siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 ஜூன், 2013

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள்!!:

அதிர்ச்சியில் சிறிலங்கா படையினர்,விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
  போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்தார்.
  இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன

கழிப்பறை நிறுவனங்களுக்கு விருது வழங்கிய பிரான்ஸ் ,,


சுகாதாரமான கட்டண கழிப்பறைகளை அமைக்கும் சுலப் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்குக்கு பிரான்ஸ் நாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது.
எளிதில் கட்டமைக்கும் வகையில், கட்டண கழிப்பறைகளை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தியவர், சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்.
இந்தியாவில், இவர் ஏற்படுத்திய கழிப்பறை புரட்சியை பாராட்டிய பிரான்ஸ் அரசு, லெஜண்ட் ஆப் பிளானட் என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம், நடந்த விழாவில் துணை ஜனாதிபதி சான்டல் ஜுர்டான் இந்த விருதை பிந்தேஷ்வருக்கு வழங்கினார்
 

ஊழியர்களுக்கு பிரித்தானியா 18 மில்லியன் பவுண்ட்


வங்கதேசத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு 18 மில்லியன் பவுண்ட் நிதி உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா என்ற ஆடைத் தொழிற்சாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 1100க்கும் அதிகமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து பிரித்தானியா இதனைக் கூறியுள்ளது.
இந்த சம்பவம் அனுபவமான ஒர் விடயம் எனவும் வங்கதேசத்தில் பாதுகாப்புத் தரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த விபத்து உலகில் மிகவும் மோசமான கைத்தொழில் விபத்தாக பதிவாகியுள்ளதுடன், சர்வதேச ரீதியில் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் 1130 பேர் பலியானதுடன், சுமார் 2500 பேர் காயமடைந்திருந்தனர்.
 

செவ்வாய், 4 ஜூன், 2013

பரிசோதனைக்கு சென்ற ஆண், பெண்ணாக இருந்தது

 
ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் 66 வயதான ஆதரவற்ற ஒருவர், தன்னுடைய வயிறு பெருத்து வருவது குறித்து சந்தேகப்பட்டு மருத்துவரிடம் சென்றார்.
பரிசோதனையின் போது பெண்ணுக்கு அமைந்திருக்கும் கருப்பை அவருக்கும் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கருப்பையில்  கட்டி வளர்ந்ததால் அவரது வயிறு பெரிதாக  மாறியது தெரிய வந்தது.
அவருக்கு இரண்டு மரபணுக்களும் இணைந்து காணப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்று மொத்தம் ஆறு பேர் தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்குரிய டர்னர் என்ற நோய்க்குறி இருந்ததால் அவருக்கு குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டு கருப்பை சிறியதாக மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டது. எனினும் சிறுநீரகச் சுரப்பி பெரியதாகவும், ஆணுக்குரிய ஹார்மோன்களும் இருந்ததால் தாடி வளர்ச்சியும், சிறிய ஆண் குறியும் இருந்துள்ளது. அதனால் இதுவரை  அவரை ஆண் மகனாகக் காட்டியுள்ளது.
இந்தக் கட்டி வந்திருக்காவிட்டால், அவரின் புதிரான இந்த உடலமைப்பு வெளியில் தெரிந்திருக்காது என்று திங்கள் அன்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வியட்நாமில் பிறந்த அந்த சீன தேசத்தவர், ஆணுக்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆணாகவே இருக்கப் போவதாக மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது
 

ரயில் பாதையில் காணப்பட்ட 2ம் உலகப்போர் குண்டினால் 1 லட்சம் பயணிகள் தவிப்பு

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பரபரப்பாக இயங்கப்பட்டு வரும் ரயில் பாதை அருகே 40 செ.மீற்றர் நீளமுடைய ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்ற பொழுது இக்குண்டினைக் கண்டுபிடித்தனர். உடனே வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு அங்கு வரவழைக்கப்பட்டு, குண்டு கிடந்த இடத்தை சுற்றி மக்களோ அல்லது எந்தவித நடவடிக்கைகளும் செயல்படாதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த குண்டை செயல் இழக்கச் செய்தனர். இதனால் 150 ரயில்கள் இயங்கும் பரபரப்பான அந்த பாதையில் ரயில்கள் ஏதும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் இம்பீரியல் ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

திங்கள், 3 ஜூன், 2013

அம்பலமாகிய கள்ளத் தொடர்பு!


 பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என நிரூபணமானது.
எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப் பெண் கூறியுள்ளார்.
விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு


  எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ ஊர்தியை அங்கு கொண்டு செல்லும் அரை பில்லியன் கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிக காலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவுபடுத்துவதற்கு போதுமான உந்து சக்திக்கான தொழில்நுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்?


 இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதிகள் இவரது பிடியிலிருந்து தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பொலிஸார் இந்த நபரைக் கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இந்நபர் சிங்ப்பூரிலிருந்து இலங்கை வர முயற்சித்தபோது சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு: பொலிசார் தீவிர தேடுதல்,



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிச் மாநகர் காவல்துறையும், மாநிலக் காவல்துறையும் இணைந்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரு கொலைகாரனை வலைவீசித் தேடி வருகின்றது.
கடந்த வியாழனன்று பிற்பகல் மூன்று மணியளவில் பிராயர்டிராஸ் தெருவில் உள்ள 37ம் எண் உடைய வீட்டில் ஒருவன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு துருக்கியரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
குண்டுகாயத்துடன் இருந்த இருவரையும், பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்று உடலில் புகுந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இருவரும் அபாய நிலையிலிருந்து தப்பித்துவிட்டனர் என்று மாநகர் பொலிஸ் தகவல் தொடர்பாளி மார்கோ கோர்டெஸி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
 

கஞ்சா புகைப்பவருக்கு அபராதம் மட்டுமே?


சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை.
சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி அன்று நாடாளுமன்றத்தின் மேலவையும், மக்களவையும் அனுமதி அளித்துள்ளன.
பத்து கிராம் அல்லது அதற்கும் குறைவான கஞ்சா வைத்திருப்பவருக்கு இந்த உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் மற்றும் நீதித்துறையினரின் வேலைப்பளு கனிசமாகக் குறைகிறது. மேலும் சுவிட்சர்லாந்தில் மாநிலத்திற்கு, மாநிலம் இச்சட்டங்கள் மாறுபடுகின்றன.
ஃபிரிபோர்க் மாநிலத்தில் 10 கிராம் கனாபீஸ் வைத்திருந்தால் ஐம்பது ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும். அதுவே டிசினோ மாநிலத்தில் மூவாயிரம் ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது