siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 31 டிசம்பர், 2012

இங்கிலாந்தின் மிகச் சிறிய மொடல் அழகன்

இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல் அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு போட்டி நடத்தப்பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தாமஸ்(வயது...

தமிழ் கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்புக்களை 90 ஆண்டுகள்

        கழித்து ஒப்புக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.  உலக பிரசித்தி பெற்ற இந்திய கணித மேதையும், தமிழருமான ராமானுஜம் 1920-ம் ஆண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பல கண்டுபிடிப்புகள், சூத்திரங்களை கண்டறிந்தார். இங்கிலாந்தை சேர்ந்த தனது வழிகாட்டியான கணிதமேதை ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி அவர் எழுதி இருந்தார். இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித...

வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு ரத்த உறைவு கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2009 ஜனவரி முதல் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரி ஆக உள்ளார். தற்போது, உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒபாமாவின் மந்திரி சபையில் மீண்டும் தொடர மறுத்துவிட்டார். எனவே, அடுத்த வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திடீரென மயங்கி விழுந்தார். வயிற்று வலி காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ...

மிகவும் நூதனமான முறையில் கணனிகளை கொள்ளையிட்ட பெண்?

எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பெண் கும்பல் கொள்ளையிட்டுள்ளது. மிகவும் நூதனமான முறையில் இந்தக் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் எல்.ஈ.டி. மற்றும் எல்.சீ.டி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொள்ளையிட்டுள்ளனர். கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள்...

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நல்லூர் ஆலயத்துக்கு முன் மகேஸ்வரனின் சகோதரர் மீது நேற்று அசிட்

             தாக்குதல் சம்பவம்!முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று...

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து டிசம்பர் 21ம் திகதி நான்கு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கச்சதீவு அருகே சென்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி உத்தரவுபடி 26ம் திகதி வரை தனியார் பள்ளியில்...

பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு பயிற்சி

பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் உயிரிழப்பை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை முழுமையாக காவல்துறையால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது. பொது மக்களின் ஆதரவும்...

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற் பயிற்சி

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது, நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன. மேலும்...

பயணிகள் விமானம் தீப்பிடித்தது: 4 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலியாயினர். ரஷியாவின் ரெட் விங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம், செக் குடியரசுக்குச் சென்றுவிட்டு பயணிகளை இறக்கிவிட்டு காலியாக வினுகோவா விமான நிலையத்துக்கு திரும்பியது. இறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி, சாலையையொட்டி நின்று உடைந்து தீப்பிடித்தது. வேறு எந்த வாகனம் மீது விமானம் மோதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது....

சனி, 29 டிசம்பர், 2012

இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?

இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர்...

அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம். புதின் அதிரடி

  ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் ஒன்று ரஷியாவில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி புதின் நேற்று கையெழுத்திட்டார். இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த தகவலை மாஸ்கோவிலுள்ள ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களை தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷியா தற்போது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது. ...

ஆங்சான் சூகி பயன்படுத்திய கம்பளி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

.   மியான்மர் எதிர்க்கட்சியின் தலைவர் ஆங்சான் சூகி. நாட்டில் ஜனநாயகம் வேண்டி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். எனவே அவர் சுமார் 18 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். சமீபத்தில் விடுதலையான இவர் தற்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் தனது கட்சி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி திட்டத்துக்காக நிதி திரட்டி வருகிறார். இதற்காக அவர் தனது கம்பளி ஆடையை ஏலத்தில்...

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார். இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை...

வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்

கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர்...

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. சுவிஸில்...

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்

  கனடாவில் வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க காத்திருக்கின்றனர். கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர். ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே...

கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு...

பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?

பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக...

சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:

சுவிஸ் சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது. முன்பு 5.3 மில்லியன்...

வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

சுவிட்சர்லாந்தில் இந்த கிறிஸ்துமஸில் வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த கிறிஸ்துமஸிற்காக சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1 முதல் 24 வரை 16 மில்லியன் பரிசுப்பொருட்களை பட்டுவாடா செய்துள்ளது. கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 15 மில்லியனாகவே இருந்தது. இந்த கூடுதல் ஒரு மில்லியன் பரிசுப்பொட்டலங்களும் வாட், துர்கா, சோலோதுன் மாநிலங்களுக்கே அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன. அதாவது, சாதாரண நாட்களில்...

அமெரிக்க மருந்து பொருட்களை இறக்குமதி செய்த ஈரானின்பெண்

மருந்து பொருட்கள் மீது விலை உயர்வு அறிவித்த ஈரான் பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அதிபராக முகமது அகமது நிஜாத் (55) உள்ளார். இவரதுஅமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக மெரீஷா வாஹில் தஸ்தர்டி உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரான இவர். நாட்டில் மருந்து பொருட்கள் மீது விலை உயர்வை அறிவித்தும், ‌2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கத்திய மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தும் உத்தரவிட்டார். இதற்கு நாடு...

வியாழன், 27 டிசம்பர், 2012

மத்திய அரசை வெளுத்து வாங்கிய ஜெயலலிதா. பிரதமர் அதிர்ச்சி.

  மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 10 நிமிட பேச்சு: கடந்த ஆண்டு நடைபெற்ற இதே கூட்டத்தில் தமிழக அரசு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைக் கூட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் மாநில...

பின்லேடனிமே ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பாகிஸ்தான் அரசு அதிகாரி.

சர்வதேச தீவிரவாத தலைவர்... அமெரிக்காவையே மிரட்டிய கும்பலின் மூலகர்த்தா... என்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மனிதரான ஒசாமா பின்லேடனிடமே, பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ரூ.50,000 லஞ்சம் பெற்றது, அவரது டைரி குறிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தேடி, அமெரிக்க ராணுவ...

மோசடி செய்த இந்தியருக்கு 45 ஆண்டுகள் தண்டனை?

அமெரிக்க பங்குச்சந்தை உள்வணிகத்தில் ஈடுபட்டதாககுற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியரும் ஹெட்ஜ் நிதிய மேலாளருமான மேத்யூ மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மர்டோமா மீது, நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வரும் ஜனவரி முதல் வாரம் வழக்கு தொடரப்பட்ட உள்ளது. அல்ஸீமர் எனப்படும் மறதி நோய்க்கு மருந்து தயாரிப்பு குறித்து டாக்டரின் அறிக்கையை அறிந்து கொண்டார் மர்டோமா. இதனால் ரூ.1,518 கோடி ஹெட்ஜ் நிதியம் நஷ்டமடையும் எனத்...

புதன், 26 டிசம்பர், 2012

குட்டி பாப்பா வேண்டும் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம்

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தம்பி, தங்கை மற்றும் அப்பாவை கேட்டதாக பிரிட்டன் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி குழந்தைகளை மகிழ்விப்பார். இந்நிலையில் பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் எதை பரிசாக கேட்பீர்கள்? என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது. மூன்று வயது முதல் 12 வயதுடைய சிறார்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதில் குழந்தைகள், யானை, குதிரை,...

செவ்வாய், 25 டிசம்பர், 2012

அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அன்பர்கள் நண்பர்கள்உறவு ஒன்றியங்கள் அனைவர்க்கும்எமது நத்தார் பண்டிகை நல் வாழ்த்துக்கள் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கின்றது உறவு இணையங்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் ...

திங்கள், 24 டிசம்பர், 2012

நுனாவத் விமான விபத்தில் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கனடாவில் ஹட்சன் வளைகுடாவில் உள்ள பெல்ச்சாத் தீவில் நுனாவத் என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் விசாரணை அதிகாரிகள் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். பெரிமீட்டர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பெல்ச்சார் தீவில் சானிகிலுக் என்ற இடத்தில் திடீரென்று தரையில் விழுந்தது. இதில் இரண்டு விமானிகளும் ஒரு குழந்தை உட்பட ஏழு பயணிகளும் இருந்தனர். குழந்தை தவிர மற்ற அனைவரும் உயிர் பிழைத்தனர் என்று விமான நிறுவனத்தின் தலைவர் மார்க்வெஹ்ர்லே...

மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு?

  பிரிட்டனில் செவிலியர் ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து பொலிசார் பரிசீலித்து வருகின்றனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா. அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர். அறிவிப்பாளர்களுக்கு,...

ஜெயிலில் இருக்கும் கொலைகாரனை காதலிக்கும்

சகோதரியை கொலை செய்தவனை, அர்ஜென்டினாவை சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவின், சான்டா குருஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டர் சிங்கோலானி. இதே பகுதியை சேர்ந்த மாடல் அழகி ஜொகானாவை கொலை செய்ததாக, 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.ஜொகானாவும், எடித் கசாஸ் இருவரும் இரட்டை சகோதரிகள். 2010ம் ஆண்டு, ஜூலை மாதம் ஜொகானா, படுகொலை செய்யப்பட்டார்.இதற்கிடையே, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டரை,...

குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு

            ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். எனினும், தமது கோரிக்கைக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்...

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்!

கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம் கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல் காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு...

அனர்த்த பிரதேசங்களைப் பார்வையிட்ட??

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பாலம் பெருக்கெடுத்து வீதி முற்றாக தடைப்பட்ட நிலையில் வாகரைப் பிரதேசத்தின் திருமலை எல்லை பகுதி வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த நிலையிலும், பொலநறுவை பாராக்கிரம சமூத்திரம் பெருக்கெடுத்து கதிரவளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, வாகரை, தட்டுமுனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, கண்டலடி, பால்ச்சேனை, பனிச்சங்கேணி, காயான்கேணி, இறாலோடை, ஆலங்குளம், மாங்கேணி, மாவடிஓடை, மதுரங்கேணிக்குளம்,...

ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி

இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு...

சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேர் சுட்டுக் கொலை

ஈரான் நாட்டு எல்லைக்குள் சட்ட விரோதமாக கடக்க முயன்ற 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலிருந்து வந்த 11 பேர் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றனர். அப்போது அப்பகுதியிலிருந்து மறைந்திருந்த மர்ம கும்பலொன்று 11 பேரையும் சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக...

வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உட்பட 9 பேர் பலி

பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாகிஸ்தானில் பேஷ்வார் மாகாணத்தின் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பேஷ்வார் மாகாண அமைச்சரும், அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவருமான பஷீர் பிலவ்ர் கலந்து கொண்டார். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்...