17.09.2012.By.Rajah.ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறேன் என்பது சரியல்ல. இனிமேல் அவர் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்றார் விமல். |
களவாணி படத்தில் விமல் ஜோடியாக நடித்தார் ஓவியா. அடுத்து கலகலப்பு படத்திலும்
இணைந்த இந்த ஜோடி, தற்போது சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கின்றனர். இது பற்றி விமல் கூறுகையில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பார்கள். ஒருவருக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற கருவை மையமாக வைத்து படத்தை இயக்குகிறார் ரவிலல்லின். இதில் பிளஸ் 2 மாணவனாக நடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதால் 8 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டி இருந்தது. ஓவியா, தீபாஷா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பஸ்ஸே பஸ்ஸே என்ற ஒரு பாடலில் என்னை பாடும்படி இசை அமைப்பாளர் பைசல் கேட்டார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிலவரிகள் பாடினேன். ஓடியோவில் மட்டும் இது இடம்பெற்றிருக்கும். படத்தில் வேறு பாடகர்கள் பாடி உள்ளனர். ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறீர்களா? என்கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது. இந்த கிசுகிசுவை தவிர்க்க இனிமேல் அவருடன் ஜோடியாகவே நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அருகில் ஓவியா இருந்தார். விமலின் பதிலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஓவியா, சோகத்தில் மூழ்ந்தார், அவரது கண்களும் கலங்கின |
திங்கள், 17 செப்டம்பர், 2012
ஓவியாவை அழவைத்த விமல்
திங்கள், செப்டம்பர் 17, 2012
செய்திகள்