siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 20 ஜூன், 2013

யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா


தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிசா மேயர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மே மாதத்துக்கு முந்தைய 6 மாதத்தில் மட்டும் மொத்தம் 13,000 கோரிக்கைகள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பேஸ்புக், மைக்ரோசாப்ட், அப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து வந்த கோரிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

கடந்த ஆண்டில் மட்டும் 80 இலட்சம் பேர்


அகதிகளாக இடம்பெயர்வு: ஐ.நா  தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது.
இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக், சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும், நீண்டகால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த புலம் பெயர்வுகள் அதிகரிப்பை காண்பிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது
 

புதன், 19 ஜூன், 2013

தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்-


 
பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ..விமான பயணத்துக்கு இடம் தரவில்லை. அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. ‘அப்பென்டிஸைட்டிசிஸ்’ எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார். மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார். 1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார். உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ரி. சரவணராஜா ஒருவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாவும் மற்றறொருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அடுத்த இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் கண்டி தர்மசிறி மாவத்தையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்களிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்


இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.
இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டடு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

வெள்ளி, 7 ஜூன், 2013

என் அப்பா இல்லையா? மனமுடைந்து தற்கொலை செய்த மகள்


மைக்கேல் ஜாக்சன் தனது தந்தை இல்லை என்று வெளியான செய்தியால் அவரது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்சனின் மகளான பாரிஸ் மிகவும் அழகானவர் மட்டுமல்ல, புத்திசாலியான பெண்ணும் கூட.
அவர் தற்கொலைக்கு முயன்றது ஜாக்சன் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.
பாரிஸ் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் அடித்துக் கொண்டிருந்த ஜாக்சன் குடும்பத்தினர் ஒன்றிணைந்துள்ளனர்.
அனைவரும் பாரிஸ் நலமுடன் திரும்புவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த பல மாதங்களாகவே பாரிஸ் மனதளவில் பெரும் உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தாராம்.
மேலும் தனது குடும்பத்தினருக்கிடையே நிலவி வந்த சொத்துப் பிரச்சினை, சட்ட போராட்டம் அவரை வெகுவாக பாதித்துள்ளது.
இந்நிலையில் தான் மைக்கேல் ஜாக்சனின் எந்தக் குழந்தையும் அவருக்குப் பிறந்ததில்லை என்ற தகவல்கள் வெளியாகி பாரிஸை பெரும் மன உளைச்சலில் தள்ளி விட்டது.
ஜாக்சன் எனது தந்தை இல்லையா என்று அவர் புலம்பி வந்தாராம். இதேபோல மேலும் பல விஷயங்களும் பாரிஸின் மன உளைச்சலுக்குக் காரணமாக காட்டப்படுகிறது.
இதனையடுத்தே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

.

வியாழன், 6 ஜூன், 2013

கல்லூரிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு


     
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில் அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின் படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள்; உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உடமைகள், பொருட்கள்; தீயில் கருகி சேதமாகியுள்ளதாக சிராஜிய்யா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் யூ.ஏ.மஜீத் (சிறாஜி) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதியில் தங்கி கற்றல்களை மேற்கொண்டு வந்த மாணவர்களுக்கு கடந்த 29.05.2013ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளமையால் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது தான் கல்லூரியில் இருக்கவில்லை எனவும் அதிகாலை 4 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து தான் ஸ்தலத்திற்குச் சென்று அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் உதவியுடனும் பொதுமக்களின் உதவியுடனும் தீ மேலும் பரவாமல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யார் மீதும் சந்தேகமில்லை எனவும் இது தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பெற்றோல் போத்தல்கள் காணப்படுவதுடன் பெற்றோலினாலேயே குறித்த விடுதியை இனந்தெரியாதவர்கள் எரித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அதிர்ச்சி""காணாமல் போன ஊடகவியலாளர் பிரான்ஸில்



காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 கார்ட்டுன் மற்றும் பத்தி எழுத்தாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ம் ஆண்டில் காணாமல் போயிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
 இதேவேளை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் எக்னெலிகொட வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 2ம் இணைப்பு
 எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கின்றத!–  சந்தியா எக்னெலிகொட
 காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டில் எக்னெலிகொட பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 இந்தத் தகவல் உண்மையென்றால் எக்னெலிகொடவை கண்டு பிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 எக்னெலிகொடவை கைது செய்வதற்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதம நீதியரசரும் எக்னெலிகொட எங்கிருக்கின்றார் என்பது பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், அந்தத் தகவல்கள் உண்மையென்றால் அவரை அழைத்து வர சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்

அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது - சர்வதேச !!


அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
 சீ.என்.என் இணைத்தளம் நேற்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவை வரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
 எனினும் இந்த விடயங்களில் இலங்கை இன்னும் பொறுப்புடைமையை காண்பிக்கவில்லை. இந்த நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
 எனவே மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில்,  இலங்கை மீது இந்த தருணத்திலேயே அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது,

புதன், 5 ஜூன், 2013

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள்!!:

அதிர்ச்சியில் சிறிலங்கா படையினர்,விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
  போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்தார்.
  இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன