் மயங்கியதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலம் சரியாகும் வரை அவர் வீட்டில் இருந்தே பணிபுரிவார் என்று கூறப்படுகிறது.
அவரை தினமும் டொக்டர்கள் கண்காணித்து வருவார்கள் என்று தெரிகிறது.
டொக்டர்களின் பரிந்துரையின்பேரில் தான் அவர் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார்.
அவர் விரைவில் அலுவலகத்திற்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன.
ஹிலாரி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விட்டு கடந்த வாரம் அமெரிக்கா திரும்பியதும் அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் கடந்த வாரம் பணியாற்றவில்லை, இந்த பிரச்னையால் அவர் தனது வட ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நிலநடுக்க மையம் தெரிவிக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் உள்ள படுக்கைகள், மற்றும் பாத்திரங்கள் உருண்டதனால் மக்கள் பதற்றம் அடைந்தார்கள்.
பூமிக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சனி, 15 டிசம்பர், 2012

இளம் அரசியல்வாதியின் தற்கொலைக்கு காரணம் காதலா?அதிர்ச்சி


யிர்த் தியாகம் செய்​தாவது கூடங்குளம் அணு மின் உலை​யைத் திறக்க உறுதி ஏற்க வேண்டும்’ என இரண்டு மாதங்​களுக்கு முன், காஞ்சி​யில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழங்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி இளை​ஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்​பட் டவர். இவரது திடீர் மரணம் பலத்த சர்ச்சை​யைக் கிளப்பி உள்ளது!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாச னின் தீவிர ஆதரவாளருமான எஸ்.டி.நெடுஞ்செழியனின் மகள்​ ஐஸ்வர்யா. மூன்று மாதங்​களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் பாராளு​மன்றத் தொகுதித் தலைவர் தேர்தலில் காஞ்சிபுரம் தொகு​திக்குப் போட்டியிட்டு, மாநிலத் திலேயே அதிக வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றவர். சிரித்த முகம்,அளவான பேச்சு, பெரியவர்களிடம் மரியாதை என வளைய வந்தவர், சீரிய​ஸான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் பரவியது. கடந்த 11-ம் தேதி அவர் இறந்து விட்டதாக இறுதித் தகவல் வந்துசேர, சோகமானது காஞ்சிபுரம் காங்கிரஸ் வட்டாரம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் ஓ.வி.அமர்​நாத், ''23 வயதில் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய பொறுப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங் பட்டதாரி. சிறு வயதில் இருந்தே அரசியல் ஆர்வம் அதிகம். ஒரே மகளின் ஆசைக்கு நெடுஞ்செழியனும் குறுக்கே நிற்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் ஆனார். தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்​சியில், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு துடிதுடிப்போடு வலம் வந்தார். மூத்த நிர்வாகிகளிடம் மரியாதை, சிறியவர்களை சரிக்குச்சமமாக நடத்துவது என்ற அவரின் இயல்பு எல்லோருக்கும் பிடிக்கும். காஞ்சியில் அவரது அணுகுமுறையால் இளைஞர்கள் இடையே ஓர் எழுச்சி உருவானது. அந்த நம்பிக்கைகள் ஒரே நாளில் தகர்ந்து விட்டதில் நாங்கள் நொந்துபோய் இருக்கிறோம்'' என்றார் வேதனையோடு.
'ஐஸ்வர்யாவின் மரணத்துக்குக் காரணம், காதல் விவ காரம்தான். காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் உள்ள தலைவர் ஒருவரை ஐஸ்வர்யா காதலித்தார். அதை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்’ என்ற தகவல் காங்கிரஸ் வட் டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறது.
இறுதி மரியாதை செலுத்தவந்த இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் யுவராஜிடம் பேசினோம். ''ஐஸ்வர்யா, இளைஞர் காங்கிரஸுக்குக் கிடைத்த பொக்கிஷம். செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், ரொம்ப எளிமையாகவே அனைவரிடமும் பழகுவார். இன்ஜினீயரிங் படித்த அவர், எப்படியோ செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால், அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு அதிக ஈடுபாடு. அவருடைய வேலைகளைப் பார்த்து, எதிர்காலத்தில் என்னென்னவோ சாதிப்பார் என்று கட்சியின் மூத்தவர்கள் எல்லோரும் நம்பினர். ஆனால், விதி வேறு முடிவு எடுத்து விட்டது'' என்றவரிடம், ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டோம். ''அனைத்தும் சுத்தப் பொய். எந்த நேரமும் காங்கிரஸும் கட்சிப் பணியும்தான் அவருடைய சிந்தனையில் இருந்தது. ஓர் ஆணின் இறப்புக்குக் கேள்வி எழுப்பாத இந்தச் சமூகம், அதுவே பெண் என்றால் வாய் கூசாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரே மகளை இழந்த துக்கத்தில் இருக்கும் அவரின் பெற்றோருக்கு இது எத்தகைய மன வலியை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணராதது வேதனை. அவருக்குச் சின்ன வயதில் இருந்தே மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி பிரச்னை இருந்தது. அதற்காக 10 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 5-ம் தேதி காலையில் வழக்கம்போல தலைவலிக்காக அந்த மருந்தைச் சாப்பிட்டிருக்கிறார். தன் அறைக்குச் சென்று, பிரைவசிக்காகக் கதவை உள்புறம் சாத்தி இருக்கிறார். அதனால், அவர் வலியால் துடித்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. நீண்ட நேரம் வெளியில் வராததால், கதவைத் திறந்து சென்று மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்​தனர். ஒரு கட்டத்தில் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு சுயநினைவை இழந்திருக்கிறார். கடந்த 11-ம் தேதி காலை இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்'' என்றார் சோகமாக.
ஐஸ்வர்யாவின் பெற்​றோர் சார்பாகபேசியகாங்​கிரஸ் பிரமுகர் மலையூர் புருஷோத்தமன், ''ஐஸ்வர்யா பிறக்கும்போதே ஒற்றைக் கிட்னியுடன் பிறந்தவர். அதோடு அவருக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. தலை வலிக்கான மாத்திரையை சம் பவம் நடந்த அன்று வலியின் வேதனையால் கூடுதலாக எடுத்துக் கொண்டார். அது வலியை அதிமாக்கிவிட, அதைத் தாங்க முடியாமல் தற் கொலை முடிவுக்குச் சென்று விட்டார். அப்படி இருக்கும்​போது ஐஸ்வர்​யாவின் மரணத்தை 'காதல் தோல்வி’ என்று கொச்சைப்படுத்துவது வேதனையின் உச்சம்'' என்று வருத்தப்பட்டார்.
வழக்கின் விசாரணை அதிகாரி​யான அடையாறு உதவி ஆய்வாளரான தினேஷ்குமார், ''ஐஸ்வர்​யாவுக்குத் தீராத வயிற்று வலி இருந்ததாகவும், வயிற்று வலி கடுமையாகி அதைத் தாங்க முடியாமல் தனது அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தந்துள்ளனர். தூக்கில் தொங்கியவரை உடனே மீட்டு மலர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குடும்பத்தினர் தந்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்திருக்​கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்காத வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அறிக்கை வந்த பின் அடுத்தக் கட்ட விசாரணை தொடங்கும். வேறு ஏதாவது தடயம் கிடைத்தால் அதையும் விசாரிப்போம்'' என்றார்.
ஓர் இளம் தலைவியின் மரணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அத்தனை கேள்விகளுக்கும் விடை அளிக்கட்டும் காவல் துறை!

வரும் 19ஆம் தேதி என்ன நடக்கும். அச்சத்தில் சசிகலா?

      
னி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனய்யா ஓய்வுபெற்றதும் உற்சாக​மாகச் சொல்லிவந்த எதிர்த் தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் 'வருகிற 19-ம் தேதி என்ன நடக்குமோ?’ என சசிகலா கலக்கத்​தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பு வந்துவிடும் என்பதற்கு, கடந்த 10 மற்றும் 11-ம் தேதி பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் அரங்கேறிய‌ அதிரடிக் காட்சிக‌ளே அழுத்தமான சாட்சி.
கடந்த 10-ம் தேதி, நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் வழக்கம்போல கோர்ட்டுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பம் ஆனதும் சசிகலா மற்றும் சுதாகரன் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ''சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு படி கடந்த 21 நாட்கள் வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப்பார்த்தோம். எங்கள் தரப்பிடம் இருந்து தமிழக ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆவணங்களை(60 ஆயிரம் பக்கங்கள்), வழக்கில் பயன்படுத்தவில்லை. அவை வெறுமனே இந்த கோர்ட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கில் பயன்படுத்தாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் ஆவணங்களையோ அதன் பிரதிகளையோ எங்களுக்குத் திருப்பித்தர வேண்டும். எங்கள் கட்சிக்காரர் பதில் சொல்ல அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது'' என்றார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்.
''இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?'' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவிடம் நீதிபதி பாலகிருஷ்ணா கேட்​டார். ''1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கை, எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, இதுவரை 800-க்கும் மேற்பட்ட மனுக்களை எதிர்த் தரப்பில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்களின் நியாயத்தன்மையை ஆராய்ந்து ஸ்பெஷல் கோர்ட்டும், கர்நாடக ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பெரும்பாலான சமயங்களில் தள்ளுபடி செய்து இருக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனு போட்டு 'அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டதால், சுப்ரீம் கோர்ட் 21 நாட்கள் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனுவைக் காரணம் காட்டி புதிய மனுவைப் போடுகிறார்கள். இது வழக்கை இழுத்தடிக்கும் செயலே. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த ஆண்டு நான்கு நாட் கள் கோர்ட்டில் ஆஜராகி நீதி பதியின் 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் குற்றவாளியான சசிகலா, கடந்த 13 மாதங்களாக மீதி இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மனு மேல் மனு போட்டு வழக்கை நகரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்'' என்று கடுமையாக ஆட்சேபித்தார்.
இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''இந்த மனு மீதான தீர்ப்பை நாளை சொல்கிறேன். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், இரண்டாவது குற்றவாளியிடம் மீதி இருக்கும் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்'' என்றார். இதனால் ஷாக் ஆன வழக்கறிஞர்கள், உடனேசசிகலாவுக்குத் தகவலை பாஸ் செய்தனர். 'நாளைக்கு கோர்ட்டை அவாய்ட் பண்ண எதாவது சான்ஸ் இருக்கா?’ என்று சசிகலா கேட்க, 'இல்லம்மா... புது ஜட்ஜ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்’ என்றார்களாம். அதனால், மறு நாள் பெங்களூரு கோர்ட்டுக்கு வர முடிவு எடுத்தாராம் சசி.
உதவியாளர்கூட இல்லாமல் தனியாக‌ பெங்​களூருக்குக் கிளம்பிய சசி​கலாவுக்கு, கேபிடல் ஹோட்​டலில் எக்ஸிகியூட்டிவ் ரூம் தயாராக இருந்தது. காலை 10.45 மணிக்கு கறுப்பு இன்னோவாவில் கோர்ட்​டுக்குள் நுழைந்தார். கூலிங் கிளாஸ், ஹேண்ட் பேக், பேனா, பென்சில், பிளாஸ்க் சகிதம் வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் 11.30 மணிக்குத்தான் நீதிபதி பாலகிருஷ்ணா கேபினுக்குள் நுழைந்தார். சசிகலாவும் அவசர அவசரமாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். ஆனால், அரை மணி நேரத்துக்கு மேலாகியும் கோர்ட் ஹாலுக்கு நீதிபதி வரவில்லை. தனது அறையில் அமர்ந்தவாறு தீர்ப்பை டைப் செய்தாராம். சரியாக 12.35 மணிக்கு கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு 'வணக்கம்’ என கைகூப்பினார் சசிகலா. அவரைக் கவனிக்காத நீதிபதி, ''சசிகலா, சுதாகரன் தரப்பில் ஆவணங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன். வரும் 19-ம் தேதி இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ன் படி கேள்விகள் கேட்கப்படும். அன்றைக்கு நிச்சயம் அவர் ஆஜராக வேண்டும். குற்றவாளியின் பதில்களை மொழிபெயர்க்க ஏதுவாக மொழிபெயர்ப்பாளாரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்'' என்றார்.
கோர்ட்டை விட்டு வெளியேவந்த சசிகலாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லை. தன்னுடைய வழக்கறிஞரிடம் ஏதோ சீரியஸாகப் பேசிவிட்டு காரில் ஏறிச்சென்றார். ஏற்கெனவே, 532 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கும் சசிகலாவிடம் மீதி இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை நீதிபதி பாலகிருஷ்ணா கேட்க இருக்கிறாராம். இந்தக் கேள்விகள் அனைத்தும் முன்னாள் நீதிபதி மல்லி கார்ஜுனய்யா தயார் செய்துவிட்டுப் போனதாம்.
19-ம் தேதிக்கான தயாரிப்புகளில் இருக்கிறார் சசி!

தற்கொலைக்கு மருத்துவமனை மூத்த ஊழியர்கள் தான் காரணமா?

லண்டனில் தற்கொலை செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜெஸிந்தாவின் உடல், லண்டனிலிருந்து இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ஜெஸிந்தா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
முதல் கடிதத்தில், இளவரசி கேத் கர்ப்பமுற்ற நிலையில், மசக்கையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்ததையும், அவுஸ்திரேலிய ரேடியோ தொகுப்பாளர்கள் மெல் கிரேக், மிக்கேல் கிறிஸ்டியன் ஆகியோரின் தொலைபேசி அழைப்பால் தான் ஏமாற்றப்பட்ட வேதனை அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மற்றொரு கடிதத்தில், தான் பணியாற்றி வந்த மருத்துவமனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் பெயரால் வந்த தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த பின்னர், தன்னை தனது மூத்த அதிகாரிகள் நடத்தியவிதத்தால் ஏற்பட்டுள்ள வேதனையை உருக்கமாக விவரித்துள்ளார்.
மூன்றாவது கடிதத்தில், தனக்கு இந்தியாவில் உடுப்பி அருகேயுள்ள சுர்வேயில் இறுதிச்சடங்கு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்{காணொளி}