17.09.2012.By.Rajah.பாலிவுட் நடிகர், நடிகைககள் பொது இடங்களில் செல்லும் போது பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் வைத்துக் கொள்கின்றனர். |
சல்மானுக்கு இதுவரை 6
செக்யூரிட்டிகள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த ரம்ஜான் தினத்தன்று மும்பையில் உள்ள சல்மான் வீடு முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏக் தா டைகர் படத்துக்கு பிறகு சல்மானுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. தபங் 2 படப்பிடிப்பில் அவர் பங்கேற்க சென்றபோது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் சல்மானுக்கு கூடுதலாக செக்யூரிட்டி கார்டு வரவழைக்கப்பட்டனர். தற்போது 12 செக்யூரிட்டிகள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். பாலிவுட் நடிகர்களில் இவ்வளவு அதிக செக்யூரிட்டிகள் வேறு யாருக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது |
திங்கள், 17 செப்டம்பர், 2012
ரசிகர்கள் தொல்லை: சல்மானுக்கு கூடுதல் பாதுகாப்பு
திங்கள், செப்டம்பர் 17, 2012
செய்திகள்