17.09.2012.By.Rajah.காதல் வைரஸ், நாளை, கிரிவலம், யுகா போன்ற படங்களில் நடித்த நடிகர் ரிச்சர்ட் கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார். |
இவர் அஜீத்தின் மனைவியான ஷாலினியின் சகோதரர். ரிச்சர்டுக்கும், மறைந்த கவிஞர்
கண்ணதாசன் பேத்தியுமான சத்யலட்சுமிக்கும் திருமணம் நடக்க உள்ளது. பல் மருத்துவரான இவர் பொன் மாலைப் பொழுது என்ற படத்தின் இணை தயாரிப்பாளர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ரிச்சர்ட்,சத்யலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் வரும் 23ஆம் திகதி சென்னையில் நடக்க உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும். இதுபற்றி ரிச்சர்ட் கூறுகையில், இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் இருவரது குடும்பமும் நீண்டகாலமாக நட்பாக பழகி வருகிறோம். சத்யலட்சுமி படங்கள் தயாரிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபடுவார். தற்போது ரெண்டாவது படம், கூத்து ஆகிய தமிழ் மற்றும் தேவதலு என்ற தெலுங்கு படத்திலும் நான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் |
திங்கள், 17 செப்டம்பர், 2012
கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார் ரிச்சர்ட்
திங்கள், செப்டம்பர் 17, 2012
செய்திகள்