siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 14 மார்ச், 2014

அரச குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கிய டயானா

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ”நியூஸ் ஆப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து உரிமையாளர் ரூபர்ட் முர்டோச் பத்திரிக்கையை மூடினார், தற்போது குற்றச்சாட்டின் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரச குடும்பத்தின் தொலைபேசி புத்தகத்தை பொலிசாருக்கு பணம் கொடுத்து பெற்றதாக முன்னாள் ஆசிரியர் கிளைவ் குட்மேன் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இளவரசர் சார்லசுடன் ஏற்பட்ட மோதலால் அரச குடும்பத் தொலைபேசி டைரக்டரியை பிரிட்டிஷ் பத்திரிகைக்கு இளவரசி டயானா தந்தார் என்று குட்மேன் தெரிவித்தார்.

தனது கணவர் இளவரசர் சார்லஸிடமிருந்து 1992ம் ஆண்டில் 11 ஆண்டுகால மணவாழ்வுக்குப் பின்னர் பிரிந்த இளவரசி டயானா, இந்தத் தொலைபேசி டைரக்டரியை தனது பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பினார் என்றும், அது தனது தபால் பெட்டியில் வந்து சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்.
இளவரசி டயானா அந்தக் காலகட்டத்தில் மிகவும் ஒரு குழப்பமான மனோநிலையில் இருந்தார் என்று கூறிய க்ளைவ் குட்மேன், தன்னைச் சுற்றிலும் இளவரசர் சார்லஸுக்கு நெருக்கமான ஆட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கருதியதாகக் கூறினார்.

தனது கணவரின் அலுவலகத்தில் இருந்த பணியாளார்களின் எண்ணிக்கையையும், தனது அலுவலகத்தில் மிகக்குறைவாக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தொலைபேசி டைரக்டரியை அனுப்பிய பின்னர், தன்னை தொலைபேசியில் அழைத்து, இப்புத்தகம் கிடைத்துவிட்டதா என்பதை டயானா சரிபார்த்துக்கொண்டார் என்றும் குட்மேன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புதன், 12 மார்ச், 2014

திருடிய ஓவியங்கள் ஒப்படைப்பு

  நாஜிக்களால் திருடப்பட்ட மூன்று ஓவியங்களை பிரான்ஸ், உரிய நபர்களிடம் ஒப்படைக்க உள்ளது.
பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள டிஜான் நகர அருங்காட்சியகத்தில் நாஜிக்களால் திருடப்பட்ட ஓவியங்கள் உள்ளன.

ஜேர்மானிய விநியோகஸ்தகர்களை சார்ந்த இந்த கலைப்படைப்புகளை, கடந்த 1935ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யூத பொருட்கள் ஏலத்தில் பிரான்ஸ்  வாங்கியுள்ளதாக தெரிகிறது.
எனவே இதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ஆவுரிலி பிலெப்பெட்டி தீர்மானித்துள்ளார்.
இதில் மலை இயற்கை ஓவியம், ஒரு பெண்ணின் சித்தரம் மற்றும் மாடோனாவும் குழந்தையும் உள்ளிட்ட மூன்று ஓவியங்கள் அடங்கும்.
இதுதவிர இதுவரையிலும் கைப்பற்றப்பட்ட மொத்தம் 70 கலைபொருட்களை, உரிமையார்களிடம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது.


செவ்வாய், 11 மார்ச், 2014

புகலிட கோரிக்கையாளர்:சித்திரவதைக்கு உள்ளான நேர்காணல் செய்ய மறுத்த


கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு உள்நாட்டு பொலிஸாரினால் பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளான இலங்கைப் புகலிட கோரிக்கையாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக கேபிள் தகவல் ஒன்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கன்பராவில் இருந்து கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இந்த கேபிள் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் விசாரணைகளில் குறுக்கீடு செய்தவதை தவிர்ப்பதற்காக சித்தரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் நபரிடம் நேர்காணலை நடத்தவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நலன்களுக்காக இலங்கையின் விசாரணைகளில் இருந்து தூர விலகி நிற்க வேண்டும். இதனால் நாம் அவரை சந்திக்கும் வாய்ப்பை விரும்பவில்லை.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் சிங்களவர்.

இலங்கையின் தடுப்பு காவலில் இருக்கும் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் புகலிட கோரிக்கையாளர்களின் வழக்குகள் ஆதாரமற்றது என இறுதியில் எழுப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளன நபர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக எவ்வாறு கண்டறியப்பட்டது என்பது தெளிவாகவில்லை என்றும் கொழும்பு ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 10 மார்ச், 2014

குழந்தைகளை உலுக்கிய குளோரின்

கனடாவில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கலக்கப்பட்ட குளோரினை சுவாசித்ததில் 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான குழந்தைகள் அப்பகுதியின் Carling Ave என்ற ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
ஹோட்டலின் நீச்சல்குளத்தில் அதிகளவில் குளோரின் இராசயனம் கலந்திருந்தது, இதனை சுவாசித்ததில் 54 பேர் பாதிப்படைந்தனர்.
இவர்களை காப்பாற்றும் பணியில் பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், துர்நாற்றமிக்க இரசாயனமான குளோரினை மிகுதியாக சுவாசித்ததால் வாந்தி மற்றும் சுவாசிமின்மையில் குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும், மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
                  

புதன், 5 மார்ச், 2014

திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ பிராந்திய பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், திருடர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெரியவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்நேரத்தில் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்கள் என்றும், இந்நிலையானது பல்வேறு இடங்களில் இருக்கின்றது எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுவரையிலும் கிட்டத்தட்ட 12 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகின்றது.
இதில் அனேகமான சம்பவங்கள் தனியாக வியாபார தலங்களுக்கு வருகின்ற நபர்களை குறிவைத்தே நடைபெறுகின்றது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருடவரும் நபர்கள், முதலில் தங்கள் மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசிபழகி பின் திருட்டை அரங்கேற்றுகின்றனர்.
அத்துடன் அவர் கள் தனியாக இல்லாது இருவாராகவோ அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகவோதான் இயங்குகின்றார்கள் எனவும், அவர்கள் முதியவர்களிடம் கொள்ளையிடுவது தமது தொழிலாகக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
பல தடவைகளில் போலியான தமது நகைகளைக் காட்டி மக்களிடமுள்ள தங்கத்தைக் களவாடியிருக்கின்றார்கள் எனவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 

தற்கொலை செய்யத் துடிக்கும் இராணுவ வீரர்கள்

அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான ரொனால்ட் கெஸ்லர் ராணுவத்தினரிடையே பெரும்பான்மையாகக் காணப்பட்ட மனத்தளர்ச்சி பொதுமக்களைவிட ஐந்து சதவிகிதம் அதிகமாகவும், இடைப்பட்ட சமயங்களில் வெடிக்கும் தன்மை கொண்ட கோளாறு ஆறு மடங்கு அதிகமாகவும், மனஉளைச்சலுக்குப் பிந்தைய சீர்கேடு 15 சதவிகிதம் அதிகமாகவும் காணப்பட்டதாக ஹார்வர்ட் செய்தி ஒன்றில் மேற்கோள் காட்டியுள்ளார்.

தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களிலும் 25 வீதமானவர்கள் மன நோய் சோதனைகளில் சாதகமான முடிவையே பெற்றிருந்தார்கள். அதிலும் 11 சதவிகிதத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தததாக கெஸ்லரின் ஆய்வு குறிப்பிடுகின்றது.
தற்கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 14 வீதமானவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்துள்ளனர். 5.3 வீதமானவர்கள் தற்கொலை பற்றித் திட்டமிட்டுள்ளனர். 2.4 வீதமானவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
மொத்தத்தில் இந்த மூன்று அறிக்கைகளிலும் ராணுவம் மற்றும் மனநோய் பற்றி ஒரு குழப்பமான வெளியீடுகளே காணப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவத்தினரிடையே அதிகரித்துக் காணப்படும் தற்கொலை முயற்சிகளுக்கான விபரங்கள் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், தாங்கள் வெளியிட்டுள்ள இந்த விபரங்கள் ராணுவப் பணிக்கு வருவோருக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்
 

செவ்வாய், 4 மார்ச், 2014

கேபிளில் தீப்பிடித்ததே நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கு

ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு மின்சார கேபிள்களில் தீப்பிடித்ததே காரணம் என்று கப்பற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பற்படை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் 26-ம் தேதி சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பேட்டரி பகுதியில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், பேட்டரி பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பேட்டரி பகுதிக்கு மேல் உள்ள மின் கேபிள்களில் தீ பிடித்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 2 கப்பற்படை அதிகாரிகள் உயிரிழந்ததும், விபத்துக்குப் பொறுப்பேற்று கப்பற்படைத் தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி, தனது பதவியை ராஜிநாமா செய்ததும் நினைவுகூரத்தக்கது.

திங்கள், 3 மார்ச், 2014

அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் நேற்று மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரி அவர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமானம் தரையிறங்கும் இடத்தின் அருகே தயார்நிலையில் வைக்கப்பட்டன. அதன் பின்னர் விமானம் பத்திரமாக 2.20 மணிக்கு அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிய பின்னர் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன.
 

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.19 லட்சம் கோடி

அமெரிக்காவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கான திட்டப் பணிகளுக்கு 30,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.59 லட்சம் கோடி) அதிபர் ஒபாமா ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பின் நிலவும் அரசியல் மந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், செப்டம்பர் மாதம் காலாவதியாகவுள்ள தற்போதைய போக்குவரத்து நிதி மசோதாவுக்குப் பதிலாக இருக்கும்.

போக்குவரத்துக் கட்டமைப்புகளை வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நிதித் திட்டத்தை அறிவித்துள்ள ஒபாமா, குடியரசு கட்சி எம்.பி.க்களின் அவநம்பிக்கையில் இருந்து வெற்றி காண முடியும் என நம்புகிறார்.
இந்த நிதி தொடர்பான விவரங்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரியவரும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 2 உயர் அதிகாரிகள்

 மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்தனர்.

அப்போது நீர்மூழ்கிக் கப்பலின் 3வது தளத்திலுள்ள வீரர்கள் தங்குமிடத்தில், திடீரென புகை பரவியது. இதனையடுத்து நீர்முழ்கியில் இருக்கும் அவசரகால தீயணைப்புக் கருவியை இயக்கி அந்தப் புகையை வீரர்கள் கட்டுப்படுத்தினர். இருப்பினும் புகையில் சிக்கி 7 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலமாக மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தின்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 2 அதிகாரிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. நீர்மூழ்கியில் உள்ள ஏதேனும் ஓரு அறையில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.