siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நாடு முழுவதிலும் கட்டம் கட்டமாக மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும்



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012
 

நாடு முழுவதும் மீண்டும் கட்டம் கட்டமான மின்சார தடைகளை ஏற்படுத்தவிருப்பதாக இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையமானது, சீனாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக 400 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன.

தற்போது இரண்டாம் கட்ட பணிகள் 850 மில்லியன் டொலர்கள் செலவில் இடம்பெற்று வருகிறது. இந்த பணிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கண்காணிப்பிலேயே இடம்பெற்றது.

இதன் போது, இந்த நிலையகத்துக்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களுக்கு பதிலாக, சீனாவில் இருந்து இரண்டாம் தர உதுரி பாகங்கள் வரவழைக்கப்பட்டு பொறுத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பயன்பாடு உயர்வு



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,
 

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக தேசிய ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லேஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவிலியன்களைப் போன்றே பாதுகாப்புப் படையினருக்கும் இது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கென கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கிழக்கிலும் இதேபோன்றதொரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஆறுமாத காலப் பகுதியில் 62 சிறார்கள் துஸ்பிரயோகம்



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த முதல் ஆறுமாத காலப்பகுதிகளில் 62 சிறார்கள் வன்முறைகள் மற்று துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் புலனாகியுள்ளது.
இதில் பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு 22 சிறுவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு 13 சிறுவர்களும் உளரீதியான துஷ்பிரயோகத்துக்கு 2 சிறுவர்களும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கவனிப்பாரற்று 8 சிறுவர்களும், சட்டத்தை குழப்பிய 11 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நெருக்கீட்டுக்கு ஆளாகிய நிலையில் ஒரு சிறுவரும் மற்றும் ஒரு சிறுவர் தற்கொலை செய்ய முன்வந்துள்ளமை குறித்தும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இளவயதில் 4 சிறுவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் பிரகாரம் முதல் 7 மாத
காலப்பகுதிகளில் 81 பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை: மித்ரா

14.August 2012,
கிளாமர் வேடத்தை தவிர்ப்பதற்காக போனிலேயே இயக்குனர்களிடம் கதை கேட்கிறாராம் மித்ரா குரியன்.
காவலன் படத்தில் அசினுடன் நடித்தவர் மித்ரா குரியன்.
இது பற்றி நந்தனம் பட இயக்குனர் என்.சி.ஷியாமளன் கூறுகையில், சிங்கக்குட்டி படத்தில் நடித்த சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கும் படம் நந்தனம்.
அவருக்கு ஜோடியாக நடிக்க அடக்கமான இமேஜ் உள்ள கதாநாயகி தேவைப்பட்டார். காவலன் படத்தில் நடித்த மித்ரா குரியன் பொருத்தமாக இருந்தார்.
அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிக்க கேட்ட போது, கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை. நந்தனம் கதையை போனிலேயே சொல்லுங்கள் என்றார்.
இது கிளாமர் வேடமில்லை. ஜீவனுள்ள கதாபாத்திரம். போனில் சொன்னால் விளக்கமாக சொல்ல முடியாது. நேரில்தான் கதாபாத்திரத்தை விவரிக்க முடியும் என்றேன்.
ஒப்புக்கொண்டார், பிறகு நேரில் கொச்சி சென்று கதை சொன்னேன். கதாபாத்திரத்தை கேட்டவுடன், எவ்வளவு நாள் கால்ஷீட் வேண்டும் என்று உடனே ஒப்புக் கொண்டார் என்று தெரிவித்தார்.
நேரில் சந்தித்து கதை கேட்டு, கிளாமர் வேடமாக இருப்பதால் மறுப்பதைவிட போனிலேயே கதை கேட்டு பிடிக்கா விட்டால் நோ சொல்லி விடுவது பெஸ்ட் என்ற தனது பாலிசி பற்றி கூறுகிறார்.
காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது

சிறீலங்காவில் நடந்தது இறுதிப்போர் அல்ல இனப்படுகொலை!!--காலநிதி விக்கிரமபாகு


14.08.2012..

சிறீலங்காவில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என டெசோ மாநாட்டில் உண்மையை துணிந்து
 உரைத்த சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உரையாற்றினார்.தொடர்ந்து உரையாற்ற தடைவிதிக்கப்பட்டது

நேற்று (12-08-2012) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள வை.எம.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறீலங்காவில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம். வடக்குக் கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி. ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை நிச்சயமாக உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

டெசோ மாநாட்டிற்காக சிறீலங்காவிலிந்து சென்ற ஒரே ஒரு தலைவர் சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது குறிப்பிடத்தக்கது

டுபாயில் உள்ள கடையில் மடிக்கணணிகள் அபேஸ்: மாட்டிக்கொண்டன் இலங்கையர் !

14.08.2012.டுபாய், ஜீமெய்றாவிலுள்ள மருந்து கடையொன்றினுள் களவாக நுழைந்து மூன்று மடிக்கணினிகளை திருடியதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் டுபாய் குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். மேற்படி மருந்து கடையில் பணிபுரிந்து வந்தவர்களே இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது இரண்டு பாதுகாப்பு பெட்டகங்களை பழுதாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் மடிக்கணினிகளை விற்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். வேறு கடைகளில் பல களவுகளை செய்துள்ளதாக இவர் கூறியுள்ளார். இவ் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டின் எல்லையை தாண்டி விட்டது: சம்பந்தன்

14.08.2012.மாகாண சபை முறைமையை சரியான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாஇஷகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவது தொடர்பான நடவடிக்கை நாட்டின் எல்லையை தாண்டி சர்வதேசத்தின் பார்வைக்கு சென்று விட்டது" என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முறையான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டிய பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை, உவர்மலை குமணன் விளையாட்டு கழக மைதானத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சனிக்கிழமை மாலை நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களில் தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயாட்சியுடனான அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இன்னும் இருக்கின்றார்களா என்பதை நாடி பிடித்து பார்க்க சர்வதேச சமூகம் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் எமக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றது. எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் 95 சதவீதமான தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தனிப்பெரும் கட்சியாக தெரிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் உரிமை போராட்டத்தில் இன்னும் உறுதிதயாகவும் வைராக்கியத்துடனும் இருக்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் நடத்தி வருகின்ற உரிமை போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலின் முடிவு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமைய போகின்றது என்பதை தமிழ் மக்கள் மனதிலிருத்தி செயற்பட வேண்டும்: என்றார். திருகோணமலை நகர சபை உறுப்பினர் கோ.சத்தியசீலராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் உரையாற்றினர்.

கூகுளின் தலைமை அலுவலகம் (வீடியோ இணைப்பு)

14.08.2012.இன்றைய இணையவுலகில் கூகுளால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கூகுள் தன்னகத்தே பிளாக்கர், யூடியூப், பிக்காச, ஜிமெயில் இது போன்று பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது.
நாம் அனைவரும் ஒரே கூகுள் கணக்கு மட்டும் வைத்து கொண்டு இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது.
google என்னும் இந்த சொல் GOOGOL என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.
கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும்.
அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination” என்று குறிப்பிட்டுள்ளார். Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது.
அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான். ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜியம் வருவது.
இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

       

இசையுடன் இணைந்த புகைப்பட ஆல்பம்: வணக்கம் சுவிஸ் (வீடியோ இணைப்பு)

14.08.2012.சுவிஸ் – டென்மார்க் கலைஞர்கள் இணைந்து நடாத்திய வணக்கம் சுவிஸ் நிகழ்வின் புகைப்பட ஆல்பம் இசையுடன் இணைத்துத் தரப்படுகிறது.

       

 

உடம்பை முறுக்கேற்றும் அஜித் – ரசிகர்கள் புகழாரம்! (வீடியோ இணைப்பு)

14.08.2012ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்தாலும், சுமாரான படம் என்ற பேச்சே பலரிடம் வெளிப்பட்டது. இந்த படத்தை இயக்க இருந்தவர் அஜித்துக்கு பில்லா என்ற அல்டிமேட் ஹிட் படத்தை கொடுத்த விஷ்ணுவர்தன் தான். ஆனால் பல தயாரிப்பு சிக்கல்களால் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கினார்.
இப்போது அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்கி வருகிறார். எப்போதும் போலவே அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் வளர்த்து வருகிறது அஜித் நடிக்கும் அடுத்த படம். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். அஜித்துடன் சேர்ந்து ஆர்யாவும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம் தான் தமிழ்த் திரையுலகில் ஆர்யாவுக்கு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல அறுவை சிகிச்சைகளை தன் உடம்பு கண்டிருப்பதால், உடற்பயிர்ச்சிகளில் ஆர்வம் இல்லாம் வந்தார் அஜித். படத்தில் அவர் ஆடும் போது, அவரின் தொப்பையும் சேர்ந்து ஆடுகிறது என்று பலரும் கமெண்ட் அடிக்க அது வசதியாக இருந்தது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் உடற்பயிர்ச்சிகள் மேற்கொண்டு கட்டுமஸ்தான உடலுக்கு மாறி இருக்கிறார் அஜித்.
இணைய தளங்களில் தல ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.