17.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ
மாகாணத்தில் முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட படத்தை வெளியிட போவதாக
இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, ஏமன், எகிப்து, பங்களாதேஷ்,
ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவைகள் அனைத்தும் கனடாவில் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடைகளை ஏற்படுத்தாது என இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் இந்த படத்தின் முன்னோட்டத்தையும், இந்து, கிறிஸ்தவம், யூதசமயம் போன்ற மதங்களைக் காயப்படுத்துகின்ற படங்களின் சில பகுதிகளையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்து சமயத்தாரை புண்படுத்தும் காட்சிகள் பல படங்களில் வெளிவந்த போதும் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்கின்றனர். அந்த சகிப்புத்தன்மை மற்ற சமயத்தாருக்கும் வேண்டும் என்றார் |
திங்கள், 17 செப்டம்பர், 2012
முஸ்லிம்களுக்கு எதிரான படத்தை கனடாவில் வெளியிட முடிவு
திங்கள், செப்டம்பர் 17, 2012
இணைய செய்தி