siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 27 ஏப்ரல், 2013

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு'''


இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில்,
 புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை.
 இந்நிலையில் எமது சம்பள உரிமை குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடன் பல நேரடி சந்திப்புக்களை மேற்கொண்டபோதிலும் வெறும் இழுத்தடிப்புகளே ஏற்பட்டது.
 இந்நிலையிலேயே புகையிரத ஊழியர் தொழிற்சங்கங்கள் பலவும் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பினை மேற்கொண்டு இறுதித் தீர்மானமொன்றை எடுத்தது. இதன் பிரகாரம் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரதங்களும் ஸ்தம்பிதமடையும்.
 தொடர்ந்தும் அரசாங்கத்தின் பேச்சை நம்பி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்: பொப் கார்

இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 இலங்கைக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை ..

..

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அங்கு தீயணைப்பு படையினரும், பொலிசாரும் இணைந்து இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இறந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 3 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு வெளியில் இருந்து தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் மட்டும் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வங்கதேசம் நேற்று ஒரு நாள் துக்க தினம் அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு தேசிய கொடி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன
 

தென்கொரியா அழைப்பை நிராகரித்த வடகொரியா .,


தென்கொரியா எல்லையில் அமைந்துள்ள கெசாங் என்ற தொழில் மையம் ஒன்றில் வடகொரியா மற்றும் தென்கொரியா இரண்டும் கூட்டாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழில் மையத்தில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் திகதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9ம் திகதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆனால் மீண்டும் அத்தொழில் மையத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது.
இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது
 

14 வயது மாணவியுடன் செக்ஸ் உறவு: ஆசிரியருக்கு ?


தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றிய அரவிந்த் மேனன்(25) என்பவர் தன்னிடம் படித்த 14 வயது மாணவியுடன் நட்பாக பழகி, செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவி அரவிந்தை விட்டு விலக நினைத்துள்ளாள். இதனால் அவர் அந்த பெண்ணுடன் உறவு கொண்ட ஆபாச காட்சிகளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் மீது கடந்த 2009ம் ஆண்டு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்பொழுது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவசண்முகம், மாணவியுடன் உறவு கொண்ட காட்சிகளை காணொளி எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக அரவிந்த்க்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரவிந்த் மீது மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

புதன், 24 ஏப்ரல், 2013

நிலஅதிர்வுகள்: அதிர்ச்சியில் உறைந்துள்ள ?,


சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக 1,300 முறை சின்னச் சின்னதாக அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணம் லுஷான் கவுன்டியில் யான் நகருக்கு அருகே 2 தினங்களுக்கு முன் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. 20 நொடிகள் வரை கட்டிடங்கள் அதிர்ந்தன.
தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீடுகளை இழந்து சாலையில் தங்கியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர், மின்சார சேவை முடங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிட்டது.
பலரை காணாததால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 11 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 960 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லுஷான் பகுதியில் இடிபாடுகளில் இருந்து 91 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சின்னச் சின்னதாக ஏற்படும் அதிர்வுகள் 1300 முறை பதிவாகியுள்ளது. இதில் சில அதிர்வுகள் 5.4 ரிக்டர் அளவு வரைகூட பதிவானது. இதனால் நேற்றும் மக்கள் பீதியுடனே காணப்பட்டனர்

அமைச்சருக்கு மர்ம பார்சல்: வடகொரியாவின் மிரட்டலா?


தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின்னுக்கு மர்மப் பொடியுடன் கூடிய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்-க்வான் ஜின்னுக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது.
அதில் வடகொரியாவுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்தும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு கடிதம் இருந்தது.
மேலும் அந்த மர்ம பார்சலில் சந்தேகத்துக்குரிய வகையில் வெண்ணிற பொடித் துகள்களும் இருந்தன.
அந்த பொடியில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆராய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பார்சல் அனுப்பப்படுவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் (திங்கள்கிழமை), கிம் க்வான்-ஜின்னின் அலுவலகத்துக்கு வெளியே அவருக்கும் தென்கொரிய அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வீசி எறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பகத்தில் போர்ப்பதற்றம் நிலவும் சூழ்நிலையில் எங்களை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றுமொரு முயற்சிதான் இந்தச் செயல் என தென்கொரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

குழந்தை வரம் வேண்டுமா? “லிப் டு லிப்” வாழைப்பழ வரம் தரும்???


குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சி அளிக்கிறார் சாமியார் ஒருவர்.
கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள சாமியார் ஒருவர் குழந்தை வரம் தருகிறாராம்.
இதற்காக தன்னை நாடி வரும் பெண்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார்.
அதாவது சாமியாரிடம் வரும் பெண்கள், வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள்.
அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார்.
இந்த சேவைக்கு கவாள சேவை என்று பெயராம். குறிப்பாக இந்த வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானாம்.
ஆண்களுக்கு எலுமிச்சை கனியை வாயில் வைத்து சாமி துப்புவாராம், அதை ஆண்கள் துண்டில் கேட்ச் பிடிக்க வேண்டுமாம்
 

விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல் ??

கொடிய விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல்
கொடிய விஷம் கொண்ட காரில் கடத்தப்பட்ட 53 ராஜநாகங்கள் வியட்நாமில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ராஜ நாகங்கள் 5.5 மீட்டர் நீளம் வளரக்கூடியவை.
அதிக விஷம் உள்ள இந்த பாம்புகளை வியட்நாம் நாட்டினர் இறைச்சிக்காகவும், மருத்துவத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த வாரம் தலைநகர் ஹனோய் அருகே, சென்ற காரை பொலிசார் சோதனையிட்ட போது, அதில் 53 ராஜநாகங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜநாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
 

சனி, 20 ஏப்ரல், 2013

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடவுள்ள எலிசபெத்,.,


பிரிட்டன்  ராணி எலிசபத் தனது பிறந்த நாளை அரண்மனையில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.
ராணி எலிசபத்தின் சரியான பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21ம் திகதியாகும். ஆனால், அதிகார பூர்வமான பிறந்த நாள் யூன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தனது 87வது பிறந்த நாளை தனிப்பட்ட முறையிலான விழாவாக அரண்மனைக்குள் எளிமையாக கொண்டாட ராணி முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் இன்று அறிவித்துள்ளது.
நாளை(ஞாயிறு) நள்ளிரவு 12 மணியளவில் ராணியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் விண்ட்சர் கிரேட் பார்க் பகுதியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படுகின்றது.
இதே போல், ஹைடே பார்க் பகுதியில் 41 குண்டுகள் முழங்கவும் லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்கவும் ராணிக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது