| 09.08.2012. | |||||
|
வவுனியா சிறையில் இடம்பெற்ற
அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட
மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை
சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த மரியதாஸ் நேவிஸ்
டெல்றொக்ஷன் (வயது 36, இதுவரை இவரது பெயர் டில்ருக்ஷன் என்றே ஊடகங்களில் வெளியாகி
வந்தது) என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்தார். நேற்றுக் காலை டெல்றொக்ஷனின் தந்தையும்
தாயும் ராகம வைத்தியசாலையில் உள்ள மகனைப் பார்வையிடுவதற்கான அனுமதியைப்
பெற்றுக்கொள்வதற்காக மகர சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் உயிரிழந்த விடயம்
அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா சிறையில் நடந்த கொடூரமான தாக்குதல்
காரணமாக கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேஸ்
நிமலரூபன் (வயது 28) என்ற கைதி மரணமான நிலையில் தற்போது டெல்றொக்ஷனும்
உயிரிழந்துள்ளமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை
ஆர்வலர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி வவுனியா
சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி
சிறைக் காவலர்கள் மூவரைத் தடுத்து வைத்தனர். கைதிகளிடமிருந்து சிறைக் காவலர்களை
மீட்பதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால்
சிறைக்காவலர்கள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது தமிழ் அரசியல் கைதிகள்
மீது மிக மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல கைதிகள் கடுமையான
காயங்களுக்கு உள்ளாகினார்கள்.
அதில் ஏற்கனவே உயிரிழந்த நிமலரூபன், நேற்று
உயிரிழந்த டெல்றொக்ஷன் ஆகியோரும் அடங்குவர். சிறைச்சாலை அசம்பாவிதங்களை அடுத்து
அன்றைய தினமே தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கும்
மேசமாகத் தாக்கப்பட்ட அவர்கள் கொழும்பு மகர சிறைச்சாலைக்கும், கண்டி போகம்பரை
சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு மகர சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளுள்
ஒருவரான டெல்றொக்ஷன் கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் 38 நாள்களின் பின்னர்
நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
ராகம வைத்தியசாலைக்கு மகனை பார்வையிடச் சென்ற
தந்தையார் மரியதாஸ் உதயனுக்குத் தெரிவிக்கையில், ராகம வைத்தியசாலையில் உள்ள எனது
மகனைப் பார்வையிடுவதற்காக நானும் எனது மனைவியும் நேற்று அங்கு சென்றோம். மகர
சிறைச்சாலைக்கு சென்று மகனைப் பார்வையிட அனுமதி பெறவேண்டும்.
அதற்காக நேற்று காலை 9 மணிக்கு அங்கு சென்றேன்.
அப்போது அங்கிருந்த சிறை அதிகாரி எனது மகன் உயிரிழந்த விடயத்தை என்னிடம் கூறினார்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாகச் சிறை அதிகாரி கூறினார்.
இதன் பின்னர் நேற்று மாலை நீதிபதியுடன் சென்று
எனது மகனின் சடலத்தைப் பார்வையிட்டேன். அவரது சடலம் ஐஸ் பெட்டி ஒன்றில்
வைக்கப்பட்டிருந்தது. மகனின் சடலத்தை நாளை மதியம் (இன்று) தருவதாக அங்கு அதிகாரிகள்
என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
இறுதிச் சடங்குகளுக்காக மகனின் சடலம் இன்று
யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படும் எனவும் மரியதாஸ் கூறினார்.
| |||||
| |||||
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்
சுதந்திரதினத்தன்று தாண்டவம் ஆடியோ ரிலீஸ்!
09.08.2012.
கறுப்பின வாலிபருடன் உறவு வைத்திருந்த மகளை தாக்கிய பெற்றோருக்கு சிறை
இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது,
வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17).
ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
நெகுபே கறுப்பினத்தைச் சேர்ந்தவர்.
இதன்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதேவேளை அங்கு வந்த ஜேனின் பெற்றோர் தங்களது மகள் நிர்வாண நிலையில் தனது காதலருடன் இருப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளனர்.
இதையடுத்து தந்தை டேவிட், கோபத்துடன் மகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்துள்ளார். தாயாரும் சேர்ந்து அடித்துள்ளார். இதைத் தடுக்க வந்த அல்போன்ஸையும் டேவிட் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.
கறுப்பினத்தவருடன் உறவு வைத்து குடும்பக் கெளரவத்தைக் கெடுத்து விட்டாயே என்றும் ஜேனை திட்டியுள்ளார் டேவிட். நெகுபேயைப் பார்த்தும் இனவெறி கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பெற்றோர் கோபமாக இருந்ததால் ஜேன் வீட்டை விட்டு வெளியேறி தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் டேவிட்டும், அவரது மனைவியும் மகளிடம் நெகுபேயை தொடர்ந்து சந்திக்கிறாயா? என கேட்டுள்ளனர்.
அதற்கு ஜேன் ஆம் என்று கூறவே கோபமடைந்த பெற்றோர் மீண்டும் அவரை அடித்துள்ளனர். இதில் ஜேனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து டேவிட் மற்றும் அவரது மனைவி மீது பொலிஸா வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் தம்பதியரின் செயலையும், நெகுபே குறித்து இனவெறி கருத்துக்களைக் கூறியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர்களின் செயல் இழிவானது என விமர்சித்த நீதிபதி, டேவிட் செம்பியனுக்கு 12 மாத சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 9 மாத சிறைத் தண்டனையும் விதித்தார்
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்
o
09.08.2012.
அதிக வரி அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் சிலர் இணைந்து
கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது
விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கை, ஹொங்கொங், பேங்கொக், சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த
சுமார் 50 க்கும் அதிகமானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய
வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்
இதன்காரணமாக விமான நிலைய மற்றும் சுங்கத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக
எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
தாம் கொண்டு வரும் பொருட்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன்,
அதிகப்படியான வரி அறவிடப்படுகின்றமையே ஆர்ப்பாட்டத்திற்கான காரணமெனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
சுல்தான் தி வாரியருக்காக காத்திருக்கிறேன்: விஜயலட்சுமி
| 09.08.2012. |
|
தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும்
இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. சென்னை 60028, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற விஜயலட்சுமி தற்போது 'வனயுத்தம்' படத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கபடி பெண்கள் மத்தியில் கலகலவென பேச ஆரம்பித்த விஜயலட்சுமியை விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் வீராங்கனைகள். ரஜினியுடன் சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்தது பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் சீக்ரெட். சொல்ல மாட்டேன் என்று நழுவினார் விஜயலட்சுமி. அந்த படம் எப்போது வரும்? இன்னும் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கு என்று விடாமல் கேள்வி கேட்ட கபடி வீராங்கனைகளிடம் ஒருவழியாக சரணடைந்தார் விஜயலட்சுமி. நான் ரஜினி அவர்களோடு பக்கத்தில் நின்றதே பெரிய பாக்யமாக கருதுகிறேன். அவரோடு சில நாட்கள் நடிக்கவும் செய்திருக்கிறேன் என்றால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்? மீண்டும் அழைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காகதான் நானும் காத்திருக்கிறேன் என்றார் விஜயலட்சுமி. இதற்கு முன்பு இதே போன்றதொரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியை கபடி ஆடச்சொல்லி அதில் வெற்றியும் கண்ட கபடிப் பெண்கள், விஜயலட்சுமியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? வலுக்கட்டாயமாக அவரை கபடி ஆட அழைத்தார்கள். கூந்தலை ஒதுக்கிக் கொண்டு கூலிங்கிளாசையும் இறுக்கி அணிந்து கொண்டு களத்தில் குதித்த விஜயலட்சுமியை அத்தனைபேரும் சேர்ந்து பிடித்து அமுக்க, அழாத குறையாக அவுட் ஆனார் அவர். ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படிதான் மானத்தை வாங்கறதா என்று செல்லமாக அவர்களிடம் கோபிக்கவும் செய்தார் விஜயலட்சுமி. நடிகர் கார்த்தி, விவேக், அஞ்சலி, கஸ்தூரி, என்று திரையுலகம் சார்பில் கபடிக்காக ஒத்துழைப்பு கொடுத்து வரும் இவர்களை கபடி வீரர்களும் வீராங்கனைகளும் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட இந்த கலக்கல் கபடி கே.பி.எல் நிகழ்ச்சியின் சிறப்பு முன்னோட்டம் ஓகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினந்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த போட்டி, தொடர் நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும், ஞாயிறன்று மதியம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையிலும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. |
இணையத்தைக் கலக்கும் ஹிலரியின் நடனக் காணொளி
09.08.2012.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது
இணையத்தைக் கலக்கி வருகின்றது.
தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட
இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார்.
அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள்
பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார்.
இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே
இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை
குறிப்பிடத்தக்கது.
'வை திஸ் கொல வெறி" : சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
09.08.2012.
சுகாதார அமைச்சுக்கு முன்பாக வை திஸ் கொலவெறி என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு
சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் பல ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை
முன்னெடுத்தன.
சுகாதாரத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஓய்வு பெற்ற முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் அமர்த்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றமை பாரதூரமான குற்றமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
சுகாதாரத் துறையில் தொடர்ந்து இடம்பெற்ற சில ஊழல் மோசடிகள் குறித்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அவர் ஏன் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி விசாரணைக்குழுவினரால் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினர்.
எனவே சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக தகுதியுடைய ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு சுகாதாரத் துறையின் ஊழல்களுக்கு எதிரான ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

2008 முதல் 2011 வரையில் 2,48,492 தாய்மார் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்
09.08.2012.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்பெண்களாக நான்கு இலட்சத்து
51 ஆயிரத்து 897 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இவர்களில் இரண்டு
இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார் ௭னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஊக்குவிப்பு நலனோம்பு அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.தே.க. ௭ம்.பி. அஜித் பி. பெரேராவினால் ௭ழுப்பப்பட்ட பிரேரணைக்கு சபையில் சமர்ப்பிக்கபட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 2008இல் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேரில் 40 ஆயிரத்து 665 தாய்மாரும் 2009 இல் சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பணிப்பெண்களில் 60 ஆயிரத்து 448 தாய்மாரும் உள்ளடங்கியிருந்தனர்.
அதேபோன்று 2010 ஆண்டு பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 807 பேரில் 73 ஆயிரத்து 944 தாய்மாரும் 2011 இல் பணிப்பெண்களாக சென்ற ஒரு இலட்சத்து பதினோராயிரத்து 96 பேரில் 73 ஆயிரத்து 435 பேரில் தாய்மாரும் உள்ளடங்கியுள்ளனர். இதன் படி கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் இருந்து இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 தாய்மார் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட 58 நகரங்களில் மின் தடை
வெவ்வேறு நேரங்களில் அமுல் வெவ்வேறு நேரங்களில் அமுல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி திட்டத்தின் வேயாங்கொடை வரையிலான விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பினால் இன்று வியாழக்கிழமை கொழும்பு உட்பட 58 பிரதான நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வெவ்வேறு நேரங்களில் மேற்படி நகரங்களில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை அறிவித்துள்ளது. மேற்படி மின் விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் 300 மெகாவோட் மின்சாரம் செயலிழக்கப்பட்டிருப்பதே மின்சாரம் தடைப்படுவதற்கு காரணம் ௭ன்று தெரிவித்துள்ள மின்சார சபை, மின் விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் வகையில் விசேட பொறியியலாளர் குழுவொன்று திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் காலை 8.30 முதல் 10.45 மணிவரையிலும், 10.45 முதல் 1.00 மணிவரையிலும், 1 மணி முதல் 3.15 மணிவரையிலும் மற்றும் 3.15 முதல் 5.30 மணிவரையிலுமான வெவ்வேறு நேரங்களில் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு நகரங்களில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை தெரிவித்துள்ளது. ௭னினும் கொழும்பு நகரின் மின் தடை தொடர்பில் நேரம் ௭துவும் குறிப்பிடப்படவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)