siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீவிரவாதிகளுக்கு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் போர்ப் பயிற்சி!

 சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது �இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா� என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம்,...

சனி, 30 ஆகஸ்ட், 2014

பெருநட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்! விமான விபத்துக்களால்

இந்து சமுத்திரத்துக்கு மேலாகப் பறந்த வேளை, கடந்த மார்ச் மாதத்தில் விமானம் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பெரும் நிதி இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது. ஜூலையில் இரண்டாவது விமானம் ஒன்று யுக்ரெய்னில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, பயணத்துக்கான பதிவுகள் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததால், இந்த வருடத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் மேலும் இழப்பு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது....

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

குழந்தை பிறந்ததை 'ஆப்பிள்' ஸ்டைலில் விளம்பரமாக்கிய தந்தை

ஜேர்மனியில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் (Andreas Kleinke) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வலைத்தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன்...

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ரூபாய் ஒன்றரை கோடிக்கு விலைபோன ஆட்டுக்கிடா!

 ஆட்டு விந்துக்கு மவுசு பாருங்க!கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தினை குறைந்தபட்சம் 100 பவுண்டுகளுக்கு விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை...

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் (காணொளி)

அணு உலை நிலையங்களை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக இஸ்ரேல் வேவு பார்த்தும் வருகின்றது. இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் நட்டன்ஸ்...

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

எரிமலை வெடிக்கலாம் என்பதால் மக்கள் வெளியேற்றம்!

 ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான...

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார். அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க அரசு...

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

போதை வழக்கில் மகன்: வெட்கி தலைகுனிந்த ஜாக்கி சான்

பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி சான் (31), தைவான் சினிமா நடிகர் கெய் கோ (23) ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜெய்சி சான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜாக்கி...

புதன், 20 ஆகஸ்ட், 2014

அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை!

வீடியோ வெளியானதால் பரபரப்பு! ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால்...

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனிநாடாக பிரியக்கூடாது: அவுஸ்திரேலிய பிரதமர்

  ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து மக்கள் தனியாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு கோரும் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு பத்திரத்தில் சுதந்திர நாடாக மாறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் இல்லை என்ற வார்த்தைகள் மாத்திரமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம் என்ற புள்ளியிடலில் புள்ளியிட வேண்டாம் என அவுஸ்திரேலிய...

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலிய மருத்துவமனை மன்னிப்பு கோரியது.

    அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும்...

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தவறான கிரீன் சிக்னல்: பள்ளத்தில் பாய்ந்த மூதாட்டியின் கார்

ஜேர்மனியில் தவறான போக்குவரத்து விளக்கால் கார் நேருக்கு நேர் மோதியதில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜேர்மனியின் கொப்லென்ஸ் நகரில் சாலை ஒன்றில் போக்குவரத்து விளக்கு தவறாக காட்டியுள்ளது. இரு சாலையில் மத்தியில் இருந்த இந்த விளக்கு, இரு சாலையினருக்கும் பச்சை விளக்கு காட்டியதால் 72 வயது மூதாட்டி ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ஏதிரே வந்த காரில் இருந்த 46 வயது நபர் தனது காரை திருப்ப முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது....

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முதியவரின் திருட்டுத்தனம் அம்பலம்

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் பழமை வாய்ந்த பொருட்களை திருடி விற்ற குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயது மது தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பொலிசார் அவரது காரினை சோதனை நடத்தியதில், 112 ரோமன் நாணயங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும், பொலிசார் இவர் வீட்டை சோதனை செய்த போது, பழமை வாய்ந்த நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உரிமம்...

சனி, 9 ஆகஸ்ட், 2014

பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் அறிமுகம்!

 இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய அறிமுகத்தின்படி வீசாவுக்காக ஆவணங்களை சமர்ப்பிப்போர் வீசா தயாரிப்பு நடைபெறும் பெரும்பாலான காலத்தில் தமது கடவுச்சீட்டை...

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பார்க்கும் பெண்களை எல்லாம் கொன்று குவிக்கும் மர்ம நபர்

பிரேசிலில் மர்ம நபர் ஒருவர்  கண்ணில் பட்ட  பெண்களை எல்லாம் கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் கொயானியா நகரத்தில் மர்ம நபர் ஒருவன் பெண்களை தேடி தேடி கொலை செய்து வருகிறான். மோட்டார் சைக்களில் உலா வரும் அந்நபர் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதுவரை 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்ட 12 பெண்களை கொலை செய்துள்ள அவன், கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கொலை...

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முடிவை உக்ரைன் எடுத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புத்தின் அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரிவினை மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியத்தில் ஒன்றான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது. உக்ரைனின் இன்னும் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்...

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரக்கமற்ற பெற்றோர்: மரணத்தின் பிடியில் குழந்தை (காணொளி, )

வாடகைத் தாய் மூலம் பெற்ற தமது பிள்ளையை, அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று வாடகைத் தாய் ஒன்றின் மூலம் பிள்ளையை  பெற்றெடுக்க முடிவு செய்தனர். இவர்மூலம் பிறந்த ஆரோக்கியமான பிள்ளையை எடுத்துக் கொண்டு, நோயாளிப் பிள்ளையை விட்டுச் சென்றுள்ளனர். தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய பட்டாராமன் சனுபா என்ற பெண்மணியே இந்தப் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம்...