siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 செப்டம்பர், 2012

அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்: ரொபேர்ட்டா பிளக்மென்

 
 
17.09.2012.By.Rajah.அபிவிருத்தி மற்றும் மீளமைப்பு தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ரொபேர்ட்டா பிளக்மென் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்ட அபிவிருத்திகள் மற்றும் மீளமைப்பு தொடர்பில், தெளிவாக விளக்கப்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த விடயத்தில் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறத்தியுள்ளார்.
அத்துடன் இன்னும் என்னென்ன விடயங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளன என்பதையும் அரசாங்கம் திறந்த மனதுடன் அறிவிக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசாங்கத்தினால் வழங்ககூடிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் அதிகபடியான இராணுவ பிரசன்னம் இருப்பதாக தாம் கருதவில்லை என்றும், எனினம் அங்குள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட்டு, மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் இதனை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்